Home / செய்திகள் (page 1022)

செய்திகள்

பெடரருக்கு இரண்டு ஜோடி இரட்டைக் குழந்தைகள்!!

முன்னணி டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் இரண்டாவது தடவையாக இரட்டைக் குழந்தைகளின் தகப்பனாராகியுளார். நேற்றைய தினம் ஸ்விச்சர்லாந்தின், சூரிச் நகர மருத்தவமனையில் பெடரரின் மனைவி, ஆண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த செய்தியை பெடரர் – டுவிட்டர் மூலமாக அறிவித்துள்ளார். பெடரர், மிர்கா ஜோடிக்கு முதலில் பிறந்ததும் இரட்டைக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஜோடி பெண் ஜோடி.  மாட்ரிட் மாஸ்டேர்ஸ் தொடரில் விளையாடி வந்த ரோஜெர் பெடரர், தனது …

Read More »

ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது சன் ரைசர்ஸ்

ஐ.பி.எல் டி.20 கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இரு அணிகளுக்கிடையேயான இந்த ஆட்டம் அகமதாபாத்திலுள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் தவானும், பிஞ்ச்சும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆட முற்பட்டனர். ஆட்டத்தின் 4வது …

Read More »

சிபிஐ கூடுதல் இயக்குனராக பதவியேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட்

தமிழகத்தை சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ புலனாய்வு அமைப்பின் கூடுதல் இயக்குனராக இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களுக்குள் அவரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலை பெறாமல் அர்ச்சனா ராமசுந்தரம் மத்திய அரசு பணியில் சேர்ந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பதவிக்கு டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்தை, சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா பரிந்துரை செய்திருந்தார். ஆனால் …

Read More »

உலகம் அழியும்போது மனிதர்களை காப்பாற்ற புதிய முயற்சி விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!

உலகம் அழிவுக்கு உள்ளாகும்போது, மனிதர்களை காப்பாற்றி அழைத்துச் செல்வதற்காக, விண்வெளி ஓடம் ஒன்றை உருவாக்கும் பணியில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். அந்த விண்வெளி ஓடம், மனிதர்களை விண்வெளிக்கு கூட்டிச்சென்று, குடியிருப்பதற்கு புதிய உலகத்தை தேடும் பணியிலும் ஈடுபடும். அதில், மனிதர்கள் உயிருடன் இருப்பதற்கு தேவையான அடிப்படை தேவைகளும் இருக்கும்.

Read More »

அரசு ரகசியங்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு பெண் பத்திரிகையாளர் கைது…!!

சீனாவில் காவ் யு என்ற பெண் பத்திரிகையாளர் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் அரசு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு கசிய விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்பேரில் தான் காவ் யு கைது செய்யப்பட்டிருப்பதாக சீன அரசு பத்திரிகை ஏஜென்சி கூறுகிறது. இவர் முன்பு அரசு செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். 1989ம் ஆண்டு நடந்த ஜனநாயக ஆதரவு போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தார். இவர் அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின்பேரில் 1993ம் ஆண்டில் …

Read More »

பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சீனா, வியட்நாம் கப்பல்கள் மோதல்…!!

தென்சீன கடல் பகுதியில் இருந்து 193 கடல் மைல் தொலைவில் உள்ள நான்சா தீவை சீனாவும் வியட்நாமும் உரிமை கொண்டாடி வருகின்றன.  தற்போது முதல் முறையாக அங்கு எண்ணெய் துரப்பன வேலைகளில் சீனா ஈடுபட முயற்சிக்கிறது. இதற்காக கப்பல்களை அந்த தீவுக்கு சீனா அனுப்பியது.  இதற்கு வியட்நாமும், பிலிப்பைன்சும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், போர் கப்பல்களை அனுப்பி வியட்நாம் அரசு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.  இந்நிலையில், ஹாப் …

Read More »

நைஜீரியாவில் கடத்தப்பட்ட இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா, பிரிட்டன் உதவி…!!

நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இளம் பெண்களை மீட்கும் பணியில் நைஜீரியாவுக்கு உதவ சீனா, பிரிட்டன் நாடுகள் முன்வந்துள்ளன.  நைஜீரிய நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் சுமார் 300 இளம் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர். அவர்களை, பாலியல் தொழிலுக்கு விற்கப்போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர்.  இந்நிலையில், இளம் மாணவிகளை மீட்கும் பணியில் உயர் தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக சீனா மற்றும் பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளன. 

Read More »

1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள்? அறிந்துகொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்திலமைந்த ஜி.பி.எஸ்…!!

1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள் என அறிந்துகொள்வது இலகுவானதொரு விடயமல்ல. ஆனால் உங்களை உங்கள் மூதாதையர்களின் இடத்திற்கு வழிகாட்டும் சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்காக அதி தொழில்நுட்பத்திலமைந்த புவியியல் குடித்தொகை அமைப்பு (ஜோகிரபிக் பொபியூலேஷன் ஸ்ரக்சர்) எனும் ஜீ.பி.எஸ் எனப்படும் இணையத்த டூல் ஒன்றினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இச்சாதனத்தின் மூலம் உங்களது மரபணு எங்கே எந்த கிராமத்தில் உருவானது என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் …

Read More »

காதலியிடமிருந்து தப்பிப்பதற்காக சிறைக்குத் திரும்பிய நபர்….!!

நன்னடத்தை காரணமாக உரிய தண்டனைக் காலம் பூர்த்தியடைவதற்கு முன் விடுதலையான 50 வயது நபரொருவர் நச்சரிக்கும் தனது காதலியிடம் தப்புவதற்காக மீண்டும் சிறைக்குத் திரும்பிய சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. பாஸ்டி கலாயிஸ் எனும் இடத்தைச் சேர்ந்த மேற்படி நபர் ஏற்கனவே மது போதையில் காரை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இதன்போது அவரது நன்னடத்தையை கவனத்திற்கொண்டு தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன் காலில் இலத்திரனியல் கண்காணிப்புப்பட்டி அணிவிக்கப்பட்டு விடுதலை …

Read More »

சி.பி.ஐ. முதல் பெண் உயர் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு…..!!

தமிழ்நாடு அரசு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, டி.ஜி.பி. அந்தஸ்தில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய புலனாய்வு துறையின் (சி.பி.ஐ.) கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. அமைப்பின் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 1980-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற அர்ச்சனா ராமசுந்தரம் மதுரையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கி, நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., வேலூர் டி.ஐ.ஜி, உட்பட …

Read More »

சமூக வலைத்தளங்களை தடை செய்தால், எனது வீட்டில் புரட்சி ஏற்படும்: ஜனாதிபதி!!

சமூக வலைத்தளங்களை தடை செய்தால் எனது வீட்டில் புரட்சி ஏற்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (பேஸ்புக்) மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யும் நோக்கம் உள்ளதா? என டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “பேஸ்புக் தளத்தில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் உள்ளன. டுவிட்டரில் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். இவ்வாறானதொரு நிலையில், நான் …

Read More »

(PHOTOS, VIDEO) தீ அனர்த்தத்தின் போது 4 ஆவது மாடியில் இருந்து பிள்ளைகளை தூக்கி வீசிய தாய்!!

ரஷ்யாவில் குடியிருப்பு கட்டிடமொன்றில் தீ அனர்த்தம் ஏற்பட்ட போது தாயொருவரால் 4 ஆவது மாடி ஜன்னலால் தூக்கி வீசப்பட்ட இரு பிள்ளைகளை கீழே கூடியிருந்தவர்கள் கட்டில் விரிப்பால் தாங்கிப்பிடித்து காப்பாற்றிய அதிசய சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது. ரஷ்ய பஸ்க் கொர்டோஸ்டன் குடியரசிலுள்ள எனேர் ஜெற்றிக் எனும் இடத்திலுள்ள குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் போதே மிலர் அக்ஸ்கவா (36 வயது) என்ற பெண், தனது பிள்ளைகளான வன்யா,(4வயது) …

Read More »

தோஷம் கழித்த சாமிக்கு விளக்கமறியல்!!

தோஷம் கழிக்க சென்ற 31 வயதான யுவதியை உதவியாளர் கொண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சாமி என்றழைக்கப்படும் பூசாரியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பிரதான நீதவான் புதன்கிழமை உத்தரவிட்டள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  நோய்க்கு நிவாரணம் பெறுவதற்காக குறித்த யுவதி தனது தாயார் மற்றும் நண்பியுடன் களுமடையிலுள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.  யுவதியை சோதித்த பூசகர் நோயை குணப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபா …

Read More »

அரச அறிவித்தல்கள் இல்லாமல் வேலைவாய்ப்பு: முறைப்பாடு தெரிவித்தால் நடவடிக்கை!!

யாழில் அரச வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பது எனக் கூறி அநாமதேய துண்டுப்பிரசுரம் மற்றும் அறிவித்தல்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (07) தெரிவித்தார். யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுக்கான இலங்கை தூதுவர் குழு அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியது. யாழில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரச வேலைக்கான ஆட்சேர்ப்பு என அநோமதய …

Read More »

அர­சி­யலில் கசினோ விளை­யாடும் முஸ்லிம் தலை­மைத்­து­வங்கள்!!

எமது முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களில் பலர் தமது முது­கெ­லும்­பற்ற தன்­மை­யையும், சுய­நல அர­சியல் செயற்­பா­டு­க­ளையும் அடிக்­கடி வெளிப்­ப­டுத்தி வந்­துள்­ளனர். அது­போன்ற வெளிப்­ப­டுத்­தல்கள் தொடர்ந்து இடம்­பெறும் கால கட்­ட­மாக தற்­போ­தைய நாட்டு சூழ்­நி­லையும் அர­சியல் சூழ்­நி­லையும் அமைந்துள்­ளன. கசினோ சூதாட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு மூன்று திட்­டங்­க­ளாக அர­சாங்­கத்தால் தயா­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட செயல் நுணுக்க அபி­வி­ருத்தி கருத்­திட்­டங்­க­ளின் கீழான கட்­டளை ஆளும் தரப்பு முஸ்லிம் தலை­மைத்­து­வங்­களின் ஆத­ர­வோடு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. பிரே­ர­ணை­க­ளுக்கு எதி­ராக ஐக்­கிய …

Read More »

ஹைரிய்யா பள்ளிவாசலை அப்புறப்படுத்தாமலிருக்க நடவடிக்கை எடுப்பேன் – பைஸர் முஸ்தபா!!

தம்புள்ளை ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தாமல் இருப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் நான் மேல் மட்டத்திலிருந்து எடுப்பதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் மற்றும் தம்புள்ளை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர் கவனத்திற் கொண்டு வந்து வந்திருப்பதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா உறுதியளித்தார். தம்புள்ளை பள்ளிவாசலுக்கு நேற்று மாலை பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து பேசுகையிலேயே மேற்கண்டவாறு உறுதி மொழியை வழங்கினார். பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அஹமட் லெவ்வை …

Read More »

வற் வரி மோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் ஆணையாளருக்கு 102 வருட சிறை தண்டனை!!

தெற்காசியாவில் மிக பெரிய வற் வரி மோசடியில் ஈடுப்பட்ட உள் நாட்டு இறை வரி திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் 102 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. அத்தோடு 12 பில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக 34 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொறு குற்றத்திற்கும் 3 ஆண்டு என்ற ரீதியிலேயே சிறை தண்டனை வழங்கப்ட்டுள்ளமை குறிறப்பிடத்தக்கது.

Read More »

பாகிஸ்தானில் மதநிந்தனை செய்தவருக்கு ஆதரவாக வாதிட்ட சட்டத்தரணி சுட்டுக்கொலை!!

பாகிஸ்தானின் முல்தான் நகரிரில் மத சிந்தனை குற்றச்சாட்டிற்கு உள்ளான பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருக்கு ஆதரவாக வாதாடிய சட்டத்தரணி யொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷீட் ரெஹ்மான் என்ற மேற்படி சட்டத்தரணி தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த வேளையிலேயே துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவருடன் இருந்த இரு சகாக்கள் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வருடம் மார்ச் மாதம் மத நிந்தனை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கடும்போக்கு மாணவர் குழுக்கள் பஹூதீன் ஸகாரி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான …

Read More »

ரயில்வே சாரதிகள் சட்டப்படி பணியாற்றப் போவதாக அறிவிப்பு!!

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ரயில் விபத்துக்களுக்கு சாரதிகளை குற்றம் சாட்டும் ரயில்வே திணைக்கள அதிகாரிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றிலிருந்து தொடர்ச்சியாக ரயில்வே சாரதிகள் சட்டப்படி பணியாற்றப்போவதாக அகில இலங்கை புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று புகையிரத சேவைகள் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டதன் காரணமாக இன்னும் ரயில் சேவைகள் தாமதமடையலாம் என தெரியவருகிறது. இது தொடர்பாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளர் எஸ்.பி. விதானகேவிடம் வினவிய …

Read More »

300 டின் புகையிலை தூள்களுடன் மூவர் கைது!!

புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்களை கொழும்பிலிருந்து பொகவந்தலாவை பிரதேசத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்ற மூவரையும் முச்சக்கரவண்டியையும் இன்று அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொகவந்தலாவை பிரதேசத்திற்கு விரைந்து சென்ற அட்டன் பொலிஸார் குறித்த மூவரை கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து புகையிலை தூள் அடைக்கப்பட்ட 300 டின்களையும் கைப்பற்றினர். குறித்த புகையிலைத்தூள் மாணவர்களுக்கு அதிகளவாக விற்பனை செய்யப்படுகின்றது என ஆரம்பகட்ட விசாரணையின்போது …

Read More »

ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 70 சதவீதமானவை அமுல்படுத்தப்பட்டு விட்டன: தினேஷ்!!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 70 சதவீதமானவை அமுல்படுத்தப்பட்டுவிட்டன. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொண்டதென ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று சபையில் தெரிவித்தார். இன்று மேற்குலக நாடுகளிலும் நல்லாட்சி எழுத்தில் மட்டும்தான் உள்ளது. ஒருபோதும் அது நடைமுறையில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐ.தே.கட்சி எம்.பி சஜித் பிரேமதாஸ …

Read More »

நீர்கொழும்பு – கொழும்பு அதிவேக பஸ் சேவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு!!

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியினூடாக சேவையிலீடுபடுத்தப்படும் நீர்கொழும்பு – கொழும்பு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பயணிகள் சிலர் கருத்து தெரிவிக்கையில், கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியினூடாக பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும். இதன் காரணமாக கொழும்புக்கு 20 நிமிடங்களில் செல்ல முடிகிறது. ஆயினும், தற்போது நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் போக்குவரத்து …

Read More »

இலங்கையில் மத முரண்பாடில்லை: ஜனாதிபதி!!

மத விவகாரங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் இலங்கையில் இடம்பெறவில்லை. சிறு சிறு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்தார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, இலங்கையில் மத முரண்டுகள் தொடர்பான கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More »

குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாக இருக்கும் :அஸ்வர்!!

குர்ஆனை நிந்திப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. அப்படி நிந்தித்தவர்கள் வரலாற்றிலே நல்ல முறையில் வாழ்ந்ததாகவும் கிடையாது. குர்ஆனை நிந்திப்பவர்களின் முடிவு மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதை சேனாக்களுக்கு கூறுகின்றேன் என ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் குறித்த சட்ட மூலத்தில் கசினோ விடயம் இல்லை என தெட்டத்தெளிவாக கூறியுள்ளார்கள். இதனை விட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். …

Read More »

சட்டக்கல்லூரி விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி!!

சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் இந்;த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.   சட்டக் கல்லூரியின் இறுதி பரீட்சைக்குக்கு முப்பது வயதுக்கு மேற்பட்டோர் தோற்றுவதை தடை செய்வதற்கு சட்டக் கல்வி சபை பரிசீலித்து வருவதாகவும் இந்த நடைமுறை 2014ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தவிருப்பதாகவும் வெளியான தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட …

Read More »

மது பாவனையை நாட்டில் தடை செய்ய முடியாது: அரசாங்கம்!!

மது பாவனையை நாட்டில் தடை செய்ய முடியாது எனினும் போதைக்கு முற்றுப்புள்ளி எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியும் என்று  பௌத்த சாசன மற்றும் மத விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். பௌத்த தர்மத்துக்கு ஏற்ப இலங்கையில் மதுபாவனை தடை செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

Read More »

சென்ட்ரல் குண்டுவெடிப்பு: ‘சந்தேக நபர்’ ரயிலில் குண்டு வைத்துவிட்டு ஓடவில்லை…

சென்ட்ரல் குண்டுவெடிப்பு: ‘சந்தேக நபர்’ ரயிலில் குண்டு வைத்துவிட்டு ஓடவில்லை; விமானத்தை பிடிக்க அவசரமாக ஓடினாராம்!… சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு புலனாய்வில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை, ‘சந்தேக நபர்’ என போலீஸ் சொல்லிக்கொண்டு இருந்த நபர், ரயிலில் குண்டு வைத்துவிட்டு ஓடவில்லை, விமானத்தை பிடிக்க அவசரமாக ஓடினார் என்று தெரியவந்துள்ளதாம்! குண்டு வெடித்த பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், …

Read More »

மேட்ரிட் ஓபன்: சானியா-காரா பிளாக் ஜோடி காலிறுதியில் தோல்வி..

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில், சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி காலிறுதியில் தோல்வியடைந்தது. 5-ம் தரநிலை ஜோடியான சானியா (இந்தியா)- காரா பிளாக் (ஜிம்பாப்வே), இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில், முதல் தரநிலையில் உள்ள தைபேயின் சு பெய் ஹிசெய்-சீனாவின் ஷூவாய் பெங் ஜோடியை எதிர்கொண்டது. துவக்கத்தில் சிறப்பாக ஆடிய சானியா ஜோடி முதல் செட்டை 7-5 என கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுத்த தைபேய்-சீன ஜோடி …

Read More »

களத்தில் அடிக்க பாய்ந்த பொல்லார்ட், ஸ்டார்க்குக்கு அபராதம்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்கையில், 17–வது ஓவரின் போது மும்பை அணி பேட்ஸ்மேன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்), பெங்களூர் அணி பந்து வீச்சாளர் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடும் மோதலாக வெடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த பொல்லார்ட், ஸ்டார்க்கை நோக்கி …

Read More »

பல்கலைக்கழத்திற்குள் இராணுவம், பொலிஸ் உள்நுழையாது: உதயபெரேரா!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்குள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்நுழைவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் யாழ். மாவட்ட படைகளின் தளபதிக்கு இடையிலான கலந்துரையாடல் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்செவன விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (07) நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக …

Read More »

மஹாபொல புலமைப்பரிசில் அதிகரிக்கப்படும்?

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற மஹாபொல புலமைப்பரிசில் பணத்தொகையினை அதிகரிப்பது தொடர்பில் அதிகூடிய கவனம் எடுத்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் தொகையாக ரூபா 2500 கடந்த 2006ஆம் ஆண்டுதொடக்கம் வழங்கப்பட்டுவருகிறது. இதனை அதிகரிக்க முடியாத என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Read More »

சட்டவிரோத சூதாட்ட நிலையம் முற்றுகை; 34 பேர் கைது!!

கொழும்பு 7இல் சட்டவிரோதமாக இயங்கிவந்த பிரபல சூதாட்ட நிலையமொன்று இன்று (08) மாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டது. இச்சுற்றிவளைப்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், 7 ஊழியர்கள் உட்பட 34 பேர் அடங்குகின்றனர். சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு 80இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மே 18 ஐ துக்க தினமாக அனுஷ்டிக்கவும்: டெனீஸ்வரன்!!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்; வியாழக்கிழமை (08) வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ;டிப்பது தொடர்பில் அவருடன் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்தவகையில், அனைவருக்காகவும் பொதுமக்கள் தமது …

Read More »

வட, கிழக்கில் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம்: ஜனாதிபதி!!

நாட்டில் நிலவிய பயங்கரவாதம், வடக்கு கிழக்கு இளைஞர், யுவதிகளின் உரிமைகள் அனைத்தையும் பறித்துவிட்டது. நாம் அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடான கேள்விகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பதிலளித்து வருகின்றார். இதன்போது, 'யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளின் குறிப்பான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உங்களது அரசாங்கத்தின் கொள்கைகள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன?' என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் …

Read More »

முதிரைமரக் குற்றிகளுடன் ஒருவர் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிராட்டிக்குளம் காட்டுப்  பகுதியிலிருந்து முதிரைமரக் குற்றிகளை கன்டர் ரக வாகனத்தில் கொண்டுவந்ததாகக் கூறப்படும் ஒருவரை புதன்கிழமை (07) கைதுசெய்ததாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த வாகனத்துடன்; 07 அடி நீளமும் 2 ½ அடி விட்டமும் கொண்ட 09 முதிரைமரக் குற்றிகளை கைப்பற்றியதாகவும்  பொலிஸார் கூறினர்.  சிராட்டிக்குளம் காட்டுப் பகுதியிலிருந்து மரக்குற்றிகளை ஏற்றிக்கொண்டு நாட்டாங்குளம் பிரதான வீதிக்கு வந்தபோது, அங்கு …

Read More »

வரவு-செலவு திட்டத்தில் இளைஞர், யுவதிகளின் கருத்துக்கு முதலிடம்!!

எமது அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தினை தயாரிக்கின்றபோது இளைஞர், யுவதிகளின் கருத்துக்கு முதலிடம் வழங்கிவருகின்றோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தினூடாக கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மேற்படி குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கத்தில்தான் ஏராளமான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் நாட்டின் ஏனைய உயர்மட்ட நடவடிக்கைகளிலும் இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அதுமட்டுமல்லாமல், ஏராளமான பெண்கள் அமைப்புகள் எமக்கு …

Read More »

மலையகத்தில் கடும் மழை!!

மலையகத்தில் இன்று பிற்பகல் முதல் கடும் மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலை நிலவுகின்றது. அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடும் மழையின் காரணமாக நுவரெலியா பகுதியில் நான்கு வீடுகள் சேதமாகியுள்ளன. இதில் இருபது பேர் பாதிப்படைந்த நிலையில் அகதிகளாகி ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜீ. குமாரசிரி தெரிவித்தார்.

Read More »

(PHOTOS) மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்!!

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு நேற்று புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. இதற்கு மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமை தாங்கினார். இதில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவும் கலந்து கொண்டார். இவ் இணையத்தளத்தின் மூலம் கடந்த வருடங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய திட்டங்கள் தொடர்பிலும் எதிர்வரும் காலங்களில் மீனவர்கள் எதிர்நோக்கும் …

Read More »

குளவித் தாக்குதலுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்லை பின்னோயா பகுதியில் இன்று காலை இடம் பெற்ற குளவித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஐவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவி தாக்கிய சந்தர்ப்பத்தில் அப்பாதை வழியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியையும் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு தொழிலாளி அதிக குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி!!

யாழில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரமாகயிருந்த பாலத்துடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றதாகவும் இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வவுனியா நெடுங்குளத்தைச் சேர்ந்த 23 வயதான சுரேகன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்தவிபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞனான நெடுங்குளத்தைச் சேர்ந்த கரன்(வயது-21) யாழ்.போதனா வைத்தியசாலையில் …

Read More »