Home / செய்திகள் (page 10)

செய்திகள்

ஒழுக்க விதிகளை மீறியவர்களின் கட்சி உறுப்புரிமை ரத்துச் செய்யப்படும்!!

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்தில் ஒழுக்க விதிகளை மீறிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நேற்று (02) பிற்பகல் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து …

Read More »

தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலிருக்க நடவடிக்கை!!

மத்திய வங்கி திறைசேரிமுறி விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையை அடுத்த கோப் குழு நியமிக்கப்படும்வரை கோப் குழு செயலகத்தில் இரகசிய ஆவணமாகப் பேணுவதற்கு கோப் குழுவின் முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தீர்மானித்துள்ளார். தடயவியல் கணக்காய்வு பற்றிய ஐந்து அறிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து கிடைத்துள்ளன. அவற்றை கோப் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே பார்வையிட முடியும் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இந்த அறிக்கைகளைப் …

Read More »

விசா இல்லாம் இந்நாட்டில் தங்கியிருந்த 21 பேர் கைது!!

விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 21 வௌிநாட்டவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (03) காலை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 இந்திய பிரஜைகளும் மற்றும் பங்களாதேஸ் பிரஜைகள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்நாட்டில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், …

Read More »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜானக்க டி சில்வா தலைமையிலான உறுப்பினர்களே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஆணைக்குழுவின் தலைவர், தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக ஏற்கனவே கிடைத்த தகவலை குறிப்பிட்ட அதிகாரிகள் …

Read More »

ராஜித சேனாரத்ன நடத்திய ஊடகச் சந்திப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்ட இருவரை அழைத்து வந்து ஜனாதிபதி தேர்தல் அண்மித்த பகுதியில் நடத்திய ஊடகச் சந்திப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி குறிப்பிட்ட இருவரையும் அழைத்து வந்து நாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல் சம்பவங்கள் மற்றும் காணாமல்போக செய்தமை போன்ற சர்ச்சைக்குரிய தகவல்களை முன்னாள் அமைச்சர் வெளியிட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வு …

Read More »

மழையுடனான வானிலை தொடரும்!!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, ஊவா, சப்ரகமுவ, …

Read More »

அஜித் பிரசன்னவின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு!!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். வணக்கத்துக்குரிய அதுரலியே ரதன தேரர் மற்றும் ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் சரத் வீரசேகரவின் கோரிக்கைக்கு அமைய அவர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

Read More »

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க தயார்!!

தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் டயிம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை சுதந்திரமடைந்தது முதல் தமிழ் அரசியல்வாதிகள் அதிகாரப்பகிர்வு குறித்தே பேசியதாகவும் மாறாக அவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை எனவும் கூறினார். ஊடகவியலாளர் : 13 ஆவது அரசியல் அமைப்பு திட்டம் 1987 …

Read More »

வாழ்த்து பதாகையை அகற்றிய ஜனாதிபதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பதாகை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழையும் பகுதியில் பதாகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்திய விஜயத்தின் முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி இந்த பதாகையை அவதானித்துள்ளார். இதனை அடுத்து குறித்த பதாகையை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், அதற்கமைய குறித்த பதாகை இன்று …

Read More »

சட்டவிரோதமான முறையில் டிரோன் கெமராவை பறக்கவிட்ட ஒருவர் கைது!!

நுவரெலிய, மிபிலிமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் டிரோன் (Drone) ஒன்றை பறக்கவிட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் எவ்வித அனுமதிப்பத்திரம் இல்லாமல் குறித்த டிரோன் கெமராவை பறக்கவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நுலரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் …

Read More »

சுவிஸ் தூதரக சம்பவம் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உண்ணாவிரதம்!!

கடத்தப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக ஊழியருக்கு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு முன்னால் அவர் இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Read More »

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இருவருக்கு விளக்கமறியல் !!

வல்வெட்டித்துறை பகுதியில் பாடசாலை செல்லும் 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான 75 வயதுடைய முதியவர் மற்றும் 45 வயதுடைய சித்தப்பா முறையிலான இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில், வைக்குமாறு, பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் ஊடகவே வல்வெட்டித்துறை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. வல்வெட்டித்துறை பகுதியில் …

Read More »

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றதுடன் நாடு முழுவதும் முழுமையாக தாபிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. …

Read More »

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்!!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரெயில்சேவை இராஜாங்க அமைச்சர் சி.பீ.ரத்னாயக்க தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கண்டி வலப்பனை பிரதான வீதியை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு, இராஜாங்க அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் மழை காரணமாக பலாங்கொடை, இம்புல்பே, கல்லேனகந்த, தம்பகான் ஓயா என்ற நதிக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் …

Read More »

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சஜித் பிரதமர்!!

சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்குவது தொடர்பாக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரமளவில் தனது உடன்பாட்டை தெரியப்படுத்துவார் என எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க் கட்சித் …

Read More »

சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளது!!

புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட விடயத்தில் சிறுபான்மை சமூகம் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பதுளையில் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் வரலாற்றில் முதற்தடவையாக முஸ்லிம் மக்கள் சார்பில் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை கவலைக்குரியது எனவும் கூறியுள்ளார். இந்த செயற்பாடு இன ரீதியான முறுகள் நிலைக்கு வித்திட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் …

Read More »

’13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது’ !!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இந்தியாவின் தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். குறித்த திருத்தமானது வெற்றியளிக்காத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அரசிலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதிலுள்ள சில விடயங்கள் தற்போது …

Read More »

சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை!!

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலஸ்ஸன ஜனவர்தன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மின்சார கட்டமைப்பை சீர் செய்து தடைப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More »

ஐ.எஸ் ஊடுருவியதாக தகவலை அடுத்து தமிழகத்தில் விசேட சோதனை!!

ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து தமிழகத்தின் இரு இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவு, விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனை நடவடிக்கை நேற்று (30) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சஹாரான் ஹசீமுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது. இந்திய …

Read More »

HIV யை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுப்பு!!

HIV தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் இன்று ஆகும். ஒன்றாக சிந்திப்போம் – ´மாற்றத்தை ஏற்படுத்துவோம் – எய்ட்ஸை இல்லாது ஒளிப்போம்´ என்பதே இந்த சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தின் தொனிப்பொருளாகும். எய்ட்ஸ் நோயை 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதே சுகாதார அமைச்சின் நோக்கமாகும் என்று தேசிய பாலியல் நோய் …

Read More »

O/L மாணவர்களுக்கான அறிவித்தல்!!

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More »

சீரற்ற வானிலை – 2200 பேர் பாதிப்பு – மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 643 குடும்பங்களை சேர்ந்த 2200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை முன்னர் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பலமான காற்று வீசும் – 150 மி.மீ அளவான பலத்த மழை பெய்லாம்!!

நாடு முழுவதும் (குறிப்பாக வடக்கு, வடமேல், சப்ரகமுவ ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் …

Read More »

பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது!!

ஹங்வெல்ல, எபுலேகம பகுதியில் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு நடத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வசமிருந்த கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயின், கேரளா கஞ்சா போன்ற போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் விசேட திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

சுவிட்சர்லாந்து தூதரக உத்தியோகத்தர் கடத்தப்பட்டது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது!!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் அந்த தூதரகம் வசமுள்ள அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி நவம்பர் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக ஸ்ரீஸ் இன்ஃபோ என்ற இணையத்தளம் இலங்கையில் இயங்கும் இணையத்தளம் …

Read More »

எதிர்கட்சித் தலைவர் பதவி சஜித்திற்கு – மனோ கணேசன் டுவிட்!!

எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.தே.கவின் தலைமை பதவி மற்றும் …

Read More »

இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் பிணையில் விடுதலை!!

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்நோக்கிய 8 சந்தேகத்திற்குரிய மீனவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தலா 10 இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கல்பிட்டிய தொடுவாவ பகுதியை சேர்ந்த எட்டு மீனவர்களே இவ்வாறு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபத பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். …

Read More »

தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்!!

கத்தியின்றி, இத்தமின்றி, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரைட் பியூச்சர் இன்டனேசனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை (30) பளை நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ஆயுதம் ஏந்தியவர்களின் தன் நம்பிக்கையின் காரணமாகவே முப்பது வருடங்கள் அவர்களால் …

Read More »

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது!!

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிகுஞ்சு பிரதேசத்தில் இன்று (30) கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12170 மில்லிகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பிராந்திய விஷத்தன்மை யுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18, 55 மற்றும் 30 வயதுடையவர்கள் என அவர்கள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட …

Read More »

ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை!!

இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சர்வதேச விமான சேவை சங்கத்துடன் கலந்துரையாடி இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் அருந்திக்க பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை!!

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள யூனிட் வரியில் தளர்வுகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரேன்விகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். புதிய அரசாங்கம் வழங்கியுள்ள வரி சலுகைகளால் மோட்டார் வாகன இறக்குமதி மற்றும் அதன் சந்தை விலையில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

நாடு முழுவதும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்!!

நாடு முழுவதும் (குறிப்பாக வடக்கு, வடமேல், சப்ரகமுவ மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும்) தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து (நவம்பர் 30ஆம் திகதி) மேலும் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் …

Read More »

பார்த்து எழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள்!

பரீட்சையின் போது தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, ஆத்திரம் கொண்ட மாணவர்களும், அவர்களுடன் வந்த குழுவினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேற்பார்வையாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் கடந்த 25 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. …

Read More »

அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு !!

அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

அரச நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்களை பதவி விலகுமாறு கோரிக்கை!!

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் குழும பணிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜெயசுந்தர இது குறித்து அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்க நியதிச் சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்திற்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் கொண்டவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் 6 …

Read More »

ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சிறிதளவேனும் குறைக்கப்படமாட்டாது!!

சமூக இணையத்தளங்களுக்காக அமைச்சுக்குள் பிரிவொன்றை எற்படுத்தி செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் சிறிதளவேனும் குறைக்கப்படமாட்டாது என்றும் எந்தவித பாதிப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். மக்களுக்காக முன் நிற்கும் ஊடக நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கலுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். …

Read More »

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்தியதாய் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப் பட்டுள்ளது. வழக்கு இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளை ரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றினால் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்று …

Read More »

பதவி விலக கோரியுள்ள மஹிந்த தேசப்பிரிய!!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தனது பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சபாநாயகர், மஹிந்த தேசப்பிரிய இந்த சந்தர்ப்பத்தில் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முழு பதவிக் காலத்தினையும் வகிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் என தெரிவித்துள்ளார். …

Read More »

சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு!!

சீர்குலைந்த முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ராக்கிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பியதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்யை தினம் இந்த சமூக வலைத்தளங்கள் செயலிழந்து இருந்தன. இதனால் உலக நாடுகள் பலவற்றில் இதனை பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

Read More »