Home / Thusyanthan

Thusyanthan

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் 15 பேர்!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேரை கொண்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம பிரதேசத்தில் அமைந்துள்ள …

Read More »

O/L பரீட்சை டிசம்பர் 2 ஆம் திகதி ஆரம்பம்!!

கல்வி பொது சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சையை முன்னிட்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் புஜித்த தெரிவித்துள்ளார். அதன்படி, 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. 554 இணைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இரத்மலானை, தங்காலை, மாத்தறை. சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, …

Read More »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் …

Read More »

கடல் ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!!

மன்னாரின் சவுத்பாரின் கடற்கரைப் பகுதியில் ​நேற்று (20 ) நடத்தப்பட்ட தேடலின் போது, 14.5 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சியுடன் 2 நபர்களை கடற்படை கைது செய்தது. வட மத்திய கடற்படை கட்டளை சவுத்பார் கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகு கரைக்கு திரும்புவதைக் கண்டதுடன், இந்த கடல் ஆமை இறைச்சியை கண்டுபிடித்ததுள்ளது. இதையடுத்து, சந்தேக நபர்கள் இருவரையும் அவர்களது மீன்பிடிக் கப்பலுடன் கைது …

Read More »

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை !!

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் …

Read More »

நான் அவரை காதலிக்கிறேன்!!

நடிகைகள் சினிமாவில் பிஸியாகிவிட்டால் திருமணம் பற்றி அந்த தருணம் யோசிக்கவே மாட்டார்கள். அப்படி சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. இவர் முதன்முறையாக ஒரு பேட்டியில் தன்னுடைய காதலர் மற்றும் திருமணம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் அவரை பற்றி தற்போது கூற முடியாது. நாங்கள் இருவரும் 3 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் …

Read More »

16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி!

கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர். ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச …

Read More »

ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வாலிபர் கைது !!

சிரியா மற்றும் ஈராக்கை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலக நாடுகளில் கால்பதித்து பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தினர். சிரியா, ஈராக் , ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற பல நாடுகளில் இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின் அழிக்க அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் ஈராக் மற்றும் சிரியாவில் வான்தாக்குதல்களை நடத்த தொடங்கின. சமீபத்தில், இந்த கும்பலின் தலைவனாக செயல்பட்ட பாக்தாதி சிரியாவில் இத்லிப் நகரில் அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, …

Read More »

நித்தியானந்தா ஆசிரமத்தில் 2 பெண்கள் சிறை வைப்பு?

பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவரது மனைவி உமேஷ்வரி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். 7 முதல் 15 வயது வரையி லான அந்த 4 மகள் களையும் ஜனார்த்தன சர்மா கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூரில் சாமியார் நித்தியானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனர். சமீபத்தில் ஜனார்த்தன சர்மாவின் 4 மகள்களையும் பெங்களூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் …

Read More »

சில பாவிகளின் செயற்பாடுகளே சஜித்தின் தோல்விக்கு காரணம்!!

கட்சியில் இருந்த சிலரின் செயற்பாடுகள் காரணமாகவே நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட எடுத்துக்கொண்ட காலத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பல இடங்களுக்கு …

Read More »

எஸ்.ஆர் ஆட்டிகல கடமைகளை பொறுப்பேற்றார்!!

நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகல இன்று (20) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இன்று நிதி அமைச்சில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார். நிதி அமைச்சின் செயலாளராகவும் திறைசேரியின் செயலாளராகவும் முன்னாள் மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் எஸ்.ஆர் ஆட்டிகலவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நியமித்தார்.

Read More »

சஜித் நாளை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுக்க தீர்மானம்!!

சஜித் பிரேமதாச விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நாளை (21) நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச நாளை ஊடகங்களை மற்றும் மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையாமான சிறிகொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய கென்ய நாட்டு பெண் கவலைக்கிடம்!!

கொகேய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த கென்ய நாட்டு பெண்ணை நீர்கொழும்பு ​வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய வயிற்றுக்குள் சில உருண்டைகள் வெடித்துள்ள காரணத்தால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 17 ஆம் திகதி கட்டாரில் இருந்து வந்த குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரான குறித்த பெண்ணின் பயணப்பொதியில் இருந்து 30 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகள் விமான நிலைய சுங்க …

Read More »

ஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ!!

திறமையான ஆளுமை மற்றும் ஊழல் மோசடிகள் அற்ற ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் பொது மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனவும், தேசிய அமைதிக்கும் நாட்டின் இறையான்மைக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More »

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்!!

ஓய்வூப்பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்த இன்று (20) பாதுகாப்புச் செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (19) நியமித்தார். அவர் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி 2 வது லெப்டினனனாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார். இராணுவத்தில் பல பதவிகளை வகித்துள்ள அவர் இறுதிப் போரின் போது இராணுவத்தின் …

Read More »

அரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்!!

அரசாங்கத்தில் இருந்து விலகுவதே இந்த சந்தர்ப்பத்தில் செய்ய கூடிய ஒரே ஒரு பிரதான பணி என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறான முடிவை எடுப்பதற்கு தான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அததெரண தொலைக்காட்சியில் நேற்று (19) இரவு நடைபெற்ற ´வாதபிட்டிய´ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Read More »

ஹெரோயினுடன் மூவர் கைது!!!

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஎளிய, எவரிவத்த பகுதியில் 6 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது குறித்த நபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 22,21 மற்றும் 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஜாஎல பொலிஸார் ​மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை!!

கல்னேவ, சியம்பவேல பகுதியில் குழந்தை ஒன்று கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய பாட்டியுடன் இருந்த குழந்தை காணாமல் போனதாக நேற்று (19) கல்னேவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. குறித்த குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்றதன் பின்னர் குழந்தை பாட்டியுடன் இருப்பதாகவும் அந்த நேரத்தில் ஒவ்வொரு நாளும் அயல் வீட்டில் இருக்கும் வீட்டிற்கு குறித்த குழந்தையை எடுத்து செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் …

Read More »

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்!!

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி பெரும்பான்மையினர் பின்பற்றும் பௌத்த தர்மத்தை பாதுகாக்க புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த தர்மத்திற்கு முன்னிலை அளிப்பது அரசியல் யாப்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Read More »

ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு!!

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இன்று மாலை 4.30 அளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லாவிடின் எதிர்க் கட்சியில் பங்காற்றுவதா என்பது குறித்து இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. அதேபோல் பாராளுமன்றத்தை கலைப்பது குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் இதன் போது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவுள்ளனர்.

Read More »

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது. அந்த கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அத தெரணிடம் இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நேற்று (19) நடைபெற்ற அந்த கட்சியின் கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றம் தொடர்பில் பிரதமர் விரைவில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் …

Read More »

ஜனாதிபதி கோட்டாபய கண்டிக்கு இன்று விஜயம் !!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (20) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைமய அவர் ஸ்ரீதலதா மாளிகையில் வழிபடுகளில் ஈடுபடவுள்ள நிலையில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்திக்கவுள்ளார். அதன் பின்னர் மெனிக்ஹின்ன வூரிகடுவ பிரிவெனவுக்கும் சென்று ராமஞ்ஞ பீடத்தின் மகாநாயக்க தேரர் நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்து ஆசிப்பெறவுள்ளார். அதேபோல் ஜனாதிபதி இன்று மாலை கெடம்பே ராபோஜசாச விகாரைக்கும் சென்று அந்த விகாரையின் விகாராதிபதி …

Read More »

சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை; 1593 முறைப்பாடுகள்!!

கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதி வரை 2019 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து 1593 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் (ITSSL) தெரிவித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களை அவமதித்ததாக 650 முறைப்பாடுகளும், வேட்பாளர்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக 147 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை, மிலேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய …

Read More »

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலின் போது நடுநிலைமையாக இருந்த காரணத்தினால் கட்சியின் தற்காலிக தலைவராக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ நியமிக்கப்பட்டிருந்தார். அதனடிப்படையில் மீண்டும் கட்சியின் தலைமையை முன்னாள் ஜனாதிபதியிடமே ஒப்படைத்தாக பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

Read More »

அரசாங்க தகவல் திணைக்களத்தால் தெளிவுபடுத்தல்!!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு புதிதாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. அதனடிப்படையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகத்திற்கு புதிதாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக தெரிவிக்கப்படும் செய்திகள் உண்மைத்தன்மை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களை இனங்காணும் நடவடிக்கை மாத்திரமே இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் …

Read More »

கட்டுப்பணத்தை இழந்த 33 ஜனாதிபதி வேட்பாளர்கள்!!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களுள் 33 பேர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே இவர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். இதில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திசாநாயக்கவும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரு வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகிய இருவர் மாத்திரமே 5 சதவீதத்திற்கு அதிகமான …

Read More »

கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்கலாம்!!

நடைமுறையில் உள்ள தேர்தல் காலத்தில் கட்சி ஆதரவாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவிற்கு அறியதருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கேட்டுள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்த தமது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த …

Read More »

கூட்டு எதிரணி கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம்!!

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று இன்று (19) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்றிரவு 7 மணி அளவில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளார். இதன்போது கூட்டு எதிரணி எதிர்காலத்தில் செயற்பட வேண்டிய விதம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளது. அதேபோல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும், பாராளுமன்றத்தை …

Read More »

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றமே இன்று (19) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு …

Read More »

புதிய ஜனாதிபதிக்கு UN மற்றும் EU வாழ்த்து தெரிவிப்பு!!

புதிய ஜனாதிபதிக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. கொழும்பில் உள்ள ஐ.நா.அலுவலகம் டுவிட்டர் பதிவு ஒன்றை இட்டு புதிய ஜனாதிபதிக்கு வாழத்துக்களை தெரிவித்துள்ளது. ஜனதிபதி தேர்தலில் ஜனநாயக முறையில் மக்கள் வாக்களித்ததை ஏற்றுக்கொள்வதாகவும், சமாதானம், நல்லிணக்கம், மனித உரிமைகள், நிலையான அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தொடர்ந்தும் இணைத்து கடமையாற்ற எதிர்பார்ப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் புதிய ஜனாதிபதி …

Read More »

பிரதமர் விடுத்துள்ள அறிக்கை!!

ஜனாதிபதி தேர்தல் அமைதியாகவும் நீதியான முறையிலும் நடைபெற்றதோடு, வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சகல உத்தியோகத்தர்களுக்கும் எந்தவிதத்திலும் அரசியல் ரீதியான அச்சுறுத்தல் இன்றி சுதந்திரமாகவும் நீதியான முறையிலும் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதால் …

Read More »

புதிய ஜனாதிபதி நாளை கடமைகளை பொறுப்பேற்பார்!!

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (19) காலை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி செயலகத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஜனாதிபதியின் செயலாளராக பேராசிரியர் பீ.பி ஜயசுந்தர நியமிக்கபடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரிஷாட்!!

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேன்மை தங்கிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும் எனது மக்களினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாகஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவளித்து, வாக்களித்த அனைவருக்கும் எனது …

Read More »

கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி!!

நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து இன்று (18) கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

இலங்கை சிறுபான்மையினரின் பாதுகாப்பில் இருந்து இம்மியளவும் விலகக்கூடாது!!

இலங்கையில் வாழும் ஈழ தமிழக்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருந்து இந்திய மத்திய அரசு இம்மியளவும் விலகக்கூடாது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கையின் எழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸ இன்று (18) பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ள நிலையில் தமிழக ஊடகங்கங்களிடம் வைகோ இதனை கூறியுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சஜித் பிரேமதேசாவுக்கு …

Read More »

புதையல் தோண்டிய நால்வர் கைது!!

தெதிகம கெடவலதெனிய பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவரச அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலத்கோஹபிட்டிய, கொட்டியாகும்புர, பெலவத்த மற்றும் பாதுக்க பகுதிகளை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 20, 49, மற்றும் 58 வயது பிரிவுகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை இன்று (18) வரகாபொல நீதவான் …

Read More »

இன்றைய வானிலை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த …

Read More »

புதிய ஜனாதிபதிக்கு சஜித் வாழ்த்து!!

கடும் ஆர்வமும் போட்டித் தன்மையும் நிறைந்த தேர்தலின் பின்னர் தாம் மக்கள் தீர்மானத்தை மதித்து, இலங்கையின் 7வது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் திரு.கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட அறிவித்தலை விடுத்திருக்கும் திரு.சஜித் பிரேமதாச, தமக்கு வாக்களித்த சகல பிரஜைகளுக்கும்இ தேர்தல் பிரசாரத்தில் தம்முடன் இணைந்து பணியாற்றிய சகலருக்கும் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வாக்காளர்கள் மேற்கொண்ட தீர்மானத்தைப் பரிசீலித்து …

Read More »

கபீர் ஹஷீமும் பதவி விலகினார் !!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்தும் அவரது அமைச்சர் பதவியில் இருந்தும் விலகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு!

SS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #Theera_Kadhal காணொளிப்பாடலின் முதற்பார்வை மற்றும் முன்னோட்டம் கடந்த 09 ஆம் திகதி அன்று, நெடுஞ்சாலை மாயா புகழ் தென்னிந்திய நடிகர் ஆரியினால் வெளியிடப்பட்டது. இந்த பாடலின் சொந்தக்காரரான ஷமீல், 3 ஜனாதிபதி விருதுகள் …

Read More »