Home / admin (page 2)

admin

தனியார் வங்கியில் தீ விபத்து!!

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (27) அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொஹுவெல பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் வங்கியின் முன்னாள் உள்ள பகுதியுத் ஏ.டி.எம் இயந்திரமும் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணமே விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களே இதுவரையில் …

Read More »

உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு!!

மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Read More »

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு 4 கோடி வழங்கியுள்ளது!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அனர்த்தத்தை எதிர்கொள்ளும் வகையில் கடந்த 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரையான இரண்டு வார காலப்பகுதி அனர்த்த வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் …

Read More »

ஹெரோயினுடன் மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது!!

அதுருகிரிய, முல்லேகம பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடம் இருந்து 560 மில்லிகிராம் ஹெரோயினுடன் ரிவேல்வர் ஒன்றும் மற்றவரிடம் 50 மில்லிகிராம் உள்ளடங்கிய 4 ஹெரோயின் பொக்கட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹோமாகம பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அதுருகிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை …

Read More »

240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்!

கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் இப்ராகிமுக்கு சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு …

Read More »

மக்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டி ஏற்படும்!!

கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்த புதிய பொருளாதார திட்டத்தினூடாக இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகள் இருந்தது போன்றே வழங்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். நேற்றைய (25) தினம் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இன்று மக்கள் வாழ்வதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் …

Read More »

ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து!!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலின் வசந்த மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் ஏற்றியிருந்த தீப்பந்தத்தில் இருந்து பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. சமயபுரம் கோயிலில் பாகனை யானை மிதித்து கொன்ற நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read More »

ஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு!!

ஐபிஎல் டி-20 போட்டியில் கொல்கத்தா , ஐதராபாத் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாகா 35 ரன்களும், தவான் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஷீத் கான் 10 பந்துகளில் 34 ரன்கள் …

Read More »

புதிய இராஜதந்திரிகள் ஐவர் நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்!!

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் ஐவர் தமது நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளித்தனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தைக் கூறியுள்ளது. மொசாம்பிக் நாட்டின் உயர்ஸ்தானிகரும் சுவீடன், பின்லாந்து, சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதுவர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு, 01- Mr. Ermindo Augusto Ferreira – மொசாம்பிக் …

Read More »

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு!!

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காமில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். கத்வானி என்ற இடத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது இந்திய பாதுகாப்பு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Read More »

மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 36) ஒருவரே உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது. உயிரிழந்த நபர் 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் முடித்தவர் என்றும் மூதூர் …

Read More »

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு இயந்திரங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!!

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (26) காலை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி இயந்திரங்களை நிறுத்துவதற்கு தீர்மானித்ததாக அந்த சபை கூறியுள்ளது. அதன்படி தற்போது முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தின் மூலம் மாத்திரம் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதனூடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு …

Read More »

போலி நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை!!

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. ஆனால், இப்படி சொல்லி ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடு இன்று ஒரு நம்பிக்கையற்ற கட்டத்தை அடைந்துள்ளது. புதிய அரசியலமைப்பு செயற்பாட்டின் பிரதான குழுவான வழிகாட்டல் குழு சும்மா கூடி கலையும் குழுவாக ஏறக்குறைய மாறி விட்டது. இதுவே இன்றைய உண்மை. இந்த உண்மைக்கு, புறம்பான போலி …

Read More »

‘நிபா’ பீதியில் கேரளா: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ‘நிபா’ என்றால் அதிகமாக யாருக்கும் தெரியாது. இப்போது ‘நிபா’ என்ற பெயரைக் கேட்டாலே கேரள மக்கள் அலறும் நிலை ஏற்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன் 1998ல் மலேசியாவில் தான் நிபா காய்ச்சல் முதன் முதலாக பரவியது. இதில் 105 பேர் பலியானார்கள். அப்போது பன்றிகள் மூலம் இக்காய்ச்சல் பரவியதாக கூறப்பட்டது. இதன் பிறகு ‘நிபா’வால் அதிகமாக வேறு எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது …

Read More »

எமது மாகாணத்தில் முடிவெடுக்கும் உரிமை எமக்கே உண்டு!!

எமது மாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு, அவற்றைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேட்டபோதே முதலமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் நடப்பவற்றிற்கு நாமே பொறுப்பானவர்கள். எமக்கு மற்றவர்கள் கூற வேண்டிய அவசியமில்லை. …

Read More »

மூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்!!

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். திருமணமாகாத அவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் …

Read More »

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி !!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ரெட்டைக்கொம்பு’, ‘கறுப்பர் நகரம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக …

Read More »

கொல்கத்தா ஆடுகளத்தில் ஐதராபாத் அணி சாதிப்பது கடினம்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: முதலாவது தகுதி சுற்றில் மும்பையில் விளையாடிய ஐதராபாத் அணியினர் அங்கிருந்து இங்கு வந்து (கொல்கத்தா) இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை உடனடியாக மாற்றிக்கொண்டு ஆடுவது நிச்சயம் கடினமாக இருக்கும். மும்பை ஆடுகளத்தில் பந்து நன்கு ‘பவுன்ஸ்’ ஆனது. ஆனால் கொல்கத்தா ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். இது எங்களது சொந்த ஊர் மைதானம் என்பதால், இங்கு …

Read More »

இலங்கையின் கடல் வாழ் உயிரியல் நிபுணரான ஆஷா டி வோஸுக்கு விருது!!

பிரிட்டிஷ் கவுன்சிலின் முதலாவது குளோபல் அலுமினி விருது (Global Alumni Awards)வழங்கலில் இலங்கையின் கடல் வாழ் உயிரியல் நிபுணரான ஆஷா டி வோஸ் தொழில்முறை சாதனை விருதை பெற்றுள்ளார். ஆஷா டி வோஸ் கடல் வாழ் பாலூட்டிகள் ஆராய்ச்சி சம்பந்தமாக பிஎச்டி (PhD) பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷா டி வோஸ், இறுதி 62 பேரில் இருந்து தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி, பிராந்திய வெற்றியாளர்கள் 21 …

Read More »

வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு!!

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய், மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகள் இங்கு மீள்குடியேற்றத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்தார். இந்நிலையில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணி, வீடுகள் விடுவிக்கப்பட்டவில்லை அவை தொடர்ந்தும் இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன. இதனால் காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோயில் …

Read More »

பியகம – கடுவலை பாலம் வழமைக்கு திரும்பியது!!

பியகம மற்றும் கடுவலை ஆகிய நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் வழமையான நிலைக்கு திரும்பியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அந்தப் பாலத்தால் பயணிப்பது அபாய நிலையை எதிர்கொண்டிருந்ததால் வாகனப் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிமின் ஆலோசனைப்படி வீதிப் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் முப்படையினர் இணைந்து விரைவாக அந்தப் பாலத்தை திருத்தியமைத்துள்ளனர்.

Read More »

வடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு!!

வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். வட கொரியா – அமெரிக்க உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை மீண்டும் நடத்த முயற்சி எடுக்கப்படுகிறதாக தெரிகிறது. ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருந்த உச்சிமாநாட்டை ரத்து செய்த அமெரிக்க அதிபர் …

Read More »

போதைப்பொருள் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை !!

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் மரியா எக்ஸ்போஸ்டோ (54). மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஷாங்காய் நகரில் இருந்து மெல்போர்ன் நகருக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி செய்ததாக மலேசிய விமான நிலையத்திள் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் ஒரு கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார். அந்த பையில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது …

Read More »

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்!!

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்ட நிலையில், அப்போட்டிகள் அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற போட்டிகளின் போது இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சு பிற்போட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அரசு மீது இன்று நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு !!

அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்ட சபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார். இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். …

Read More »

எவன்கார்ட் சம்பவம் சம்பந்தமான கோட்டாவின் மனு பிற்போடப்பட்டது!!

சர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு எதிர்வரும் 31ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. அந்த மனு இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே பிற்போடப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். இந்த வழக்கை வேறு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் …

Read More »

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட உள்ள சிரேஷ்ட பெண் அதிகாரி!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலய்னா பி. டெப்லிடஸ்ஸின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். நேற்று (24) வௌ்ளை மாளிகையில் வைத்தே இவருடைய பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தூதுவர் சேவையில் சிரேஷ்ட அதிகாரியான அலய்னா பி. டெப்லிடஸ் தற்போது நேபாளுக்கான அமெரிக்க தூதுவராக கடமையாற்றி வருகின்றார். அவரை இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்க டொனால்ட் ட்ரம்பினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைக்கான அனுமதியை பெற வௌ்ளை மாளிகையின் ஊடாக குறித்த பரிந்துரை …

Read More »

மூவரை காப்பற்ற சென்ற பொலிஸார் வௌ்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டார்!!

மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். 29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். கல்முருவ பிரதேசத்தில் சில குடும்பங்கள் வௌ்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாதம்பே பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் குழுவொன்று அந்தப் …

Read More »

எச்சரிக்கை – அத்தனகலு ஓய பெருக்கெடுக்கும் அபாயம்!!

அத்தனகலு ஓய பெருக்கெடுத்துள்ள நிலையில் தற்போது அது வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, மா ஓயவின் நீர் மட்டம் வௌ்ள அபாய நிலையை அடைந்துள்ளதாகவும் இதனால் படல்கம மற்றும் கிரிஉள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக …

Read More »

வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு!!

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12ம் திகதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12ம் திகதி சந்திப்பு …

Read More »

தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!!

கொகரேல்ல பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த நபர் இன்று (25) பொலிஸ் நிலையத்தில் வைத்தே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More »

150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… !!

நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த அறம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடி பிடித்து நடித்து வருகிறார். கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் வைத்து தயாராகி வரும் கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளியிட்டனர். நயன்தாராவை …

Read More »

பட விழாவில் கதறி அழுத நடிகை… !!

பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா …

Read More »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு !!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று முன்தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் …

Read More »

239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது!!

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருந்து சீன நாட்டின் தலைநகரான பீஜிங் நகருக்கு 8-3-2014 அன்று 227 பயணிகள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட 12 பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் (எம்.ஹெச். 370) இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்தது இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணியில் விமானங்கள், கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. அவுஸ்திரேலியக் கடற்படை …

Read More »

இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு – தாய் பலி, மகனுக்கு படுகாயம்!!

நிட்டம்புவ, ஹத்வடுன்ன பகுதியில் இன்று (24) மதியம் 12.55 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 53 வயது நிரம்பிய தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை …

Read More »

ராஜஸ்தானை வீழ்த்தி Qualifier க்கு முன்னேறியது கொல்கத்தா !!

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. ராஜஸ்தான் ராயல்ஸ் நாணயசுழற்சியை வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்களை பெற்றது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் …

Read More »

33 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த இந்தியர் ஒருவரை இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இந்தியவை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த Spicejet விமான சேவைக்கு சொந்தமான SG 001 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் பயணிகள் வருகை …

Read More »

மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி!!

மகரகம நகர சபைக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹைலெவல் வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மோட்டார் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மகரகம பொலிஸார் …

Read More »

அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் – இன்டர்போல் பொலிஸார் தெரிவிப்பு!!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டர்போல் பொலிஸாரின் சிங்கப்பூர் கிளை அதிகாரிகள், இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவித்தள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (24) தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக சட்ட மா அதிபர் …

Read More »