Home / admin (page 3)

admin

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு மஹிந்தவின் ஆசிர்வாதம் வேண்டும்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இன்று (24) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரை மிக விரைவில் அந்த பதவியில் இருந்து நீக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு – தீர்ப்பு ஜூன் 14 !!

காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலகொடவின் மனைவி சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (24) கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக இனங்காண்டதுடன், இந்த வழக்கிற்கான தீர்ப்பை ஜூன் 14 ஆம் திகதி அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் வைத்து சந்தியா எக்னெலகொடவை அச்சுறுத்திய குற்றச்சாட்டிற்காகவே இந்த …

Read More »

கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் மூடப்படும் !!

கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் இன்று (24) இரவு 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கடுவெல – பியகம நகரங்களை இணைக்கும் பிரதான பாலம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த பாலத்தினை திருத்தி அமைக்கும் வேலைகளுக்காகவே இன்று தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்!!

இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக ரணில் திஸ்ஸ விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று (24) அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

வடகொரியாவுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இரத்து செய்த ட்ரம்ப்!!

வடகொரியாவுடன் வரும் 12 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதம் தொடர்பாக கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தென்கொரியா, வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அண்மையில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து, அந்த இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றம் சிறிது தணிந்தது. இதேபோல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையே சிங்கப்பூரில் …

Read More »

சுற்றுலாப் பயணிகள் சிவனொளிபாத மலைக்குச் செல்ல தற்காலிகத் தடை!!

மத்திய மாகாணத்திலும் நீடித்துவரும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இரவு வேளையில் சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குத் திணைக்கள அதிகாரி ஏ.ஆர்.பி.ஏ.கருணாதிலக்க தெரிவித்தார். சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்காக ஹட்டன் வழியினூடாக அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண்பதற்காக …

Read More »

சீரற்ற காலநிலை – 12 பேர் உயிரிழப்பு, 124,733 பேர் பாதிப்பு !!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31,822 குடும்பங்களை சேர்ந்த 124,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய …

Read More »

இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர திட்டம்… !!

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு …

Read More »

வன்முறை, உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை …

Read More »

தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு இளம்பெண் உட்பட 9 பேர் பலியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் தமிழரசன், சண்முகம், கிளாஸ்டன், கந்தையா, மணிராஜ், அந்தோணி செல்வராஜ், ஜெயராமன் மற்றும் வெணீஸ்டா ஆகிய எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் கணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 40 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாகவும் …

Read More »

கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் எளிமையான ஆடை!!

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு நாளை (24) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் …

Read More »

இயற்கை அனர்த்தங்களின் போது செயற்பட 89 மில்லியன் ரூபா உடன்படிக்கை கைச்சாத்து !!

உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன இணைந்து மூன்று வருட காலத்திற்கான (2018-2020) வேலைத்திட்டங்கள் அடங்கிய உடன்படிக்கை ஒன்றை அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு உடனடியாக செயற்படுவதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் 89 மில்லியன் ரூபா நிதி (AUD 750,000) அடங்கிய உடன்படிக்கை ஒன்றையே இவ்வாறு அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. வெள்ளம், கடும்காற்று, வரட்சி முதலான இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் நாடுகளில் முக்கிய நாடாக இலங்கை அடையாளம் …

Read More »

அம்மாவை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சிம்ரன்!

ஒரு காலத்தில் இடுப்பழகி என்ற பெயரோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நடனத்தை ரசித்தது போல் எந்த ஒரு நடிகையின் நடனத்தையும் ரசிகர்கள் அவ்வளவாக ரசித்தது இல்லை என்றே கூறலாம். இந்த நேரத்தில் நடிகை சிம்ரன் முதன்முறையாக தன்னுடைய அம்மாவை ரசிகர்களுக்கு காட்சியுள்ளார். நேற்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள், டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து கூறியதோடு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

Read More »

680 மில்லியன் டொலர் ஊழல் – முன்னாள் பிரதமரிடம் விசாரணை !!

மலேசியாவின் 14 வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டொலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக அப்போதைய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, …

Read More »

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இந்த வாரம் நடவடிக்கை!!

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை ‘ஜெட்’ வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், அதில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் …

Read More »

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் வில்லியர்ஸ் !!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஏ.பீ. டி வில்லியர்ஸ் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் தலைவர் ஏ.பீ. டி வில்லியர்ஸ், தனது 14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை விசேட அம்சமாகும். தனது ஓய்வு குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த வில்லியர்ஸ், “நான் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் …

Read More »

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்கள் அவதானத்தில்!!

நாட்டில் நிலவுகின்ற தொடர் மழை காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரண, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபத்த, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Read More »

இன்று முதல் புதிய பஸ் கட்டணங்கள் (முழு விபரங்கள் இணைப்பு)

பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (23) முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நூற்றுக்கு 12.5 சதவீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் புதிய திருத்தங்களுக்கு அமைய குறைந்தபட்ச கட்டணமாக 12 ரூபாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பஸ்களினதும், தனியார் பஸ்களினதும் கட்டண விபரங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

Read More »

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read More »

நிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும்!!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தேவையான அளவு நிதியை உடனடியாக வழங்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் திறைசேரிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஊடக மற்று நிதியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வசதியாக தேவைப்படுகின்ற நிதியை வழங்குவதற்கு திறைசேரி அதிகாரிகளுக்கு அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட மட்டத்தில் நிவாரணம் வழங்குவதற்கு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் …

Read More »

பாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் வழங்க அவசர இலக்கம்!!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கு விரைவாக உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் சீருடைகள், பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்திருப்பின் அது தொடர்பில் கல்வியமைச்சின் 1988 என்ற அவசர தொடர்பிலக்கத்துக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் தகவலுக்கு அமைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு …

Read More »

நிபா வைரஸ் – இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழப்பு !!

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக அரிய வகை நிபா வைரஸ் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த வைரஸ் தாக்குதல் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பரவலாக உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு செவிலியர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவ்வால்களால் பரவும் இந்த …

Read More »

உப சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்?

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை உப சபாநாயகராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது சபாநாயகர் கருஜயசூரிய இதனை தெரிவித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். முன்னதாக அந்தப் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தனது …

Read More »

பெண்கள், குழந்தைகளை தொந்தரவு செய்தால் கைகளை வெட்டுவேன்!!

உத்தர பிரதேச மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பரின் மகனும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவருமான அரவிந்த் ராஜ்பர் சண்டவ்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆவேசமாக உரையாற்றினார். ‘பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்களின் கைகளை வெட்டுவேன். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற …

Read More »

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து!!

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலை பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து மேற்கொண்ட …

Read More »

அரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள்!!

இன்று நாங்கள் சுகந்திரமாக இந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் எமது இராணுவத்தின் சேவையே, அதனால் எமது இராணுவத்தினரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட வேண்டாம் என, ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் கோரிக்கை விடுப்பதாக பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இன்று (22) பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி …

Read More »

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது!!

கொழும்பில் இருந்து புத்தளம் வரையான புகையிரத பாதையின் பயணத்தை லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது. நாத்தாண்டிய மற்றும் தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ​ஹெமில்டன் ஆறு பெருக்ககெடுத்துள்ளதால் புகையிரத பாதை நீரினால் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனாலேயே கொழும்பில் – புத்தளம் வரையான புகையிரத சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 1486 குடும்பங்களை சேர்ந்த 5862 பேர் …

Read More »

விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக உயர்வு !!

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. 113 பேர் பயணம் செய்த இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விமான விபத்தில் 110 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் மற்றும் தலைக்காயங்களுடன் 3 பேர் …

Read More »

தென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்!!

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம் தற்போது இந்த நிலமை கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். சுகாதாரக் குழுக்கள், மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இனம் காணப்படாத வைரஸ் தொற்று காரணமாக தென் மாகாணத்தில் …

Read More »

ரயில் ஒன்று தடம்புரண்டதில் களனிவெலி ரயில் சேவையில் தாமதம் !!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று கொட்டாவ மாலபல்ல ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால் களனிவெலி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. மேலும், களனிவெலி ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அப்பகுதி ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில்களும் நுகேகொட வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு !!

2018/19 ஆண்டுக்கான இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிக அளவு இலாபம் அடைந்ததால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். ஒப்பந்த வீரர்கள் 33 பேரை தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடும் அனைத்து வீரர்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த வீரர்கள் A, B, …

Read More »

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையர்!!

இலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார். நேபாள ​நேரத்தின் படி இன்று (22) காலை 5.55 மணியளவில்அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்பட்டு அதனை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று …

Read More »

புதிய பஸ் கட்டண திருத்தம் இன்று அமைச்சரவைக்கு!!

புதிய பஸ் கட்டண திருத்தம் இன்று (22) அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து நூற்றுக்கு 6.56 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. எனினும் அந்தக் கட்டண அதிகரிப்பை ஏற்றுக் கொள்ளாத தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த பேராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர். இதன் காரணடாக 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்திருந்தது. அதேநேரம் குறைந்தபட்ச …

Read More »

விஷேட விவாதத்தை கேட்டுள்ள கூட்டு எதிர்கட்சி!!

நாட்டில் தற்போது நிலவுகின்ற அனர்த்த நிலமை மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விஷேட விவாதத்தை நடத்துமாறு கூட்டு எதிர்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். இன்று மதியம் பாராளுமன்ற ஆரம்பித்தின் போது இந்த விவாதத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அதுகுறித்து பேசுவதற்கு இன்று மதியம் …

Read More »

தென் மாகாணத்திற்கு விஷேட வைத்தியர்கள் குழு!!

தென் மாகாணத்தில் பல பகுதிகளில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் மற்றும் நோயாளர்களை கண்காணிப்பு செய்வதற்காக நேற்றைய தினம் விஷேட வைத்தியர்கள் குழுவொன்று அந்தப் பிரதேசங்களுக்கு சென்றுள்ளது. முன்னதாக தொற்று நோய்ப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அனில் திசாநாயக்கவின் தலைமையில் அங்கு சென்ற விஷேட வைத்தியர்கள் குழுவினர் இந்த வைரஸ் தொற்று சம்பந்தமாக பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். தென் மாகாணத்தில் பல பகுதிகளில் தற்போது பரவிவரும் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று சம்பந்தமாக தேடிப்பார்ப்பதற்கு …

Read More »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை !!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நிதியினை கருத்திற் கொள்ளாது அரசினால் மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஆய்வு செய்து அவற்றினை உடனடியாக வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய தரப்பினர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததன் …

Read More »

4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளுடன் இருவர் கைது!!

4.7 மில்லியன் பெறுமதியான தங்கக்கட்டிகளை சட்டவிரோதமாக எடுத்துவந்த இருவரை இன்று (21) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து (21) காலை வருகை தந்த மாத்தறை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரும், மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 700 கிராம் எடையுடைய 4,760,000 பெறுமதியான தங்கம் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. போலி பெல்ட்களிலும் பாதணியின் கீழும் …

Read More »

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை; மூவர் சிக்கினர்!!

பெலிஅத்த, வலஸ்முல்ல வீதியில் இருக்கின்ற எரிபொருள நிரப்பு நிலையம் ஒன்றை உடைத்து 650,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காளை பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரால் பெலிஅத்த கம்புஸ்ஸாவல பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது கொள்ளையிட்ட பணத்தில் இருந்து 25,150 ரூபாவும் 35,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் 18 மற்றும் 19 வயதுடைய …

Read More »

ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது!!

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பேர் ஆயுதங்களுடன் அம்பேபுஸ்ஸ, வரகாபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி!!

கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மாவத்தகம, வீரகெட்டிய, வாழைச்சேனை, ஹுங்கம மற்றும் வௌ்ளவத்தை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களிலேயே இவ்வாறு 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவத்தகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு மாத குழந்தை ஒன்றும் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனம் ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு …

Read More »