Home / ஒன்றிய செய்திகள் (page 3)

ஒன்றிய செய்திகள்

விழாமலரில் பிரசுரிக்கப்பட்ட, “புங்குடுதீவு எழில்மிகு தோற்றங்களில் சில”…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும் -2017” நிகழ்வை முன்னிட்ட விழாமலரில் பிரசுரிக்கப்பட்ட, “புங்குடுதீவு எழில்மிகு தோற்றங்களில் சில”… (*** புகைப்படங்களை அழுத்தி (புகைப்படங்களை “கிளிக்” பண்ணி) பார்ப்பதன் மூலம் தெளிவாக பார்வையிட முடியும்… ***)

Read More »

விழாமலரில் பிரசுரிக்கப்பட்ட, “ஒன்றிய செயற்பாடுகளில் சில புகைப்படங்கள்”…

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும் -2017” நிகழ்வை முன்னிட்ட விழாமலரில் பிரசுரிக்கப்பட்ட, “ஒன்றிய செயற்பாடுகளில் சில புகைப்படங்கள்”… (*** புகைப்படங்களை அழுத்தி (புகைப்படங்களை “கிளிக்” பண்ணி) பார்ப்பதன் மூலம் தெளிவாக பார்வையிட முடியும்… ***)

Read More »

புங்குடுதீவு ஒன்றியம் சுவிஸ்: 28.03.2016 – 05.01.2017 வரையான வரவு செலவு கணக்கும், ஆண்டறிக்கையும்…

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து 28.03.2016 – 05.01.2017 வரையான வரவு செலவு கணக்கும், ஆண்டறிக்கையும்… ஊர் பற்றும், நேசமும் நிறைந்த சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே! நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் புலம்பெயர்ந்த தேசத்தில் இயந்திர வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையிலும் நாம், நம் பிறந்த மண்ணை மறவாது அம்மண்ணிற்கு சிறிதளவேனும் நன்மை செய்ய வேண்டுமென பலரது கடும் முயற்சிகளினால் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் …

Read More »

தூரநோக்கு சிந்தனையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்.. -சொக்கலிங்கம் ரஞ்சன்

தூரநோக்கு சிந்தனையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்.., -ஒன்றியத் தலைவரின் பார்வையில் ஒன்றியத்தின் வளர்ச்சியும், எழிற்சியும்..! இந்துமா சமுத்திர கடலின் தாலாட்டில் தங்க தாமரை பூவாக மிதக்கும் எங்கள் புங்குடுத்தீவின் உறவுகளே, உங்களோடு சில நிமிடம் இந்த மலரில் எனது உணர்வுகளையும் எண்ணங்களையும் பதிவு செய்கின்றேன். வேரும் விழுதுமாய் ஊரும் உறவுகளுமாய் பாரில் நாம் பாசத்தோடு இணைந்து நிற்கும் காலம் இது. காலசுழற்சியில் நாம் கருவறை சொந்தங்களுக்காக உருகி எமது வியர்வை துளிகளை …

Read More »

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு” -செ.சதானந்தன் (செயலாளர்)

** நாம் பொறுப்பேற்றதில் இருந்து, இன்றுவரை (18.12.2016) நடைபெற்ற சுவிஸ் ஒன்றியத்தின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கை.. ** “ஒன்றுபடடால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு” -செ.சதானந்தன். (செயலாளர்) *** சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டமும், புதிய நிர்வாகசபை தெரிவும் (28.03.2016).. கடந்த 28.03.2016 சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டமும், நிர்வாகசபையின் கலந்துரையாடலும், “புதிய நிர்வாகசபையின் தெரிவும்” சூரிச் வரசித்தி …

Read More »

மூன்றாவது தலைமுறையினர் கூட, பிறந்த மண்ணுக்கு உதவுவதை பார்த்து பூரிப்படைகிறேன்.. -பொன்.சுந்தரலிங்கம்.

மூன்றாவது தலைமுறையினர் கூட, பிறந்த மண்ணுக்கு உதவுவதை பார்த்து பூரிப்படைகிறேன்.. -பொன்.சுந்தரலிங்கம். அலைகடல் தாண்டி வந்து புங்கையில் நிலை பெற்று அருள் சுரக்கும் காவல் தெய்வம் கண்ணகியாள் பாதம் பணிந்து, ஊருக்கும் உறவுகளுக்கும் உதவி செய்து வரலாற்றில் தடம்பதித்து உயர்வு பெற்ற உன்னத மாமனிதர்களை மானசீகமாய் வணங்கி பிறந்த ஊருக்காய் தங்கள் உழைப்பிலும் உறவுகளின் ஒன்றிணைந்த கரங்களின் நன்கொடையிலும் உதவி நிற்கும் புலம்பெயர் ஒன்றியங்கள், சங்கங்கள், மன்றங்களை வாழ்த்தி எனது …

Read More »

இன்னும் வளர்ந்து, வளர்த்திட வாழ்த்துகின்றோம் -சின்னத்துரை இலக்ஸ்மணன்

இன்னும் வளர்ந்து, வளர்த்திட வாழ்த்துகின்றோம் -சின்னத்துரை இலக்ஸ்மணன் “தாய் மண்ணைக் காப்போர் தாழ்ந்திட மாட்டார்” எமது புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் – சுவிஸ், தனது 20ஆவது அகவையைக் காணும் “கலைமாலை” நிகழ்வு சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துவதில் பெருமகிழ்வெய்துகிறோம். தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலிருந்து புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்தாலும் தாய் மண்ணை மறவாது ஆங்காங்கே தமது கிராமத்தின் பெயரால் பல நிறுவனங்களை அமைத்து தமது சொந்த மண்ணில் …

Read More »

மக்கள் சேவையே, மகத்தானதாகும்.. -எஸ்.கே.சண்முகலிங்கம் ஜே.பி

மக்கள் சேவையே, மகத்தானதாகும்.. -எஸ்.கே.சண்முகலிங்கம் ஜே.பி புங்குடுதீவு கிராமத்தில் இருந்து நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த தேசத்தின் உறவுகள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அந்தவகையில் சுவிஸ் நாட்டிற்கு சென்ற எம் உறவுகள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் எதிர்கால சமுதாயத்திற்கு ஏற்டக்கூடாது என்ற மனப்பாங்குடன் தங்களது உழைப்பில் ஓர் சிறய தொகையையாவது தமது சொந்த மண்ணில் வாழ்கின்ற மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்குடன் ஒற்றுமையே உயர்வு என்ற அடிப்படையில் கடந்த …

Read More »

“ஒன்றியம்” தனிநபர்களின் சொத்தல்ல, ஒற்றுமையாய் ஒன்றிணைந்த உறவுகளின் சொத்து.. -கிருஷ்ணகுமார்.

“ஒன்றியம்” தனிநபர்களின் சொத்தல்ல, ஒற்றுமையாய் ஒன்றிணைந்த உறவுகளின் சொத்து.. -கிருஷ்ணகுமார். ஆல்போல் வேரூன்றி விழுதுதாங்கி எமது எதிர்கால சந்ததிக்கு, எம் ஊரின் வளங்களை நல்ல முறையில் கையளிப்பது புங்கையில் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும். நமது தீவின் வரலாறும், பண்பாடுகளும் எமது இளம்தலைமுறைகளுக்கு விளங்கும் வகையில் பதிவுகளாக்கி அவற்றை இளையோர் மூலம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். 1997 இல் சுவிஸில் எங்கள் ஊர் உறவுகள் …

Read More »

புங்குடு தீவதன் பூர்வீகக் குடிகள், புலம்பெயர் சுவிஸில் அமைத்த சங்கமிது.. -திருமதி. த.சுலோசனாம்பிகை

புங்குடு தீவதன் பூர்வீகக் குடிகள், புலம்பெயர் சுவிஸில் அமைத்த சங்கமிது.. -திருமதி. த.சுலோசனாம்பிகை நல்லெழில் யாழ்நகர் மருங்கே யமைந்த நற்பெருந் தீவுகளில் ஒன்றாம் பல்லோரும் போற்றும் புங்குடு தீவினைப் பாரினில் உயர்த்தப் பாடுபட்டே நல்லரும் பணிகள் நாடிமிகச் செய்யும் நலனுதவு ஒன்றியம் வாழியவே பல்வளமும் பெருகப் பாரினில் பல்லாண்டு பணிமிக ஆற்றி வாழியவே புங்குடு தீவதன் பூர்வீகக் குடிகள் புலம்பெயர் சுவிஸில் அமைத்த சங்கமிது தன்பணி சால்புறச் செய்தே சகமீது …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திற்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். -அரியபுத்திரன் நிமலன்

இருபதாவது வருடத்தில் கால்பதிக்கும் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திற்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன். -அரியபுத்திரன் நிமலன் கால மாற்றத்தில் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய தமிழ் பெரும் குடிமக்கள் கால் நூற்றாண்டிற்கும் மேலாக புலம்பெயர் தேசம் தனில் வாழ்கின்ற சூழலில் இருபதாவது வருடத்தைத் தாண்டி வீறுநடை போடுகின்ற ஒரு மக்கள் மன்றமாக எமது ஒன்றியம் இருப்பது எம் அனைவருக்கும் பெருமையே. அவ்வொன்றியம் காலமாற்றத்திற்கும் தாயக நிலைமைகளுக்கும் ஏற்ப …

Read More »

போரினால் சிதைந்த புங்குடு தீவைப் புவியதில் உயர்த்த உழைத்த சுவிஸ் ஒன்றியம்.. -கனகசபை சதீஷன்..

போரினால் சிதைந்த புங்குடுதீவைப் புவியதில் உயர்த்த உழைத்த சுவிஸ் ஒன்றியம்.. -கனகசபை சதீஷன்.. போரினால் சிதைந்த புங்குடு தீவைப் புவியதில் உயர்த்த உழைத்த சீரியநற் சுவிஸ் விழிப்புணர்வு ஒன்றியம் சிறப்புற ஓங்கியே வாழியவே கல்வியில் மேன்மை கண்டிட உழைத்து கருத்துடன் பணிசெய் ஒன்றியம் செல்லிடம் எங்கும் சீர்பெற்று ஓங்கியே செகத்தில் வாழிய பல்லாண்டு போக்கு வரத்தினை இலகு படுத்திடப் புதுக்கியே வீதிகள் அமைத்து ஊக்க மளித்தே யுதவிகள் புரிந்து உயர்வே …

Read More »

புங்குடுதீவு ஒன்றியம் சுவிஸ்: வட மாகாண ஆளுநரின் செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி..

ஆளுநர் செயலகம் வட மாகாணம் 48, காட்டுக்கந்தோர் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம். புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து நடாத்தும் ஆண்டு விழா -2017 வட மாகாண ஆளுநரின் செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி! புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து நடாத்தும் ஆண்டு விழா – 2017 கொண்டாடப்படுகின்ற இந்நாளில் இவ் நிகழ்வுக்கான வாழ்த்துச்செய்தி வழங்குவதிலும் இவ்விழாவில் பங்குபற்றுவதிலும் பெருமிதம் அடைகின்றேன். “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானிலும் நனிசிறந்தன” என்ற …

Read More »

தப்பாமற் பணி செய்து, தரணிமிசை எங்கள் “தாயகமாம்” புங்குடுதீவினையே… -“தாயகம்” அமைப்பு

தப்பாமற் பணி செய்து, தரணிமிசை எங்கள் “தாயகமாம்” புங்குடுதீவினையே… -“தாயகம்” அமைப்பு இலங்கா புரியின் சிரமெனவே யோங்கும் சிறப்புறு யாழ்நகர் ஆங்கே பேர்பெறு புங்குடு தீவென்னும் ஊரின் பெருமையது ஓங்கிச் சிறப்புற பேர்பெருகு திட்டங்கள் பற்பலவும் தீட்டிப் பெட்புடன் ஆற்றிடும் ஒன்றியம் ஊர்புகழ எஞ்ஞான்றும் ஊயர்ந்து ஓங்கி உர்வோங்கி வாழிய பல்லாண்டு புலம்பெயரந்து வாழும் புங்குடு தீவின் புத்திரர்கள் ஒன்றாய்க் கூடியே நலம்பெற அமைத்த நற்பணி மன்றம் நலமோங்கி வாழிய …

Read More »

புங்கை மண் மீதிலே தீராத காதலில், எம் மனங்களையும் வென்றாய்.. –மன்மகன்

புங்கை மண் மீதிலே தீராத காதலில், எம் மனங்களையும் வென்றாய்.. –மன்மகன் புழுதி குளித்த எம் கடல் காற்று வாசத்தில் புலத்திலும் எம் மண்ணின் உணர்வு. புங்கை மண் மீதிலே தீராத காதலில் புனிதமான இருபது வருட சேவை. புங்குடுதீவுக்கும் இதுதான் தேவை. சான்றோர்கள், கற்றோர்கள் சரித்திரம் படைத்து வாழ்ந்த தாய் மண் சரிவு காண்பதை விரும்பாமல் -அதை சரிசெய்து மீள் நிமிர்த்திட -இச் சந்ததியினரால் உதயமானது- அதுதன் சுவீஸ் …

Read More »

எமது ஊரை உலக அரங்கில், அழகு தீபமாய் ஒளிர வைப்போம் -சஞ்சய் லிங்கம்.

எமது ஊரை உலக அரங்கில், அழகு தீபமாய் ஒளிர வைப்போம் -சஞ்சய் லிங்கம். ஒளிரும் அழகுதீபம் புங்குடுதீவு.. அ.., மண்ணில் எழுதி அம்புலி மாமா பார்த்து ஒளவையார் கதை பேசி அம்மம்மா கரம் பிடித்து தவழ்ந்து எழுந்து விழுந்து, நடை பழகிய புனிததாய் மண் அது அதுவே எனது புங்குடுதீவு மண்.. அக்காவின் கரம் பிடித்து ஆனந்தமாய் ஓடிச் சென்று வற்றாத கல்வி செல்வம் வளர் பருவத்தில் கற்ற வித்தியாலயங்கள் …

Read More »

ஒன்றிணைவோம் உறவுகளே, ஒற்றுமையாய் வந்திடுங்கள்.. -சிவமேனகை.

ஒன்றிணைவோம் உறவுகளே, ஒற்றுமையாய் வந்திடுங்கள்.. -சிவமேனகை. புங்கை மர வாசம் புலத்திலும் உணர்கின்றோம், தங்கை தம்பி வாழ்வுக்காய் எங்கள் கரம் குவிக்கின்றோம், வங்கமா கடல் காற்று எம் நினைவுகளை தழுவுதம்மா, பொங்குகின்ற உணர்வுகள் தாய் மண்ணுக்காய் ஏங்குதம்மா(புங்கை மர ) ஆலடியின் நினைவுகள் ஆழமாக இருக்கிறது பால பாட பள்ளி இன்னும் பதியமாக நிற்கிறது சோலை குயில் கூவும் சத்தம் செவிகளிலே ஒலிக்கிறது வேலை செய்த வயல் வரப்பில் கனவிலும் …

Read More »

சொந்த ஊரைவிட்டு கடல்கடந்து சென்றாலும்கூட, உங்கள் சேவை பாராட்டுக்கு உரியதே -செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு

சொந்த ஊரைவிட்டு கடல்கடந்து சென்றாலும்கூட, உங்கள் சேவை பாராட்டுக்கு உரியதே -செல்வி ஜெகநந்தினி முத்துக்குமாரு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது 20வது நிறைவு விழாவை கொண்டாடுமுகமாக வேரும் விழுதும் கலைமாலை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சொந்த ஊரைவிட்டு கடல்கடந்து சென்றாலும்கூட அனைத்து புங்குடுதீவு உறவுகளும் ஒன்றுசேர்ந்து நடாத்துகின்ற இந்நிகழ்வானது பாராட்டத்தக்கது. குறிப்பாக பொதுஅறிவுப்போட்டி, கலைநிகழ்வுகள் என்பன வரவேற்கத்தக்கன. சொந்த ஊரிலே வாழும் மக்களுக்காக செய்யும் …

Read More »

விண்ணுயரப் புகழ்பெறட்டும் “வேரும் விழுதும்”.. -புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -பிரான்ஸ்.

விண்ணுயரப் புகழ்பெறட்டும் “வேரும் விழுதும்”.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமானது பிறந்த கிராமத்தின் அபிவிருத்தியையும், அங்கு வாழும் எம் உறவுகளின் அல்லல் நிலை போக்குவதையும் தலையாய கடமையாகக் கொண்டு வருடந்தோறும் நடாத்திவரும் வேரும் – விழுதும் நிகழ்வானது இந்த வருடமும் 28.01.2017 சனிக்கிழமை சுவிஸ் நாட்டில் வெகு சிறப்பாக நடைபெறவிருப்பதையிட்டு பெருமகிழ்வடைகின்றோம். தாயகத்தின் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அங்குள்ள கிராமப்புற மக்களின் பெரும் பகுதியினர் தமது வாழ்வாதாரங்களை இழந்து …

Read More »

சேவை செய்யும் போது, மனம் திறந்து வாழ்த்திட வேண்டும்.. -ஜெயக்குமார் (பாபு)

சேவை செய்யும் போது, மனம் திறந்து வாழ்த்திட வேண்டும்.. -ஜெயக்குமார்(பாபு) புங்கை நகர் பொலிவு பெற புலம் பெயர்ந்த நீங்கள் செய்த பல புண்ணியங்கள் கோடி அவற்றைச் செய்தவர்களே நீடூழி வாழி! எண்ணில் அடங்காத ஏற்றம் எளிமையான நல்ல திட்டங்கள் வளம் சிறக்கும் தோற்றங்கள் இவை தான்……….. புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்த நல்ல மாற்றங்கள் சமூகத்தின் தேவைகள் அறிந்து-அது தம் பிரச்சினை என உணர்ந்து உடனே தீர்வுக்கு பறந்து …

Read More »

புலம் பெயர்ந்தாலும் அகம் பெயராமல், பிறந்த மண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் ஒன்றியத்தினருக்கு வாழ்த்து…

புலம் பெயர்ந்தாலும் அகம் பெயராமல், பிறந்த மண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் ஒன்றியத்தினருக்கு வாழ்த்து… புலம் பெயர்ந்தாலும் அகம் பெயராமல், பிறந்த மண்ணின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டு, அம்மண்ணின் மீளெழுச்சிக்காக பல நற்பணிகளைச் செய்து கொண்டிருக்கும், சுவிற்சர்லாண்ட் தேசத்தின் ” புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” தனது 20 வது அகவையைக் கொண்டாடும் இந்நேரத்தில், அவர்களின் வருடாந்த நிகழ்வான, ” வேரும் விழுதுகள்” நிகழ்வு மிகவும் சிறப்புற நடைபெறுவதில், மண்ணின் மைந்தனாக …

Read More »

உங்கள் சீரிய பணியால், இன்று சிரிக்கின்றோம்… -தயாபரன் (தயா)

உங்கள் சீரிய பணியால், இன்று சிரிக்கின்றோம்… -தயாபரன் (தயா) சமூக அடிப்படைத் தேவைகளை அகற்றி அபிவிருத்திப் பாதையில் கூட்டிச் சென்று புங்கை நகருக்கு ஒளி கொடுத்த. புனிதமே… புங்குடுதீவு மக்கள் ஒன்றியமே.. கல்வி, சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து வசதி இன்னும் பிற தேவைகள் அறிந்து சேவை செய்த தெய்வங்களே… புங்கை நகரின் நம்பிக்கை நாணயங்களே நானிலம் சிறக்க நல்ல பல திட்டங்கள் தீட்டிய தாயகத்து உறவுகளே.. நாங்கள் வாழ்வதற்கு வழி …

Read More »

“புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு புனரமைப்புக்கு” நிதி வழங்கிய, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்..!

“புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு புனரமைப்புக்கு” நிதி வழங்கிய சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்..! புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கினை புனரமைப்பது தொடர்பாக அண்மையில் கனடாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. பொன் சுந்தரலிங்கம் அவர்களுடன் கடந்த 06.06.2016 அன்று சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் நிர்வாக சபையினர் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் நடாத்திய கலந்துரையாடலின்போது, ஒன்றியத்தின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையினை இதற்கென ஒதுக்கித் தருவதாக அவரிடம் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” பீங்கான் விழாவை முன்னிட்டு, வாழ்த்துப்பாமாலை -“தமிழ்க்கவி”

சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பீங்கான் விழாவை முன்னிட்டு ( 20வது ஆண்டு நிறைவு) வழங்கப்பெற்ற வாழ்த்துப்பாமாலை (எழுசீர் விருத்தம்)… பொன்கொடு தீவெனப் புகன்றிடும் ஊராம் புங்குடுதீவின் மேன்மைக்காய் நாளும் நன்செயல் புரியும் நற்பணி ஒன்றியம் நலமொடு வாழியவே பல்லாண்டு நன்னிலை பெற்றிட மாணவர்க் குதவிகள் நலம்பெறு வைத்திய சேவைகள் முன்னின் றுதவியே முனைப்புறு மொன்றியம் முகிழ்த்துமே வாழிய பல்லாண்டு புலம்பெயர் நாடாம் சுவிஸ்வாழ் உறவுகள் புத்துணர்வோ …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திற்கு, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் -திருமதி.தனம் தமிழ்வாணன்…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் -திருமதி.தனம் தமிழ்வாணன்… சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது சேவையிலே இருபதாவது ஆண்டில் காலடி பதிப்பதையிட்டு மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியமானது ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு புங்குடுதீவினதும், புங்குடுதீவு மக்களினதும் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் அதீத அக்கறை கொண்டு பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றது. முக்கியமாக புங்குடுதீவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கான உபகரண …

Read More »

‘வேரும் விழுதும்” வெற்றிபெற வாழ்த்துகிறேன்! -கனகசபை அரியரத்தினம்

‘வேரும் விழுதும்” வெற்றிபெற வாழ்த்துகிறேன்! -கனகசபை அரியரத்தினம் எத்தனை வருடங்கள் எம்கிராமத்தைப் பிரிந்து வாழ்ந்தாலும் கடந்தாலும், எவ்வளவு து+ரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் நம் உயிர் உள்ள வரை பிறந்த மண்ணையும், தாய் மொழியையும் தாய் மண்ணையும் மரணத்திலும் மறவாத மாண்புமிக்கவர்கள் புங்குடுதீவு மக்கள். அதானல் தான் தாங்கள் பிறந்த கிராமமான புங்குடுதீவு மண்ணைப் பிரிந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு எத்தனை வருடங்களைக் கடந்தாலும் எந்த …

Read More »

பாணாவிடை சுயம்புலிங்க பெருமானின் நல்லாசியுடன், ஒன்றியத்தின் சேவை தொடர வாழ்த்துகிறோம்..

பாணாவிடை சுயம்புலிங்க பெருமானின் நல்லாசியுடன், ஒன்றியத்தின் சேவை தொடர வாழ்த்துகிறோம்.. சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய “வேரும்விழுதும் விழா” சிறப்பாக நடைபெற எமது கிராமத்தின் பழமையும் சித்தர்களும், ஞானிகளும், சமயப்பெரியோர்களும் தோன்றிப் பெருகிய பகுதியில் அமைந்த பாணாவிடை சுயம்புலிங்க பெருமானின் அருளை வேண்டுகின்றோம், சங்கம் வளர்த்த ஆதிகாலம் தொட்டு பெரும்தகை வாணர் சகோதரர்கள் உட்பட பலர் வளர்த்த காலணித்துவ கால சங்கமும், அரசியல் காரணத்தினால் புலம்பெயர்ந்த கால் நூற்றண்டு …

Read More »

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், புங்கை மண்ணின் தென்னங்கீற்று தென்றல் காற்றையே சுவாசிக்கின்றோம்.. -பிரதீபன்

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், புங்கை மண்ணின் தென்னங்கீற்று தென்றல் காற்றையே சுவாசிக்கின்றோம்.. -பிரதீபன். ஆம் அன்று தென்றல் வருடி சென்ற என் உடல் சிந்தும் வியர்வை துளி இன்று என் ஊரின் வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று நினைக்கும் பொழுது மனம் சந்தோஷத்தில் மிதக்கிறது.காலம் நான் தாயின் கருவறையில் இருந்து தவழ்ந்து விளையாடிய தேசத்தையும் என்னையும் பிரித்திருந்தாலும், நான் ஒவ்வொரு வினாடியும் சுவாசிக்கும் காற்றில் அந்த தாய் மண்ணின் வருடல் இருப்பதாகவே இன்றும் …

Read More »

எங்கள் ஊர் சிறப்புற தாங்கள் ஆற்றும் சேவை மனம் நிறைகின்றது.. -கி.பாஸ்கரன்

எங்கள் ஊர் சிறப்புற தாங்கள் ஆற்றும் சேவை மனம் நிறைகின்றது.. -கி.பாஸ்கரன் இருபது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்” அமைப்பினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும். எங்கள் ஊர் சிறப்புற தாங்கள் ஆற்றும் சேவை மனம் நிறைகின்றது. தொடர்ந்தும் சிறப்புற செயல்பட்டு எங்கள் ஊர் மகிமையையும், மண்ணையும், வளம்படுத்தி, எமது ஊர்மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன். சுவிஸ் …

Read More »

இசையால் வசமாகும் அனைத்து உயிர்களையும் போல்.. – “சுவிஸ் ராகம்” கரோக்கி இசைக்குழு

“வேரும் விழுதும்” என்ற கலைமாலை நிகழ்விலே வெளியிடப்படும் மலருக்கு வாழ்த்துச் செய்தி… சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு நடைபெறும் “வேரும் விழுதும்” என்ற கலைமாலை நிகழ்விலே வெளியிடப்படும் மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதையிட்டு அகமகிழ்கின்றோம். ” பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானிலும் நனி சிறந்ததுவே….” என்பதற்கு அமைய, நாம் பிறந்த நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் கடந்த 25 வருடங்களுக்கு முன் …

Read More »

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக நீக்கம்..!! (வீடியோ)

அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். மெரீனாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியின் முன்னிலையில் நேற்றிரவு 40 நிமிடங்களுக்கு மேல் மௌன அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு பன்னீர்செல்வத்தின் அதிரடியான பேட்டியை தொடர்ந்து போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் …

Read More »

புங்கை நகரின் மேன்மைக்கு, புத்தொளி செய்த புண்ணியங்களே.. -வசந்தகுலசிங்கம் (வசந்தன்)

புங்கை நகரின் மேன்மைக்கு, புத்தொளி செய்த புண்ணியங்களே.. -வசந்தகுலசிங்கம் (வசந்தன்) தன்னார்வ பணி செய்து புங்கை நகரின் மேன்மைக்கு புத்தொளி செய்த புண்ணியங்களே புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்து தெய்வங்களே.. தேவைகள் கண்டு மக்கள் குறை தீர்க்க பாதைகள் செய்தவரே வேதனைகள் போக்க சாதனை செய்ய சத்திய வான்களே – தன்னலம் கருதா உள்ளங்களே. கல்வி தொடக்கம் மருத்துவம் வரை எண்ணி எண்ணி பணி செய்ய மண்ணை விரும்பிய மா வீரர்களே …

Read More »

கலைமாலை, புகழ்மாலை சூடவே… -கண்ணகைபுரம் A.Raveendran

கலைமாலை புகழ்மாலை சூடவே… வேரினை மறவாத விழுதுகள் இங்கே பாசத்தேரினை இழுக்கின்றனவே. புலம் பெயர்ந்தாலும் உளம் பெயரா உறவுகள். நிலம் வாழும் நெஞ்சங்களுக்காக‌ களம் காணும் நிகழ்ச்சி. உண்மையில் பெருமகிழ்ச்சி. அன்பின் எழுச்சி. ஆறுதலின் வளர்ச்சி. கலைமாலை என்பது நம் கரமாலை. எழையர்க்கு உதவும் தரமாலை. ஈழ உறவுகளுக்கான உரமாலை. அன்பு நிறமாலை. புங்கை மண்ணின் தங்க மனசுகள் எங்கே வாழ்ந்திடினும், அங்கே வாழ்வோரை ஏற்றி வைத்திட அகமிணையும் அற்புத …

Read More »

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைக்க வேண்டும் -லீஸ் இளம் நட்ச்சத்திர விளையாட்டுக்கழகம்

“வேரும் விழுதும்” எனும் மலர் வெளியீட்டுக்கான வாழ்த்துச் செய்தி… சுவிஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு பூர்த்தியும் “வேரும் விழுதும்” எனும் மலர் வெளியீட்டுக்கான வாழ்த்துச் செய்தியும். புலம் பெயர்ந்து வாழும் எம் உறவுகள் தாம் வாழ்ந்த தம்மை நன் நிலைக்குஉயர்த்தி விட்ட தமது சொந்த மண்ணை நேசிக்கின்ற ஒர் வெளியீடாகவே நாம் “வேரும் விழுதும்” என்னும் நூலைப் பார்க்கின்றோம். நாம் போட்டியிலே வெற்றி பெற ஒவ்வொரு வீரர்களும் …

Read More »

பயணங்கள், பாச உறவுகளுக்காய் தொடரும்.. -அ.கைலாசநாதன் (குழந்தை)

பயணங்கள், பாச உறவுகளுக்காய் தொடரும்.. -அ.கைலாசநாதன் (குழந்தை) ஒன்றியத்தின் வளர்சிக்காய் ஒருமுகப்பட்ட சிந்தனையோடு இணைந்து நிற்கும் நாங்கள், புங்கைமண்ணின் எதிர்காலத்துக்காக பல திட்டங்களை வகுத்து நெறிப்படுத்தி வருகின்றோம். புலம்பெயர் தேசங்களிலும், புங்கை உறவுகளின் உறவு பாலத்தை ஒரு பலமான கட்டமைப்பாக ஒழுங்குபடுத்தி எமது ஊரின் கலை கலாசார பண்பாட்டு நிகழ்வுகளை ஒரு ஒழுங்கமைப்புக்குள் செய்ய காத்திரமான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றோம். கடந்த கால தவறான வழிகாட்டல்கள், கசப்பான செயல்பாடுகளை தவிர்த்து; …

Read More »

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம்… -புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம்… -புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா ‘வேரும் விழுதும் விண்ணை தொடட்டும்” புங்குடுதீவு சுவிஸ் வாழ் மக்கள் அனைவரும் இணைந்து கொள்ளும் இனிய நாள் இன்று. அதே போல் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் இருபத்தோராம் ஆண்டில் கால்பதிக்கும் நாள் இரட்டிப்பு மகிழ்வுடன் வேரும் விழுதும் விண்ணை தொடட்டும் என மனதார வாழ்த்துகின்றோம். தனி மனிதனையும் அவன் இணைந்த சமூகத்தையும் வளம்படுத்த பெரிதும் …

Read More »

புங்கை நகரின் பொலிவு, போற்றுவோம் வாரீர்… -திரு.பன்னீர்செல்வம்.

புங்கை நகரின் பொலிவு, போற்றுவோம் வாரீர்… -பன்னீர்செல்வம். புங்கை நகரின் பொலிவு போற்றுவோம் வாரீர்…. வாரீர் எங்கையடா இருந்து செய்யுராங்கள் இந்த ஏக்கமே பலரிடம் இன்று. கல்விக்கு கலங்கரை விளக்கம் குடி தண்ணீருக்கு ஆத்ம திருப்தி சுகாதாரத்திற்கு பேருதவி செய்கின்ற புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் வாழிய வாழ்க… தன்னலம் கருதா மாந்தர் தாம் பிறந்த ஊரின் தேவை அறிந்து எண்ணிய நடைமுறை நன்றே. இதை ஏற்றமுடன் செய்தனரே இன்றே… உதவிகள் …

Read More »

இருபதாமாண்டில் அடி எடுத்து வைக்கும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. -ராசன் (கனடா) !!

இருபதாமாண்டில் அடி எடுத்து வைக்கும் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. -ராசன் (கனடா) !! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஒரு மக்கள் அமைப்பாக, அம் மக்கள் சேவையில் பத்தொன்பது ஆண்டுகளைக் கடந்து இருபதாவது ஆண்டில் காலடி பதிப்பதையிட்டு அதனை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய நிர்வாகம் “ஒன்றிய செயற்பாடுகளில்” அரசியலை கலக்காது, எக்கால கட்டத்திலும், “சார்பு அரசியல்” …

Read More »

“சரவணை உறவுப்பாலம்” அமைப்பின் வாழ்த்துரை..

“சரவணை உறவுப்பாலம்” அமைப்பின் வாழ்த்துரை.. (*** “வேரும் விழுதும்” விழா மலரில் பதிவு செய்யப்பட்டது) “வேரும் விழுதும்” விழாமலரில் பதிவு செய்யப்பட்ட அனைவரது வாழ்த்துக்களும், தொடர்ச்சியாக தினமும் “ஒன்றிய இணையத்தில்” வெளிவரும்…

Read More »

பணிகள் பற்பலவும் ஆற்றி, ஓங்கியே யுயர்ந்து ஒளிர்வுற வாழியவே.. -திரு.கே.என்.விந்தன் கனகரத்தினம், (வடமாகாண சபை உறுப்பினர்)

பணிகள் பற்பலவும் ஆற்றி, ஓங்கியே யுயர்ந்து ஒளிர்வுற வாழியவே.. –திரு.கே.என்.விந்தன் கனகரத்தினம், (வடமாகாண சபை உறுப்பினர்) சுந்தரத் தீவாம் சுவிற்சர் லாந்தில் சந்ததம் வளரும் சால்புறு ஒன்றியம் முந்தையோர் போற்றும் புங்குடுதீவை இந்நிலத் துயர்த்தி இனிதுற வாழியவே பெருமையுறும் ஊரைப் பேணியே காத்து இருபது ஆண்டாய் இன்பணி ஆற்றிடும் ஒருபெரும் ஒன்றியம் ஓங்கியே வளர்ந்து மருவின்றி வாழிய மாநிலம் தன்னில் பொதுப்பணி யதனைப் புனிதமாய் செய்து புத்துணர்வு அளித்துப் புங்குடு …

Read More »