Home / செய்திகள் / சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

திருமணத்தில் இணைந்த காதல் ஜோடி!

இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்குக்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இத்தாலியில் வைத்து திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பே மும்பையில் இருந்து இருவரும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். அங்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லோக் கோமா பகுதியில் உள்ள வில்லா …

Read More »

அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் – வழக்கு தீவிரம்!

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌‌ஷரா ஹாசன். இந்தியில் அமிதாப் பச்சனும், தனுஷும் இணைந்து நடித்த ‌ஷமிதாப் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் அஜித் குமார் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் அக்‌‌ஷராவின் அந்தரங்க படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுபற்றி அக்‌‌ஷரா வெளியிட்ட அறிக்கையில் ’இந்தப் படங்கள் ஒரு படத்தின் …

Read More »

மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக நடிகர் தகவல் !!

வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானர் விஷ்ணு விஷால். குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ராட்சசன் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர், நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு …

Read More »

பொது மேடையில் நடிகையை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்!!

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்´. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தாமான், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இந்த படத்தின் படபிடிப்பின் …

Read More »

விக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறுமா? (சினிமா செய்திகள்)

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், தற்போதும் இந்திய அணியில் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இதுதவிர, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனிக்கு, தமிழகத்தில் ரசிகர்கள் மிகவும் அதிகமாக உள்ளனர். அந்த வகையில், தமிழ் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவனும் தோனியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். தற்போது அவர் தோனியை சந்தித்து …

Read More »

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை – கணவர் வெளியிட்ட புகைப்படம்! !

சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தவர் காயத்ரி. இவர் இப்போது அதே தொலைக்காட்சியில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியல்களை தாண்டி ஒரு நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. கை எலும்பு முறிந்துள்ளதாக தெறிவிக்கப்பட்டது. மோசமாக அடிபட்டிருக்கும் அவர் இப்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு காயத்ரியின் கணவர் யுவராஜ் தனது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை போட்டு …

Read More »

இணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்! !

விஜய் படங்கள் என்றாலே வசனங்களும், பாடல்களும் மாஸாக தான் இருக்கும். அந்த வகையில் சர்கார் படத்திற்கு அந்த மாதிரியான எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடலை கொடுத்த விவேக் தான் சர்கார் படத்திலும் பாடல்கள் எழுதியள்ளார். அண்மையில் இசைவெளியீடு விழாவும் பெரியளவில் நடத்தப்பட்டது. இதில் சிம்டாங்காரான் பாடல் லிரிக் வீடியோவே ஒட்டு மொத்த ரசிகர்களையும் கொண்டாடவைத்தது. இப்பாடலின் ஒரு நிமிட காட்சியை வீடியோவாக வெளியாகியுள்ளது. …

Read More »

நான் செய்த தவறு, முதல் திருமணம்!

தமிழில் நான் அவனில்லை, அரவான், துணை முதல்வர் ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். ஜெயபாரதியின் ரதிநிர்வேதம் படத்தின் ரீமேக்கிலும் நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் வந்தார். இவர் பாபி போன்ஸ்லே என்பவரை முதலில் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். 2-வதாக கேரளாவை சேர்ந்த ஸ்ரீவல்சன் மேனன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு சபைனா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த …

Read More »

பிறந்த குழந்தையுடன் பலியான இசையமைப்பாளர் – விசாரணையில் திடுக்கிடும் உண்மை!!

கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் கடந்த செப்டம்பர் 25 ல் தன் மனைவி, குழந்தை தேஜஸ்வினியுடன் திருவனந்தபுரம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கினர். இதில் அவரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். பாலா பாஸ்கர் மற்றும் அவரின் மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவரின் மனைவி ஓரவுளவு குணமாகிவிட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். விபத்தின் போது ட்ரைவர் அர்ஜூன் தான் …

Read More »

சிம்பு படத்தில் ஐஸ்வர்யா தத்தா !!

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதில் ரித்விகா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார். பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டபோதும் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் வரை சென்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பிரிக்க முடியாத தோழிகளானார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்பு அவருக்கான பட வாய்ப்புகள் குறித்த …

Read More »

தற்கொலை எண்ணம் என்னை வாட்டியது! !

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தன்னையும் தற்கொலை எண்ணம் வாட்டியதாக தெரிவித்தார். “எனது 25 வயது வரை, தற்கொலை எண்ணம் எனக்குள் எழுந்ததுண்டு. அவ்வப்போது நம்மில் பலரும், நாம் சிறப்பானவன் கிடையாது என நினைக்கிறோம். நான் என் தந்தையை இழந்ததால் இவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.. அதன்பின் பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. “அவை எல்லாமும் செயலற்று போனதாக இருந்தது. என் தந்தையும் இறந்து விட்டதால், நான் அதிக திரைப்படங்களை ஏற்கவில்லை. எனக்கு …

Read More »

மாதவன் மீது வழக்கு போடும் இயக்குனர் !!

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சினிமா படமாக தயாராகிறது. இதில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இப்படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் மனு கொடுத்தார். இவர் பூ, களவாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி ஆகிய படங்களை …

Read More »

எமனாக மாறும் யோகிபாபு !!

ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக …

Read More »

ரஜினியை சந்தித்த மேரி கோம்!

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீதயா அறக்கட்டளை சார்பில் குழந்தைகளுக்கான அமைதி என்ற நிகழ்ச்சியை சென்னையில் இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பங்கேற்கிறார். இதற்காக சென்னை வந்த மேரிகோம், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறார். ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பற்றிய …

Read More »

சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா !!

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கிவருகிறார். ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார். ‌ஷகிலா இந்தப் பட உருவாக்கத்திலும் பங்காற்றுகிறார். படப்பிடிப்பு தளத்தில் தன்னைப் பற்றியும் தனது வீட்டை, சுற்றியுள்ள இடங்கள் குறித்தும் கலை இயக்குநர் குழுவுக்குக் …

Read More »

பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகையின் புதிய யோசனை !!

பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். தமிழில் ‘என் சகியே’ ‘முத்திரை’ ஆகிய படங்களில் நடனம் ஆடி உள்ளார். இவருக்கும் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பில் தனுஸ்ரீ தத்தா போதையில் இருந்தார் என்று ராக்கி சாவந்த் கூறியதால் அவர் மீது தனுஸ்ரீ மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளர். சஜித்கான் மீ டூ வில் சிக்கியதால் அவர் டைரக்டு செய்வதாக இருந்த ஹவுஸ்புல்–4 …

Read More »

பிரபல தொகுப்பாளர் பாவனா சொன்ன ஹாப்பி நியூஸ் !

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜெ பாவனா பாலகிருஷ்ணன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக விஜய் டிவியில் இருந்து ஒதுங்கியிருந்தார். டீவியை விட்டு அவர் வெளியேறிவிட்டாரோ என பலரும் கேட்கும் அளவுக்கு அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஜோடி நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். இதை அவரே ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். இதனால் பாவனாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் …

Read More »

16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல் !!

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் ‘சக்கலக்க பேபி. லுக்குவிட தோனலையா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்து இருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர் இந்தியா தரப்பில் முதன் முதலில் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷ்மிதா சென்னுக்கு 42 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பெண் குழந்தைகளை …

Read More »

நான் சிவப்பு இல்லை, ஆனால் நடிகை !

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் உட்பட பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கு முன்னணி இயக்குனர்களே பலரும் தேடிச்சென்று வாய்ப்பு வழங்குகின்றனர். அது ஏன் என ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “விஷயம் இல்லாமல் இயக்குநர்கள் என்னைத் தேர்வு செய்ய மாட்டார்கள். என் உடலில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் தமிழ் முகம். நம் …

Read More »

காவல்துறையிலும் மோசமானவர்கள் இருக்கிறார்கள்!

பெண்கள் சினிமா உலகில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில், மீ டூ இயக்கத்தின் மூலம் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கும் இந்தப் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது. நான் பட வாய்ப்பு கேட்டு செல்லும் சமயத்தில் எனது ஆடையைச் சரிசெய்வது …

Read More »

விதவைகள், விவசாயிகளுக்கு 2 கோடி வழங்கிய அமிதாப்பச்சன் !!

பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் அவர் நாட்டைக் காக்கும் பணியின்போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ரூ. 1 கோடியும், கடன்களால் அல்லாடி வருகிற விவசாயிகள் கடன்களை திரும்பத் தருவதற்கு ரூ. 1 கோடியும் என மொத்தம் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை நடிகர் அமிதாப்பச்சன் இப்போது …

Read More »

ரஜினி கதையில் நடிக்கும் விஜய் !!

முருகதாஸ் இயக்க விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 இல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படம் ரஜினி நடிக்க இருந்த கதை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம் பல இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இருவர் ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன். இவர்கள் இருவர் சொன்ன கதைகளும் …

Read More »

கிக்கி சேலஞ்சில் கலக்கிய நடிகை – வைரலாகும் வீடியோ!

கேடி பில்லா கில்லாடி ரங்கா´ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அமைதியான பெண்ணாக நடித்தவர் ரெஜினா. அதனைத் தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு சமீபத்தில் கவுதம் கார்த்திக்கு அவர் ஜோடியாக நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படம் ரிலீசானது. இப்படத்தில் பிகினி உடையில் அவர் கலக்கியிருந்தார். இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரெஜினா. அதில் ஓடும் காரில் இருந்து இறங்கி ஒரு பாப் பாடலுக்கு …

Read More »

பெரும் சிக்கலை சந்தித்த காலா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் கடந்த ஜூன் 7 ல் வெளியானது. ரஞ்சித் இயக்கிய இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வசூல் ரீதியாக பார்த்தால் படத்திற்கு பெரும் பின்னடைவு தான். சில சர்ச்சைகளுக்கு நடுவே கர்நாடகாவில் படம் எப்படியே வெளியாகிவிட்டது. ஆந்திரா, தெலுங்கானாவில் படம் ரூ 27 கோடிக்கு ஷேர் போயுள்ளது. ஆனால் வசூல் வந்தது என்னவோ ரூ 7 கோடி தானாம். இது ரசிகர்களுக்கும், …

Read More »

10 நடிகர்களுடன் களம் இறங்கும் பார்த்திபன் !!

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் …

Read More »

பாலியல் கொடுமை : ரஜினி ஹீரோயின் எதிர்ப்பு !!

ராதிகா ஆப்தே முதல் பல்வேறு நடிகைகள் திரையுலகில் பட வாய்ப்புக்காக பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் படுவதாக பகிரங்கமாக கருத்து கூறி வருகின்றனர். காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்தவர் ஹீமா குரோஷி. தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். பாலியல் சர்ச்சை குறித்து அவர் கூறும்போது,’பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மிருகங்கள் எல்லா துறையிலும் உள்ளனர். அதற்கு திரையுலகம் விதிவிலக்கல்ல. ஆனால் அப்படியொரு பிரச்னையில் சிக்க நேரும்போது அதை எதிர்த்து …

Read More »

முதல் காதலனை சந்தித்த அமலாபால் !!

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் 90 சதவீதம்பேர் முதல்காதல் அனுபவத்தை கடந்து வந்தவர்களாக இருப்பார்கள். இதுபற்றி பல்வேறு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்தார். பிறகு கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். இது அமலாபாலின் 2வது காதல் என்பது தெரியவந்திருக்கிறது. அதற்கு முன்பே தனக்கு ஏற்பட்ட முதல் காதல் பற்றிய அனுபவத்தை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துகொண்டார் அமலாபால். அவரது முதல் காதலன் …

Read More »

லாரன்ஸ் சவால் – புதிய வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார். தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றியதாக தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலை வெளியிட்டார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை …

Read More »

பாதுகாப்புக்கு மிளகாய் பொடி – மும்தாஜ் அதிரடி!!

மீ டூ இயக்கம் மூலம் பாலியல் புகார் கூறும் விவகாரம் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது குறித்து மும்தாஜிடம் கேட்டபோது. ‘இன்று மீ டூ என்ற பெயரில் புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். திரைத்துறையில் இருப்பவர்கள் இப்படி செய்தார்கள். அப்படிச் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ அப்படித்தான் விளைவுகளும் இருக்கும் என்பதுதான் என் கருத்து. ‘தனியா வாங்களேன். கொஞ்சம் பேசணும்’ என்று ஒருவர் சொன்னால், நாம்தான் யோசிக்க வேண்டும். …

Read More »

4 வருடம் பாலியல் தொல்லையில் தவித்த நடிகை!!

நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:– ‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன். அவர் அருகில் …

Read More »

சுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் !!

நடிகைகள் என்றால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அப்படி ஒரு பிரபலமான மாடல் சுறா மீன்களுடன் நடத்திய போட்டோசூட் அவரை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது. Katarina Elle Zarutskie என்ற மாடல் சமீபத்தில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் சுறா மீன்களுடன் நீந்துவது போல போட்டோஷூட் நடத்தியுள்ளார். அனைத்தும் நன்றாக சென்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரெனெ ஒரு பெரிய சுறா வந்து அவரை கடித்து நீருக்கு அடியில் இழுத்து சென்றுள்ளது. அவர் …

Read More »

விஜயன் சர்கார் Exclusive தகவல்கள்!

தளபதி விஜய் நடிப்பில் சர்கார் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இப்படம் தீபாவளி விருந்தாக இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சர்கார் படம் பற்றி பல செய்திகள் உலா வருகின்றது, அதில் ஒன்றாக படத்தின் கதை இது தான் என்று ஒரு சில exclusive தகவல்கள் கிடைத்துள்ளது. நாம் முன்பே கூறியது போல் விஜய் வெளிநாட்டிலிருந்து வந்து தமிழக அரசியலில் கொண்டு வரும் மாற்றமே சர்கார் ஒன் லைன் கதையாம். …

Read More »

50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன் !!

நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக சம்பளத்தை ஏற்றியதாக தகவல் வந்தாலும் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது. இமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல் எழுந்தது. ரிலீஸ் செய்வதற்கு நெருக்கடியான நிலைக்கு ஆளானார். அப்போது நயன்தாராவுக்கு 50 லட்சம் சம்பள பாக்கி …

Read More »

சீமராஜா வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு !!

சிவகார்த்திகேயன் சமந்தா நடித்துள்ள சீமராஜா படம் இன்னும் இரண்டு நாட்களில் விநாயகர் சதுர்த்தி ஸ்பேஷலாக திரைக்கு வரவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் படம் வெளியாவதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முதல் நாளே இணையத்தில் திருட்டு தனமாக படம் வெளியாகிவிடுவதால் அதிக நஷ்டம் ஏற்படுகிறது என தயாரிப்பாளர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் சட்ட விரோதமாக இணையதளங்கள் படத்தை வெளியிட …

Read More »

மாமியார் வேடத்தில் நடிக்க தயங்கிய தேவயானி !!

மறைந்த இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்குனராக அறிமுகமாகும் படம், களவாணி மாப்பிள்ளை. தினேஷ், அதிதி மேனன் ஜோடி. இசை, என்.ஆர்.ரகுநந்தன். இந்த படத்தின் பாடல்களை ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டார். அப்போது காந்தி மணிவாசகம் கூறுகையில், ‘வழக்கமாக மாமியார். மருமகள் கதைகள்தான் வந்திருக்கிறது. இதில் மாமியார், மருமகன் கதை இடம்பெறுகிறது. தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்டபோது தயங்கினார். பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு ஒப்புக்கொண்டார். …

Read More »

சினிமாவுக்காக எதையும் செய்ய தயார்!

தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான டாப்சி, தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- “சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது. …

Read More »

தமிழக முதல்வரானால் நடிக்க மாட்டேன் ! !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `சர்கார்´. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. `சிம்டாங்காரன்´ என்ற பாடலும், ‘ஒருவிரல் புரட்சி’ என்ற பாடலும் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தேர்தல் அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ள ஒருவிரல் புரட்சி பாடல் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ஸ்ரீநிதி வெங்கடேஷ் இணைந்து …

Read More »

இலங்கையில் ஓவியா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

இலங்கையில் ஓவியா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வை விட மக்களிடம் பிரபலம் அடைந்தவர் ஓவியா. இரண்டாவது சீசனின் ஒரு ரீச்சிற்காக ஓவியாவை வீட்டிற்குள் ஒரு நாள் அனுப்பி வைத்தனர், அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் எங்கு போனாலும் கூட்டம் தான். அண்மையில் இலங்கையில் உள்ள ஒரு நகைகடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை காண ஏராளமான ரசிகர்கள் கூறியிருந்துள்ளனர். …

Read More »

கணய புற்றுநோயால் உயிரிழந்த பிரபல பாடகி !!

ஹாலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டவரும் பாரமரியமான கிளாசிக் பாடல்களை பாடியவறுமான அரேத்தா ஃப்ராங்ளின் தனது 76 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சிறுவயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய அவர் 18 கிராமி விருதுகள் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டு ராக் அண்டு ரோல் வாழ்த்தரங்கில் பங்கேற்ற முதல் பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். கணய புற்றுநோய் காரணமாக தனது …

Read More »

அலுவலக பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை… !!

நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிய தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். அவரது புகாரில் சிக்கிய நடிகர் லாரன்ஸ் நான் தவறு செய்யவில்லை என்று மறுத்ததுடன் ஸ்ரீரெட்டி நடிப்பு திறமையை நிரூபித்தால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இந்த நிலையில் ஆந்திராவில் பாதுகாப்பு …

Read More »