Home / admin (page 4)

admin

வைரஸ் காய்ச்சல் காரணமாக தென் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!!

மாத்தறை, முலடியான, அகுரெஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல மற்றும் காலி மாவட்ட கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளை தற்காலிகமாக மூடுவதற்கு தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தென் மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளையும் (22), நாளை மறுதினமும் (23) ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான …

Read More »

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி!!

இம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக இதுவரை நான்கு பேர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதன்படி முன்னாள் தலைவர்களான திலங்க சுமத்திபால, ஜயந்த தர்மதாச, முன்னாள் செயலாளரும் தற்போதைய உபதலைவருமான மொஹன் டி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் நால்வருடைய பெயர்களையும் கிரிக்கெட் சங்கங்களுக்கு …

Read More »

இலங்கை தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை!!

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தென்மேற்கு லண்டனில் வசித்து வந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (20) Mitcham பகுதியில் உள்ள வீதியில் அருணேஷ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலை 3.30 மணியளவில் அவசர உதவிப்பிரிவு பொலிஸார் அவரை மீட்டு காப்பாற்ற முயற்சித்த போதும், அவர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். …

Read More »

நிவாரணம் வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (21) நடைபெற்றது. இதன்போது சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உரிய தரப்பினருடன் தொடர்புகளை மேற்கொள்ளுமாறும், மேலும் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க …

Read More »

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் !!

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என் முன்னாள் வௌியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை …

Read More »

பாலத்தின் கீழ் கிடந்த வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள்!!

கர்நாடகாவில் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் 8 வி.வி. பேட் இயந்திரங்கள், அதற்கு பயன்படுத்தப்படும் காகிதங்கள் பாலத்தின் கீழ் வீசப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி சட்டப்பேரவை தொகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை எண் 8ஐ ஒட்டியுள்ளது மனுகோளி கிராமம். இக்கிராமத்தின் அருகே மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் வழக்கம் போல் கூலி வேலைக்கு ெதாழிலாளர்கள் சிலர் சென்றனர். அப்போது அங்கு வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை …

Read More »

ஐபிஎல் டி20 2018 : டெல்லியிடம் தோற்று வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்!!

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய முதலாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் களமிறங்குகிய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. டெல்லி அணியின் ரிஷப் பண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 30 …

Read More »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம்!!

தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More »

நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி!!

மட்டக்களப்பு, மண்டூர் மூங்கில் ஆற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். மண்டூர் கனேசபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய உமாபதி கிசான் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் இன்று பகல் 12 மணியளவில் வீட்டில் இருந்து 6 நண்பர்களுடன் மூங்கில் ஆற்றில் நீராடச் சென்று நீராடி விளையாடிக் …

Read More »

ஐபிஎல் லீக் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் 19.4 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய என்ஜிடி 4 ஓவரில் 1 மெய்டன் உட்பட 10 ரன் …

Read More »

பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாய்!!

சென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேலு என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் வேலு, வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு தனியாக வாழ்ந்த பிரியங்கா அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரோடு குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு ஸ்ரீமதி (வயது 3), புஷ்பம் (1½) என்ற இரண்டு …

Read More »

பெருக்கெடுக்கும் நிலைமையில் களனி கங்கை!!

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து பெருக்கெடுக்கும் நிலைமையில் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக களனி, கொலன்னாவ, தொம்பே, கடுவலை மற்றும் ருவன்வெல்ல பகுதிகளில் வௌ்ள அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

எதிர்வரும் 12 மணிநேர காலப்பகுதியில் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகணங்களிலும் காலி மற்றும் மாத்தரை மாவட்டத்திலும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

எனது தந்தையை போன்று வேறு எவரும் மிரட்டல்களுக்கு முகங்கொடுத்ததில்லை!!

இராணுவத்தினருக்கும் தீவரவாதிகளிக்கும் இடையிலான வித்தியாசத்தை தன்னுடைய தந்தை நன்கு அறிவார் என அமைச்சர் ராஜித சேனரத்னவின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனரத்ன தெரிவித்துள்ளார். இன்று (20) ஹங்வெல்ல பகுதியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்ககும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னுடைய தந்தையை போன்று வேறு எவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிரட்டல்களுக்கு முகங்கொடுத்த அமைச்சர் தென் மாகணத்தில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாரே …

Read More »

லிப் டு லிப் கிஸ் – வைரலாகும் ஐஸ்வர்யா ராய், ஆரத்யா புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சினிமா துறையில் இருந்து விலகினாலும் அவர் எப்போதும் மீடியாவில் ட்ரெண்டிங்காகும் பிரபலம் தான். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மட்டுமின்றி அவரது மகள் ஆரத்யாவின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இந்நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார். அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் …

Read More »

போராடி வென்றார் ஷரபோவா!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டபென்கோவுடன் (5வது ரேங்க்) நேற்று மோதிய ரஷ்ய நட்சத்திரம் மரியா ஷரபோவா (40வது ரேங்க்) 6-7 (6-8) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடிய அவர் 6-7 (6-8), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி …

Read More »

ஹாலிவுட்டில் என்ட்ரி ஆகும் ராதிகா ஆப்தே !!

ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி, டோனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆங்கில குறும்படம் ஒன்றிலும் இவர் நடித்திருக்கிறார். சேலை கட்டி குடும்ப பெண்ணாக நடித்துக்கொண்டிருந்தவர் திடீரென்று டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடித்தார். தவிர அடிக்கடி விவகாரமான கருத்துக்கள்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்த அவர், ‘தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்’ …

Read More »

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை!!

சில ஊடகங்கள் மற்றும் சில அமைப்புக்கள் கூறுவது போன்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். (19) இடம்பெற்ற தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த 09 ஆண்டுகளாக இந்த நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், எனினும் பலருக்கு …

Read More »

அணு ஆயுத திட்டங்கள் வேண்டாம் – டிரம்புடன் பேச்சுவார்த்தை ரத்தாகும்!!!

அணு ஆயுத பரிசோதனைகள், ஏவுகணை சோதனைகளால் தொடர்ந்து சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்த அவர் கடந்த மாதம் தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜேஇன் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், …

Read More »

பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் : நிகிஷா பட்டேல் அறிவிப்பால் பரபரப்பு !!

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன். திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் பிரச்னை பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் படுக்கைக்கு …

Read More »

ஐபிஎல் டி20 : ஐதராபாத் அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!!

ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் …

Read More »

சிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி !!

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது. படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக …

Read More »

எடியூரப்பா ராஜினாமா: காங்கிரஸ், மஜத கட்சியினர் கொண்டாட்டம்!!

: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Read More »

5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன்: குமாரசாமி உறுதி!!

பெங்களூரு: 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று குமாரசாமி உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.

Read More »

உயிர் தியாகம் செய்த வீரர்களை இனப் படுகொலையாளர்களாக சித்தரிக்கின்றனர்!!

நாட்டின் மக்களுக்கு சுதந்திரத்தையும் உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு, தமது சொந்த வாழ்வை, தமது உடல் உறுப்புக்களை தியாகம் செய்து அர்ப்பணித்தவர்கள் அனைவருமே மகத்தான மனிதர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். எனினும் அத்தகைய ஒரு மகத்தான மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் போன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் சித்தரிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ …

Read More »

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் கைது!!

மட்டக்குளிய, சமித்புர பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண போதைபொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 122 கிராமும் 820 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. 25 மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், மேல் …

Read More »

சினிமா வேலை நிறுத்தத்துக்கு பிறகு நட்சத்திர படங்கள் மோதல்!!

தமிழ் திரையுலகில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடுவதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டதுடன், படப்பிடிப்பு பணிகளும் முற்றிலுமாக தடைபட்டது. பின்னர் அரசு முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்னை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு புதிய படங்கள் வெளிவரத் தொடங்கின. ஏற்கனவே திரைக்கு வருவதற்கு தயாராக இருந்த சுமார் …

Read More »

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனம்!!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் மற்றும் டீசல் மீது அரசாங்கத்தால் வரி அறவிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

காதலை பிரேக் அப் செய்ய 10 கோடி கேட்ட காதலி!!

சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். சீனாவின் ஹன்ங்ஜே பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு கடந்த திங்கட் கிழமை இரவு காதல் ஜோடிகள் வந்துள்ளனர். அப்போது காதலன் மிகப் பெரிய சூட்கேஸ் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அதில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 2 …

Read More »

காணாமல் போயிருந்த தவில் வித்துவானின் சடலம் கண்டெடுப்பு!!

யாழ். நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் இன்று (19) சனிக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி வீதியைச் சேர்ந்த இராமையா ஜெயராசா (ஜெயம் – வயது (66) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 5 பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 17 ஆம் திகதி மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை பெண் ஒருவர் யமுனா ஏரிக்கு …

Read More »

ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்: சந்திரபாபு நாயுடு!!

ஆந்திரப்பிரதேசம்: ஜனநாயகம் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read More »

என் பெயரை கெடுப்பதா? நிவேதா பெத்துராஜ் கோபம் !!

ஒரு நாள் ஒரு கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் வீடியோ பேட்டி அளித்திருந்தார். அதில் சிறுமி பலாத்காரத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்ததுடன் சிறுவயதில் தனக்கும் பாலியல் தொல்லை தரப்பட்டது என்று தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களாகவே நிவேதா பெத்துராஜ் பற்றி தவறான விமர்சனங்கள் ஒரு சில மீடியாக்களில் வெளிவந்த வண்ணமிருக்கிறது. …

Read More »

இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு!!

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திகதி நடத்துவது சம்பந்தமாக ஆராய்வதற்காக 05 பேர் அடங்கிய தேர்தல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட்டின் அதிவிஷேட பொதுக்கூட்டத்தின் போது இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read More »

முப்படையின் சிரேஷ்ட அதிகரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபுஷண பதக்கம் !!

தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்கடை ஆகிய முப்படைகளையும் சேர்ந்த 50 அதிகாரிகள் “விஷிஷ்ட சேவா விபுஷண” பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்த பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. முப்படைளையும் சேர்ந்த தற்போது சேவையில் இருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற 52 பேருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படைத் தளபதி வைஸ் …

Read More »

மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா!!

காங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோலாவை தடுப்பதற்குரிய பரிசோதனை ரீதியிலான தடுப்பூசி மூலம் ஒரு வாரத்தில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை எபோலாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் 35 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையிலுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழப்பு!!

அரநாயக்க, தெபத்கம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலில் கணவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது அந்த எசிட் அவரின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்திருந்த கணவனை, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். …

Read More »

பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் மழை பெய்யலாம்!!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளயிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழையை எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை …

Read More »

கடந்த கால சம்பவங்களில் பாடம் படிக்க வேண்டும்!!

கடந்த கால சம்பவங்களில் பாடம் படித்து மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார். யுத்த வெற்றியின் 09 ஆண்டு நிறைவையிட்டு விஷேட உரையின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார். சுமார் 29,000 இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளதாகவும், பயங்கரவாதிகள் திட்டமிட்டு முன்னேறிய முறையையும், எமது நாடு இரண்டாக பிளவுபட்டதையும் அனைவரும் அறிவர் என்று அவர் கூறியுள்ளார். …

Read More »

ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா!!

கர்நாடக ஆளுநரிடம் தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா. பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் வஜூபாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா.

Read More »

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலனை !!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பாரம்பரியமான டாஸ் போடும் முறையை கைவிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசீலித்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகள் முதன்முதலில் தொடங்கப்பட்ட போதே, டாஸ் போடும் முறை இருந்து வருகிறது. அதாவது முதல் டெஸ்ட் போட்டி,1877ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியிலேயே டாஸ் போடப்பட்டது. உள்நாட்டு அணியின் கேப்டன் டாஸ் போடுவார். வெளிநாட்டில் வந்திருக்கும் கேப்டன் பூவா, தலையா என்று கேட்பார் …

Read More »