Home / இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள்

மீண்டும் பழைய விலைக்கு பாண்!!

அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்னதாக 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கோதுமை மா ஒரு கிலோ 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலையை, 05 …

Read More »

ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!!

ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் நேற்று கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களான ஹபீஸ் சயீத், அப்துல் ரெஹ்மான் மக்கி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட சுமார் …

Read More »

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனங்கள் ரத்து !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- ஆந்திர மாநில முதல்-மந்திரி ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி அறிவுரையின் பேரில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள வி.ஐ.பி. தரிசனத்தில் எல்-1, எல்-2, எல்-3 ஆகிய தரிசனங்களை முற்றிலும் ரத்து செய்ய, திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரிடம் ஆலோசனை …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் !!

வெளிநாட்டு டி.வி.க்களில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 21-ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் …

Read More »

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!!

15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டார். இதன்போது …

Read More »

கடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு!!

காலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கடற்படை படகு ஒன்று துறைமுகத்திற்கு அருகில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது விபத்தில் இதன்போது விபத்தில் சிக்கிய கடற்படை வீரர்கள் 9 பேர் காப்பாற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Read More »

இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி!!

மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்காக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (Hartwig Schafer) இணக்கம் தெரிவித்தார். இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். திடீர் காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை, மீள்பிறப்பாக்க மின்சக்தி, கிராமிய பிரதேசங்களில் குளங்களை புனரமைப்பு செய்வதற்கான …

Read More »

ஹெரோயின் வைத்திருந்த 36 வயது பெண் கைது !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்த சோதனை நடவடிக்கை நேற்று (17) நடத்தப்பட்டதுடன், குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பெண் திஸ்ஸா மாவத்த, பமுனுகம பகுதியில் வசிக்கும் …

Read More »

பேச்சுவார்த்தை தோல்வி – அடையாள வேலைநிறுத்தம் தொடர்கிறது!!

தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீமுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தங்களது அடையாள வேலைநிறுத்தம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இன்று (18) மாலை 4 மணி வரை குறித்த அடையாள வேலைநிறுத்தம் தொடரும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக்கத்தின் பணியாளர்கள் கடந்த 16 ஆம் …

Read More »

வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!!

அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், கங்காபட மாவத்தையில், மிஹிந்தல வீதியில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் குறித்து விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் 64 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் தலையில் ஏதோ இரத்தம் படிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Read More »

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மாத்தளைக்கு விஜயம்!!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஆராயும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மாத்தளையில் உள்ள பல பண்ணைகளுக்கு இன்று விஜயம் செய்கின்றனர். அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பசுக்கள் இறந்தமை குறித்த விசாரணைகளுக்காகவே ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மாத்தளை பண்ணைகளுக்கு இன்று விஜயம் செய்கின்றனர். பல நோய்களினால் பாதிக்கப்பட்ட பசுக்களை 5 இலட்சம் ரூபாய்க்கு பண்ணையாளர்களுக்கு விற்கப்பட்டமை தொடர்பில் பல புகார்கள் …

Read More »

சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்!!

இன்றும் (18) நாளையும் (19) சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் ஈ.எம்.ஜே.எஸ். டி சேரம் தெரிவித்துள்ளார். எனினும் 27 அமைப்புகள் குறித்த சுகயீன விடுமுறை பேராட்டத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் …

Read More »

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3300 சாரதிகள் கைது!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 3300 சாரதிகள் கடந்த 05 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதுபோதையில் வாகனம் செலுத்திய 3354 சாரதிகள் புதன் கிழமை வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த விஷேட தேடுதல் நடவடிக்கை ஆகஸ்ட 05 ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்படும் சாரதிகளுக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் …

Read More »

டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழப்பு !!

இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு தீவிரம் அடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More »

அவுஸ்ரேலியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் குறைந்த செலவில் விமான சேவை !!

அவுஸ்ரேலியா குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவையை விரைவில் இலங்கைக்கான விமான நடவடிக்கையாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இது அவுஸ்ரேலியாவின் கொண்டாஸ் விமான சேவைக்கு உட்பட்டதாகும். இதன் கீழ் கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் அவுஸ்ரேலியா மெல்பனில் இருந்து சுமார் 4000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இதன் காரணமாக பெரும்பாலானோரின் கோரிக்கைக்கு அமைய விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை மாலைத்தீவுக்கான அவுஸ்ரேலிய உயர் …

Read More »

பாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து நேற்று (16) புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, பாலுணர்வு மாத்திரைகள் (மதனமோதக) கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது. அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, இந்த நபரை 6800 பாலுணர்வு மாத்திரைகள் கொண்ட 272 …

Read More »

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நீர்கொழும்பு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த் 53 வயதுடைய …

Read More »

ருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!!

ருஹுணு பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக வணக்கத்திற்குரிய பேராசிரியர் அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (17) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read More »

2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்த உலகக் கிண்ணத்தை உருவாக்கிய நட்சத்திரங்கள் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், 2019 உலகக் கிண்ணத்தை தங்களின் பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்த 5 இளம் நட்சத்திரங்கள் யார் என்பதை இங்கு விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளோம். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக் கிண்ண …

Read More »

குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர்!!

மும்பையில் உள்ள டோங்கிரி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி ஆகும். இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவை மிகவும் நெருக்கமாக குடிசை பகுதி போல் அமைந்து உள்ளன. இங்குள்ள தண்டல் தெருவில் ‘கேசர்பாக்’ என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இருந்தது. 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் அந்த கட்டிடத்தில் சுமார் 15 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை 11.40 மணி அளவில் திடீரென அந்த …

Read More »

தேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்!!

மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைந்துள்ளதாகவும் மேலும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது தேர்தலை பிற்போட தயாராவதாகவும் தெரிவித்த அவர், தயவு செய்து தேர்தலை நடத்த …

Read More »

ஐதேகவினுள் வெவ்வேறு குழுக்கள் உருவாகியுள்ளன!!

ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியினுள் வெவ்வேறு குழுக்கள் உருவாகுவதானால் அவர்களுக்கு என வெவ்வேறான திட்டங்களை அமைத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலமை தற்போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் கண்டுகொள்ளக் கூடியதாகவும் அவ்வாறான பிரிவினை ஐக்கிய தேசிய கட்சிக்குள் வராமல் இருக்க தலைவர்கள் கவனம் …

Read More »

மோதலில் அப்பாவி மக்கள் 76 பேர் பலி!!

அமெரிக்காவில் நியூயோர்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதில் …

Read More »

மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!!

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

கடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி!!

எரிபொருள் விநியோகம் செய்யும் பவுசர் ஒன்றுடன் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் – கொழும்பு வீதியில் மதுரங்குலிய – செம்பட்டே பகுதியில் நேற்று (16) இரவு 8.20 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மதுரங்குலிய – செம்பட்டே பகுதியைச் சேர்ந்த தில்ஷான் மதுசங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் வீட்டில் இருந்து பிரதான …

Read More »

வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

மிட்டியாகொட, மலவென்ன பகுதியில் வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். வெரெஹெலிய பகுதியை சேர்ந்த 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மிட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

சூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் !!!

தொடங்கொட, பொம்புவெல, தித்தவெல்கொடெல்ல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்ய தொடங்கொட பொலிஸார் முற்பட்ட வேளை தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிஸார் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் 39 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று …

Read More »

சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

2019 ஜுலை 19 ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை நிலைமையில், மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் தென் அரைப் பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் வடமேல் கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, …

Read More »

முத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு!!

தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் …

Read More »

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் கொண்ட 1 இறாத்தல் பாணின் விலையை, இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை உருவாக்க ஒப்பந்தம் கைச்சாத்து!!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை அறிமுகப்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மொறட்டுவ பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திட்டது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய மெத்திவ் மற்றும் மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கே.கே.சி.கே. பெரேரா ஆகியோருக்கிடையில் இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வானது திங்கட்கிழமை (15) மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது. குறைந்த வருமானம் …

Read More »

வேலை நிறுத்தப் போராட்டத்தால் மலையக தபால் சேவைக்கு பாதிப்பில்லை !!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் சேவை ஊழியர்கள் நேற்று (16) முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள போதிலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மலையக தபால் சேவைகள் வழமை போலவே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வெளி பிரதேசங்களில் இருந்து வரும் கடிதங்கள் குறைந்து காணப்பட்ட போதிலும் பிரதேச ரீதியாக கடித பரிமாற்றங்கள் ஏனைய …

Read More »

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அடுத்த கட்ட நடவடிக்கை !!

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஆதரவை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் …

Read More »

உலக சாரணர் ஜம்போரிக்கு செல்லும் இலங்கை சாரணர்கள் சந்தித்த ஜனாதிபதி !!

அமெரிக்காவில் இடம்பெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது சாரணர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் தனித்துவத்தை உலகிற்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து சாரணர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, பாடசாலை …

Read More »

‘பிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைப்பு’ !!

இனங்களுக்கிடையில் பிரச்சனைகளை உருவாக்கி, தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராகி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் மிகவும் தந்திரத்துடன் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகளை நிறுத்துவதற்கு, நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சூரியவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல்கள் தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளரும் ஜனாதிபதியும் ஒருவர் மீது மற்றொருவர் பொறுப்புகளை சுமத்தி கருத்துகளை …

Read More »

வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று!!

வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று (16) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு கடந்த 13 நிமிடங்களில் சந்திர கிரகணம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். பகுதி அளவிலான இச்சந்திர கிரகணத்தை இலங்கையில் காணக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வருவதன் காரணமாக ஏற்படும் பூமியின் நிழல் சந்திரனில் …

Read More »

ஹெரோயின் பயன்படுத்திய 4 இளைஞர்கள் கைது!!

ஹெரோயின் பயன்படுத்திய 4 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 20 மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுமார் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்கள், ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திய போது, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும், யாழ். நகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் …

Read More »

கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிப்பு!!

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து 8 ரூபாயால் கோதுமை மா கிலோவொன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த விலை அதிகரிப்புக்கான காரணம் என்னவென்பது குறித்து, பிரிமா நிறுவனம் அறிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

சங்குகளுடன் ஒருவர் கைது!!

மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர், சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளனர். அதன்படி, மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மன்னார், ஊருமலை பகுதியில் சோதனை நடத்தியதுடன், 70 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட 3212 சங்கு ஓடுகளுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 31 வயதான தலை …

Read More »

தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்!!

இன்று (16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார். தங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்தில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »