Home / admin (page 20)

admin

வடக்கு ஆளுனராக மீண்டும் ரெஜினோல்ட் குரே!!

நேற்று (12) மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரேயை இன்று (13) வட மாகாண ஆளுனராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.

Read More »

அபர்ணதி பற்றிய திடுக்கிடும் தகவல்!

புதிதாக தமிழில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்க்கை துணை தேடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 16 பெண்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது இறுதியாக 3 பெண்களில் வந்து நிற்கிறது. இதில் யாரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த நேரத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பலரின் பார்வைக்கு வந்தவர் என்றால் அபர்ணதி தான். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவது, ஆர்யாவை …

Read More »

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்) இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கல்வித் பொதுத்தராதர சாதாரணதர (ஓ.எல்) பரீட்சையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவன் செல்வன்.புஷ்பானந்தன் துகீசன் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அவரது “எதிர்கால கல்வி செயல்பாட்டுக்கு” உதவும் நோக்கில், இன்றையதினம் “பணமுடிப்பு” கொடுத்து கௌரவிக்கப்பட்டார். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த, மாணவன் செல்வன். புஷ்பானந்தன் துகீசன், …

Read More »

முத்தத்துக்கு10 லட்சம் பரிசு… !!!!!

ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ‘ரங்கஸ்தலம்’. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலக அளவில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தில் ராம்சரண் – சமந்தா முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் இருவரும் தயங்கி உள்ளனர். என்றாலும், இதையடுத்து காட்சியின் முக்கியத்துவம் கருதி அப்படி நடிக்க …

Read More »

நடிகையிடம் 2 முறை காதலை சொன்ன நடிகர் !!

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். இந்திபட உலகிலும் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராம்சரண் தேஜா உள்பட ஏராளமான ஹீரோக்களுடன் காஜல் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த தெலுங்கு பட உலக நாயகர்கள் குறித்து அவர் இப்படி கூறுகிறார்… “மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர். ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும். …

Read More »

குழந்தை வாய்ஸ் என்பதால் டப்பிங் பேசுவதில்லை : அனுஷ்கா !!

அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. பல முன்னணி நடிகைகள் தங்கள் படங்களுக்கு தாங்களே டப்பிங் பேசியுள்ளனர். ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கில் 45 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இதுவரையும் அவர் தனது கேரக்டருக்காக டப்பிங் பேசியதில்லை. இது குறித்து அவர் கூறியது: நான் நடிக்கும் படங்களுக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என்பது எனது ஆசை. எல்லா நடிகைகளுக்கும் அந்த விருப்பம் இருக்கும். ஆரம்பத்தில் அதுபோல் எனக்கு …

Read More »

டிடி கொடுத்த அதிர்ச்சி… !!

சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர். இந்நிலையில் டிடி விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்தது தான், இந்த சேனலை தவிர இவரை வேறு எந்த சேனலிலும் பார்க்க முடியாது. அப்படியிருக்க ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் டிடி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார். இவருடம் கௌதம் மேனனும் இந்த நிகழ்ச்சிக்கு வர, இதை …

Read More »

போதைப் பொருளுடன் இலங்கையில் இந்திய பெண் கைது!!

போதைப் பொருளை இலங்கைக்குள் கடத்தி வந்த இந்தியப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்ட போது ஒரு பெண்ணின் கைப்பையினுள் சூட்சுமமான முறையில் இந்த போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட போதைப் பொருள் 212 கிராம் எடை கொண்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட 31 வயதான இந்திய பெண் …

Read More »

சூப்பர் ஸ்டார் நடிகருக்காக மம்மி டாடியை டீலில்விட்ட நடிகை!!

ரசிகர்கள் தங்களது இஷ்ட நடிகர், நடிகைகளை தங்களது செல்போனில் முகப்பு படமாக வைத்திருக்கின்றனர். பெரும்பாலான நடிகர், நடிகைகள் தனது படத்தை அல்லது தங்களது குடும்பத்தினர் படத்தை முகப்பு படமாக வைத்துக்கொள்கின்றனர். நடிகை லாவண்யா திரிபாதியை ஞாபகமிருக்கிறதா? பிரம்மன், மாயவன் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர் தனது செல்போனில் முகப்பு படமாக தனது அம்மா, அப்பா படத்தை வைத்திருந்தார். கொஞ்ச நாட்களாக அந்த படங்கள் அவரது செல்போனிலிருந்து காணாமல் போயிருக்கிறது. அதற்கு …

Read More »

பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் – எச்சரிக்கை!!

மேல், சப்ரகமுவ, தென் , மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டள்ளது. மேலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் …

Read More »

எதிர்காலத்தை சிந்தித்து அடுத்த கட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும்!!

ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் தன்னை சந்தித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தலவத்துகொட லேக் விவ் ரெசிடென்சி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்காலத்தை …

Read More »

புதிய அமைச்சர்கள் நால்வர் பதவியேற்ப்பு!!

புதிய அமைச்சர்கள் 4 பேர் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்காலிகமாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர். இதன் அடிப்படையில் பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விபரம், சரத் அமுனுகம – திறன்கள் அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பைசர் முஸ்தபா – விளையாட்டுத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம – சமூக வலுவூட்டல், நலன்புரி, கண்டி மரபுரிமைகள் மற்றும் தொழில், …

Read More »

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்த பின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள். பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு? …

Read More »

பாலிவுட்டை கலக்கும் கன்னடப் பெண் !!

பெங்களூரைச் சேர்ந்த நிதி அகர்வால், மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்து, நேரடியாக இந்திப் படத்தில் அறிமுகமானார். முன்னா மைக்கேல் என்ற அவரது முதல் படம் வெற்றிபெறவில்லை. எனினும், நிதி பிரபலம் ஆனார். இப்போது ஸ்ரீநாராயண் சிங் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர், அக்‌ஷய்குமார் நடிப்பில் ஹிட்டான டாய்லெட் ஏக் பிரேம் கதா என்ற படத்தை இயக்கியவர். இதில் நடித்தபடி, சவ்யசச்சி என்ற தெலுங்குப் படத்திலும் நிதி நடிக்கிறார்.

Read More »

நஸ்ரியாவின் சந்தோஷம் !!

பெங்களூர் டேஸ் படத்துக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கும் புதிய மலையாளப் படம் மூலம் அடுத்த ரவுண்டைத் தொடங்கியுள்ளார், பஹத் பாசிலைக் காதல் திருமணம் செய்த நஸ்ரியா நாசிம். பிருத்விராஜ், பார்வதி ஆகியோருடன் தான் இருக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நஸ்ரியா, மீண்டும் தான் நடிக்க வந்துள்ளது குறித்து சந்தோஷப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Read More »

விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது : பிரியா வாரியருக்கு இயக்குனர் திடீர் தடை !!

ஒரு அடார் லவ் படத்தின் டீஸரில் கண்ணடித்தும் நமட்டு சிரிப்பு சிரித்தும் ரசிகர்களை கவர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் உலக புகழ் பெற்றார். பிரபலமாகிவிட்டாலே அவர்களுக்கு வசதியும், பணமும் தன்னால் தேடி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் நிலையில் அதையும் மீறி அவருக்கு பணமழை கொட்டுகிறது. இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பிரியா வாரியர் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். …

Read More »

டாப்ஸியை மணக்க டுவிட்டரில் விருப்பம் : ரசிகர் ஏற்படுத்திய பரபரப்பு !!

நடிகைகள் இணைய தள பக்கங்களில் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த பட்டியலில் நடிகை டாப்ஸியும் இடம்பெற்றிருக்கிறார். நடிகைகளுக்கு மட்டுமல்ல சக பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் பேசி அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கருத்துதெரிவித்திருக்கிறார். தனது காதல் வாழ்க்கை மற்றும் வருங்கால கணவர் எப்படியிருக்க வேண்டும் என்பதுபற்றி டாப்ஸி குறிப்பிடும்போது, ‘பொய் பேசாதவராக இருக்கவேண்டும்’ என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் தெரிவித்திருந்தார். அதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் …

Read More »

ஹபீஸ் சயீத்தின் இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் திட்டம்!!

பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா உள்ளிட்ட சில இயக்கங்கள் மீது நிரந்தர தடை விதிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இவரை வீட்டுச் சிறையில் வைத்திருந்த பாகிஸ்தான் அரசு, பின்னர் விடுவித்தது. …

Read More »

காதல் கணவருக்கு ஸ்ரேயா லிப் லாக் கிஸ் !!

நடிகை ஸ்ரேயா, ரஷ்ய பாய்பிரண்ட் ஆண்ட்ரி கோஸ்சீவ் காதல் திருமணம் சமீபத்தில் ரகசியமாக நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் தவிர யாரும் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை. முதலில் திருமணத்தை மறுத்த ஸ்ரேயா மறுநாள் அவரே திருமண படத்தை இணைய தளத்தில் வெளியிட்டார். திருமண கோலத்தில் இருந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் நேற்று மற்றொரு கிக் ஸ்டில் வெளியிட்டார் ஸ்ரேயா. தங்கநிற ஜரிகை வேய்ந்த மஞ்சள் நிற பட்டு …

Read More »

சூரியனை அருகில் சென்று ஆராய பார்க்கெர் விண்கலம் ஜூலை 31-ல் பாய்கிறது!!!

சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பார்க்கெர் விண்கலம்’, வரும் ஜூலை 31ம் தேதி, டெல்டா 4 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது சூரியனை பற்றிய ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் முதல் விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை ஆராய விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களில் ரோவர் கருவிகள் தரையிறக்கப்பட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சூரியனை ஆராய மட்டும் இதுவரை …

Read More »

காஷ்மீர் சூழ்நிலை கவலை அளிக்கிறது : ஐநா பொதுச்செயலாளர் கருத்து!!

காஷ்மீர் மாநில சூழ்நிலை கவலை அளிப்பதாக ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜார்ரிக் நேற்று முன்தினம் அளித்த பேட்டி: காஷ்மீர் மாநிலத்தின் சூழல் குறித்து ஐநா பொதுச்செயலாளர் தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறார். பொதுமக்களை காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை நினைவுப்படுத்துகிறேன். காஷ்மீர் மாநில சூழ்நிலை குறித்து இந்திய அதிகாரிகளிடம் ஆன்டனியோ பேசியுள்ளார். …

Read More »

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சி : பாக். அமைச்சர் குற்றச்சாட்டு!!

‘‘காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கிறது’’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீரில் சமீபத்தில் ஆயுதம் இல்லாத 20 பொதுமக்களை சுட்டுக்கொன்றதன் மூலம் காஷ்மீர் பிரச்னைக்கு மீண்டும் துப்பாக்கி மூலம் தீர்வு காண முயற்சிக்கும் இந்தியாவின் கொள்கை வெளிப்பட்டுள்ளது. இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் ஏற்றுக்கொள்ள …

Read More »

திருமணத்துக்கு எதிரானவரா லட்சுமி?

லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவாவுடன் எங் மங் சங், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் ஆகிய படங்களில் நடிக்கிறார். அவர் கூறுகையில், ‘திருமணத்துக்கு நான் எதிரானவள் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, திருமணம் என்பது அவசியம் என்று நினைக்கவில்லை. ஆனால், திருமணத்தின் மூலம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நல்ல நட்பு இருக்க வேண்டும். திருமணம் மூலமாக பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு நினைக்கக்கூடாது. இப்படி நான் சொல்வதால், நானொரு பெண்ணியவாதி என்று நினைக்காதீர்கள்’ என்றார். …

Read More »

உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தை!

இந்தியாவில் உயிருள்ள மீனை விழுங்கிய 11 மாத குழந்தையை வைத்தியர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர். பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டு பகுதியை சேர்ந்த ஒருவரின் 11 மாத ஆண் குழந்தை, வீட்டில் மீன் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது மீன் தொட்டியில் நீந்திக் கொண்டிருந்த சிறிய மீனை குழந்தை எடுத்து விழுங்கி விட்டது. மீன் தொண்டையில் சிக்கிக் கொண்டதால், குழந்தையின் வாயில் இருந்து இரத்தம் வழிந்தது. மூச்சு விடவும் சிரமப்பட்டது. இதனைத் …

Read More »

சைப்ரஸ் அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த பெண்!!

சைப்ரஸ் நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி நிதி சேடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 07 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு சைப்ரஸ் நாட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் அங்கு தொழில் கிடைக்காததால் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வந்து அந்தப் பெண்ணுக்கு எதிராக வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விஷேட விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். …

Read More »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!!

கடந்த பல நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பதாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிக் கொண்டதாக கருதப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம் நிரந்தர பணியாளர்கள் அன்றைய தினத்திற்கு முன்னர் மீண்டும் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த …

Read More »

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்!!

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க உள்ளதாக அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அன்றைய தினம் மேற்கொள்ளப்படுவது அமைச்சரவை மாற்றமல்ல என்றும் புதிய அமைச்சரவையே நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கூறினார். அதேநேரம் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் …

Read More »

சிங்கப்பூர் எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு!!

சிங்கப்பூரின் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத்தம் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பிரீத்தம் சிங். 41 வயதான இவர், கடந்த 2011ல் நாடாளுமன்ற எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், தொழிலாளர் கட்சியின் துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் தொழிலாளர் கட்சியில் கடந்த 2001ல் இருந்து பொதுச் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் “வைப்பில்” இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் வைப்பில் இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது இம்மாத ஆரம்பத்தில் (02.04.2018) புர்கடோர்ப் மாநிலத்தில் கூடியதும். இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன், மேலும் சில ஒன்றிய உறுப்பினர்கள் தொலைபேசி மூலமும் தமது கருத்துக்களை தெரிவித்தனர் என்பதுடன். இக்கலந்துரையாடலில் தற்போது கைவசம் உள்ள “ஒன்றிய நிதி”யானது “எதிர்காலத்தில் …

Read More »

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் கட்டிடத்தில் 50-வது மாடியில் தீ விபத்து!!

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ெசாந்தமான கட்டிடத்தின் 50வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 6 ேபர் காயமடைந்தனர். அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 58 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் 50வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரின் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு …

Read More »

IPL கிரிக்கெட் – 4 ஆயிரம் பொலிஸார் குவிப்பு !!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பார்க்கவரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கிறது. தினமும் சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். …

Read More »

விண்வெளியில் தேங்கியுள்ள 7500 டன் குப்பைகளை அகற்ற செயற்கைக்கோளை அனுப்பிய இங்கிலாந்து!!

விண்வெளிக்கு உலக நாடுகள் முழுவதும் பல்வேறு காரணங்களுக்காக செயற்கைக்கோள்களை அனுப்புகின்றன. பல செயற்கைக்கோள் ஆயுட்காலம் முடிந்தபின்னும், சில பழுதடைந்து செயலிழந்தும் விண்வெளியிலேயே குப்பைகளாக சுற்றித்திரிகின்றன. இப்படி விண்வெளிக் குப்பைகளாகிவிட்ட செயற்கைக்கோள்களின் அளவு மட்டும் 7,500 டன் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவை எந்த நேரமும் பூமிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டனில் இருந்து அண்மையில் செயற்கைக்கோள் ஒன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் சர்வதேச …

Read More »

27,200 கோடி தொன் பனிப்பொழிவு!!

அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் …

Read More »

பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபருக்கு எதிராக பேரணி!!

பிரேசிலில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அதிபர் லூலாவை சிறையில் அடைக்க வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரியோ டி ஜெனிரோ, சாவ் பாவ்லோ உள்ளிட்ட பெருநகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக சென்றனர். ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள லூயிஸ் இனாசியோ லூலாவை சிறையில் அடைக்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கடந்த 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை பிரேசில் அதிபராக பதவி வகித்த லூயிஸ் …

Read More »

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதி முதல் நடைமுறைக்கு!!

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது இம்மாத இறுதியில் இருந்து கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி ​சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட கூறினார். கட்டண மீட்டர் கடந்த 01ம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற் கொண்டு …

Read More »

13 வயது சிறுமியின் வயிற்றில் 24 வார கரு – கலைக்க நீதிமன்றம் அனுமதி!!

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை அருகேயுள்ள உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரையடுத்து, பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அந்த சிறுமியை கடத்திச் சென்று வைத்திருந்த நபரை கைது செய்த பொலிஸார் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி சிறுமியை மும்பைக்கு அழைத்து வந்தனர். அவளுக்கு …

Read More »

மனிதனை கொன்று சாப்பிட்ட ஓவியர் (படங்கள்)!!

வெனிசியூலாவைச் சேர்ந்த லுயிஸ் அல்பிரட் என்னும் மனிதன் பண்ணை உரிமையாளர் ஒருவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டபோது அவரது வேண்டுகோளின்படிதான் அவரைத் தான் கொன்றதாகக் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பண்ணை உரிமையாளர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் அவரைக் கொன்றதாகவும், சடங்கின் ஒரு பகுதியாகத்தான் அதைச் செய்ததாகவும் லுயிஸ் அல்பிரட் கூறியுள்ளான். அந்த மனிதனின் உடலின் பெரும்பகுதியைத் தின்று விட்ட லுயிஸ், அந்த மனிதனின் இரத்தம் மற்றும் சாம்பலைப் பயன்படுத்தி …

Read More »

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான எழுத்து மூல பரீட்சையில் மாற்றம்!!

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான எழுத்து மூலப் பரீட்சையை எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் புதிய முறையில் நடத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எழுத்து மூலப் பரீட்சையில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுத்தல் மற்றும் விரைவாக பெறுபேறுகளை வௌியிடுவது போன்ற காரணங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறினார். அதன்படி முதலில் வெஹரஹர காரியாலயத்தில் புதிய …

Read More »

அமெரிக்கா கப்பல்கள் ரோந்தை தொடர்ந்து தென்சீனாவில் 40 போர்க்கப்பல்கள் பயிற்சி!!

தென் சீனா கடல் பகுதியில் 40க்கும் மேற்பட்ட கப்பல்கள் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூரவ வீடியோவை சீனாவே வெளியிட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வரும் வேளையில், அங்கு தடையை மீறி அமெரிக்க போர்க்கப்பல்கள் அடிக்கடி வலம் வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்சீன கடலோர பகுதிகளில் அமெரிக்காவை சேர்ந்த 3விமான தாங்கி போர்க்கப்பல்கள் வலம் வந்தன. …

Read More »

பொய்க் குற்றம் சுமத்தி இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 10,000 ருபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது. பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்த போது, சட்டத்துக்கு மாறான செயல் …

Read More »