Home / செய்திகள்

செய்திகள்

கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்!!

300 மில்லியனுக்கும் குறைவான கடன்களைப் பெற்ற சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான கடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் கடன் பெற்ற வங்கி கிளைகளுக்கு அறிவிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

Read More »

எவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு!!

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் பாலித பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க யாபா சேனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில் குறித்த ஆணைக்குழுவின் ஆணையாளர்களினால் அதற்கு தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக என்பது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்காக குறித்த வழக்கை இம்மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. …

Read More »

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்!!

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்த விசேட அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கம் எக் காரணத்துக்காகவும் இதுபோன்ற ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ ஒளித்து திருட்டுத்தனமாக கைச்சாத்திடாது என்றும் அவர் தெரிவித்தார். அதேபோன்று அரசாங்கம் நாட்டுக்கு பாதிப்பான எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போவதில்லை, …

Read More »

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்!!

புலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாததன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. குறித்த மனுக்கள் இன்று (20) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிகார, சிசிர …

Read More »

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனு மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தன்னை நீக்குவதற்காக எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்து அந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தாக்கல் செய்ய மனுவை மார்ச் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்று (20) விஜித் மலல்கொட, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஐக்கிய …

Read More »

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்!!

முன்னெடுக்ககப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதனூடாக நாட்டில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் …

Read More »

சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ரணில்!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (19) இரவு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிக்கலில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துதவம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம் !!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் அரச நியமனம் வழங்கக் கோரி வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். மாகாணத்தில் நீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற நிலையிலும் நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தும் நியமனங்களை வழங்க வலியுறுத்தியுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். நியமனத்தை வழங்க கோரி பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடி இருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண ஆளுநர்களாக புதிது புதிதாக வருகின்ற பலரையும் சந்தித்துள்ளோம். ஆகவே, தற்போது …

Read More »

ஹேமசிறி மற்றும் பூஜித்துக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் …

Read More »

புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு!!

இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்த புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் தொடர்பான தகவல்கள், வைத்தியசலை, பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு அமைவாக …

Read More »

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்!!

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போத்தல்கள் சேகரிக்கப்பட்டதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

Read More »

வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் போராட தயார்!!

ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் எதிர்க்கட்சி என்ற வகையில் போராட தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து MCC, எக்ஸா, சோபா போன்ற ஒப்பந்தங்களை கிழித்து எரிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் …

Read More »

ஜனாதிபதி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது உறுதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கடந்த அமைச்சரவையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் சம்பளம் தருவதற்கு முடிவு செய்துள்ளாரகள். இது அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பல கூட்டங்களிலும் கூறியிருக்கிற விடயம். அந்த வகையிலே இரண்டு மாதம் முடிவதற்குள் பல நல்ல திட்டங்களை செய்த ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களையும் மறவாமல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக உறுதி மொழிகூறியிருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல நம்பிக்கையை கொடுக்கின்றது. எப்போதும் சொல்வதை செய்பவர் …

Read More »

2023 வரை GSP+ வரிச் சலுகை தொடரும்!!

GSP+ வரிச் சலுகையை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு பெற்றுக் கொடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. தொழில்துறை ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அதன் கண்காணிப்பு செயற்பாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மாலத்தீவு தூதுக்குழுவின் துணைத் தலைவர் …

Read More »

வவுனியா புதையிரத நிலைய வீதியில் விபத்து – மூவர் காயம்!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (19) காலை 11.00 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூனூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வைரவப்புளியங்குளம் ஒழுங்கைக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் …

Read More »

சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து 4 பேர் ஹெரோயினுடன் கைது!!

தம்புள்ளை விகாரை சந்தி வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் இருந்து ஹெரோயினுடன் நான்கு இளைஞர்கள் தம்புள்ளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் தம்புள்ளை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 3355 மில்லி …

Read More »

விசேட படையணியின் உயிர் நீத்த படையினர்களை நினைவு கூறும் நிகழ்வு!!

ஜனாதிபதி ரண பரசூர மற்றும் படைத் தலைமையக ரண பரசூர போன்ற கௌரவ விருதுகளைப் பெற்ற படையணியான இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் 23ஆவது ஆண்டு விழாவானது நேற்று (17) நாவுலவில் உள்ள படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு விசேட படையணி பிரிவின் தளபதியும் பதில் பாதுகாப்பு பிரதானியுமான இராணுவத் தளபதி லெப்டினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இப் படையணியி ல் உயிர் நீத்த படையினருக்கான …

Read More »

CID-க்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்ட TID!!!

பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீ செனவிரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர் குறித்த பதவி வெற்றிடத்திற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பயங்கரவாத …

Read More »

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Read More »

எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது!!

விமானப்படை இருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப்படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று சீனன் குடா விமானப்படை தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது. இலங்கையின் வட கிழக்கில் …

Read More »

புதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு!!

நோயைப் பரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என்று அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதைத் அடுத்து இலங்கையில் பதிவாகியுள்ள விசேட நுளம்புகளின் எண்ணிக்கை 154 ஆகும். 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த நுளம்பை கண்டறிவதற்கு விசேட ஆய்வு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!!

கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பல பிரதேசங்களில் நாளை (18) முற்பகல் 9.00 மணி தொடக்கம் 22 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைச் செய்யப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நாளை முற்பகல் 09.00 மணி தொடக்கம் ஞாயிறு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, தெஹிவளை – …

Read More »

கஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது!!

சட்டவிரோத கஞ்சா பொதியொன்றை தன்னகத்தே வைத்திருந்த வியலுவ பிரதேசத்தை சேர்ந்த முன்னணி பாடசாலையின் மாணவர் ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் இன்று (17) கைது செய்யப்பட்டதாக கந்தகெடிய பொலிஸார் தெரிவித்தார். 18 வயதுடைய பாடசாலை மாணவனும் மற்றும் 29 வயதுடைய இளைஞன் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் நடத்தை குறித்து சந்தேகம் கொண்ட பொலிஸார் அவர்களை சோதனையிட்ட போது இந்த கஞ்சா பொதி …

Read More »

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்!!

அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மாணவர் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12 உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர் ஒருவர் 8 இலட்சம் …

Read More »

பொதுமக்களிடம் மன்னிப்பு கோரிய கல்வி அமைச்சர்!!

எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியில் இதுவரை தேசிய பாடசாலை அற்ற பிரதேச செயலக பிரிவுகள் 124 க்கும் தேசிய பாடசாலைகளை ஸ்தாபிப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் 393 தேசிய பாடசாலைகள் உள்ளன. எனினும், இலங்கையின் 124 பிரதேச செயலக …

Read More »

அத்தனகல்ல பிரதான அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிக்கா நீக்கம்!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அத்தனகல்ல பிரதான அமைப்பாளர் பதவியில் நீக்கப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

ஜனாதிபதியின் அதிரடி தீர்மானங்கள்!!

Ø குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்.. Ø பொருட்களை பெற்றுக்கொள்ள இலத்திரனியல் அட்டை.. Ø சிறிய அளவிலான வர்த்தகர்களையும் உற்பத்தியாளர்களையும் ஊக்குவிப்பதும் நோக்கம்.. Ø கிராமிய தோட்ட மற்றும் நகரப் பிரதேசங்களில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு குடிநீர்.. Ø ஒரு லட்சம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி.. Ø விவசாயம், வியாபார அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்டத்திற்கு ஒரு லட்சம் காணித் துண்டுகள்.. …

Read More »

முதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்!!

பாலிவுட் சினிமாவில் நிறைய தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் பிரபலமானவர் கபில் ஷர்மா. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே சிரித்து சிரித்து அனைவரின் வயிறும் வலித்துவிடும். அந்த அளவிற்கு அவர் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும். கபில் ஷர்மா தனது நீண்டநாள் காதலியான ஜின்னி என்பவரை திருமணம் செய்தார், கடந்த டிசம்பர் 10ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை …

Read More »

வரும் நிதியாண்டில் 1 கோடி வேலைகள் குறையும்?

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வரலாறு காணாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆய்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் நடப்பு 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் அடுத்த நிதியாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்கோரேப் (ecowrap) என்ற பெயரிலான அந்த அறிக்கையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனக் கணக்குப்படி …

Read More »

ஜனாதிபதி ஆட்சியில் நீடிக்க பதவி விலகிய பிரதமர்!!

ரஷ்ய ஜனாதிபதி புதின் தனது ஆட்சிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசமைப்பில் சில மாற்றங்களை முன்மொழிந்த சிறிது நேரத்தில் அந்நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளனர். இந்த அரசியலமைப்பு மாற்றங்கள் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் பாராளுமன்றத்திற்கு மாற்றப்படும். 2024 ஆம் ஆண்டு புதினின் நான்காவது பதவிக் காலம் முடிவடைகிறது. இந்த அரசியலமைப்பு மாற்றத்தால் புதின் வேறொரு புதிய பொறுப்பு ஏற்கலாம் அல்லது மறைமுகமாக அதிகாரத்தை தக்கவைத்துக் …

Read More »

மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரும் TISL !!

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தடயவியல் கணக்காய்வின் உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) சபாநாயகரை கோருகின்றது. இந்த அறிக்கைகள் பொது நிறுவனங்களுக்கான தேர்வுக்குழுவால் (COPE) முன்வைக்கப்பட்டு பாராளுமன்ற அமர்வுகளின்போது விவாதிக்கப்பட்டிருந்தன. எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதற்கு எதிராக சபாநாயகருக்கு சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை தொடர்பாக (TISL) கரிசணை கொண்டுள்ளது. TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒப்பேசேகர தெரிவிக்கையில், …

Read More »

தமிழர்களை கைவிட்ட சர்வதேசம் – ஒருபோதும் அரசியல் தீர்வை கொண்டு வராது !!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்கு உள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தர முடியாது என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அழிவு யுத்தம் நடைபெற்ற போது எமது மக்கள் தம்மை விட்டு சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று காலில் விழுந்து அழுதபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் எமது மக்களை அழிவுகளுக்குள் கைவிட்டுச் சென்ற சர்வதேசம், …

Read More »

ஐதேக தலைமைத்துவம் யாருக்கு – முடிவின்றி நிறைவடைந்த கூட்டம்!!

தலைமைத்துவம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை சிறிகொத்தவில் இடம்பெற்றது. (பின்னிணைப்பு – 8.57 pm) இதேவேளை, கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மற்றும் …

Read More »

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் கோபால் பக்லி?

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவராக கோபால் பக்லி நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கான இந்திய தூதுவராக தற்போது கடமையாற்றி வரும் தரஞ்சித் சிங் சந்து அமெரிக்காவிற்கான இந்திய தூதுவராக கடமையாற்றவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்பட்டால் டக்ளஸ் அமைதியாக இருக்க மாட்டார்!!

எமது அரசு தமிழ் மக்களுக்கு விரோதமாகவோ, அவர்களின் அபிலாசைகளுக்கு மாறாகவோ செயற்படப் போவதில்லை. நாம் தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படுவோமாக இருந்தால் எமது அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் அமைதியாக இருக்க மாட்டார் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவது தொடர்பாக …

Read More »

அனைத்து பஸ் வண்டிகளையும் பரிசீலிக்கும் வேலைத்திட்டம் !!

அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளை கண்டுபிடிக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் சகல பஸ் வண்டிகளையும் பரிசீலிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாராகியுள்ளது. இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் வகையில் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பஸ் வண்டிகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1955 என்ற அவசர அழைப்பிலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

சோளம், நிலக்கடலை இறக்குமதி தடை செய்யப்படவுள்ளது!!

நாட்டில் சோளம் மற்றும் நிலக்கடலை இறக்குமதி தடை செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பயிரிடப்படக் கூடிய தானிய வகைகளின் இறக்குமதியை தவிர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தானிய வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் மாத்திரம் அவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Read More »

இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் கடுமையாக பாதிப்பு!!

இலங்கையின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கௌரவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் மதிப்புரையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளின் மனித உரிமைகளை மதிப்பீடு செய்து 2020 ஆண்டுக்கான அறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கடந்த ஆண்டுகளில் செய்த முன்னேற்றம் தலைகீழாக …

Read More »

பதுளை மற்றும் யாழில் மோதல் – 15 பேர் காயம்!!

பதுளை, வேவெல்ஹின்ன தோட்டத்தில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (15) பிற்பகல் ஏற்பட்ட இந்த மோதலில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுள் இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யாழ்ப்பாணம் நகரில் இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 05 பேர் காயமடைந்துள்ளனர். குடி போதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக …

Read More »

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு இன்று !!

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெறுகின்றது. சுமார் 2 இலட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இம்முறை தரம் ஒன்றில் இணைந்து கொள்ளப்படுகின்றனர். இதன் பிரதான வைபவம் கல்வி அமைச்சர் டளஸ் அழப்பெரும தலைமையில் மாத்தளை னுககொல்ல தர்ம பிரதீப ஆரம்ப பாடசாலையில் இன்று காலை இடம்பெறுகின்றது. கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசல் பரீட்சையில் 3 வது இடத்தை மாத்தளை …

Read More »