Home / admin (page 30)

admin

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நாளை நியமிக்கப்படும்!!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை அதன் தலைவர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது புதிய செயலாளரை நியமிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார். நேற்றைய தினம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியில் இருந்து ஆரியதாஸ குரே நீக்கப்பட்டிருந்ததுடன், வயது எல்லையே அவரது பதவி நீக்கத்துக்கு …

Read More »

அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா!!

புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.

Read More »

மயாமி ஓபன் பாம்ப்ரி தகுதி!!

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட, இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி பெற்றுள்ளார். தகுதிச் சுற்றின் 2வது ஆட்டத்தில் ஸ்வீடனின் இலியாஸ் ஒய்மருடன் நேற்று மோதிய பாம்ப்ரி 7-5, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். முதல் முறையாக 2015ல் ஒய்மருடன் மோதியபோது தோல்வியை தழுவியிருந்த பாம்ப்ரி, நேற்று அதற்கு பழிதீர்த்துக் கொண்டார். மயாமி ஓபன் முதல் …

Read More »

இன்ஸ்டாகிராம் கோலிக்கு Most Engaging Account விருது!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருக்கும் விராட் கோலி விளையாட்டில் மட்டுமல்ல, விளம்பரங்களிலும் முன்னணி நபராக திகழ்ந்து வருகிறார். மேலும் சமூக இணைய தளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உள்ளது. இவர் இன்ஸ்டாகிராமில் virat.kohli என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார். இந்த அக்கவுண்ட் ‘அதிகமாக செயல்பாட்டில் உள்ள கணக்கு (most engaging account)’ என இன்ஸ்ராகிராம் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் விராட்கோலிக்கு இந்த விருதை அறிவித்துள்ளது. விராட் …

Read More »

ஜனாதிபதி நாளை பாகிஸ்தான் விஜயம்!!

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான 3 நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை நாளை (22) மேற்கொள்ளவுள்ளார். பாகிஸ்தானின் தேசிய தின வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இளைஞர் மேம்பாடு பண்டாரநாயக்கா சர்வதேச டிப்ளோமா பயிற்சி நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் வெளிநாட்டு …

Read More »

பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்!!

திகன உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை. எனவே, இந்த கலவரத்துக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸ்மா அதிபர் ஏற்றுக் கொண்டு தனது பதவியை உடன் இராஜினாமா செய்ய வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நம்பிக்கைப் பொறுப்புகள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து …

Read More »

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் டி.பி. ஏக்கநாயக்க, நிஷாந்த முத்துஹெட்டிகம, காதர் …

Read More »