Home / செய்திகள் (page 1026)

செய்திகள்

கார் ஓட்டிய இரண்டு வயது குழந்தை!!

ஜெர்மனியில் தனது தந்தைக்குத் தெரியாமல் 2 வயது சிறுவன் ஒருவன் ஸ்டார்ட் செய்த கார் ஒரு கம்பத்தில் மோதி நின்றது. தலைநகர் பெர்லினைச் சேர்ந்த மிரான்கன் என்ற அந்தச் சிறுவன், தனது தந்தை தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த “சாகச´த்தை செய்திருக்கிறான். இதற்காக யாருக்கும் தெரியாமல் கார் சாவியை எடுத்துக் கொண்டதுடன், கார் பார்க்கிங் செல்வற்கான மின்தூக்கி (லிஃப்ட்) பொத்தான்களை இயக்குவதற்காக ஒரு சிறிய நாற்காலியையும் அந்தச் சிறுவன் சமயோஜிதமாக …

Read More »

நீரிழிவு நோய் காணப்படும் பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க ஜனாதிபதி பணிப்பு!!

நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க விசேட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டுக்குள் முன்னேற்றகரமான நீர் விநியோகத்தை ஏற்படுத்த திட்டமிட்ட வேலைத் திட்டங்களை செயற்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளுடன் இன்று (13) அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது …

Read More »

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியை வீழ்த்தியது பெங்களூர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதின. மழை காரணமாக ஆட்டம் 1 மணி 10 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ் ஜெயித்த டெல்லி கேப்டன் பீட்டர்சன் முதலில் பெங்களூர் அணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் கிறிஸ் கெய்ல் 22 ரன்னிலும் (23 பந்து, ஒரு பவுண்டரி, …

Read More »

சோப்புகள், பற்பசைகளால் ஆண்களுக்கு பேராபத்து!!

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சோப்புகள், பற்பசைகள் (‘டூத் பேஸ்ட்’) மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சோப்பு, பற்பசை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் நச்சு ரசாயன பொருட்களால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும் என தெரிய வந்துள்ளது. இந்த ரசாயன நச்சு பொருட்கள் ஆண்களின் விந்தணு வீரியத்தை குறைத்து குழந்தை பேறு ஏற்படாமல் தடுக்கிறது. இது …

Read More »

காதலை ஏற்க மறுத்த பெண்ணை சுட்டுக் கொன்ற இளைஞன்!!

மத்திய பிரதேச மாநிலம், மோரேனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி திவாரி 25. இவர் அங்குள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை காதலித்தார். அந்த பெண் திவாரியின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து அந்த பெண்ணுக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கணவரின் வீட்டுக்கு சென்ற அந்த பெண் நேற்று முன்தினம், தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்தார். இதையறிந்த திவாரி, அங்கு வந்து, அந்த பெண்ணை …

Read More »

வரதட்சணை கொடுமையால் புது மணப்பெண் தற்கொலை!!

சென்னை துரைப்பாக்கம் அருகே வரதட்சிணைக் கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவரை பொலிஸார் கைது செய்தனர். இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சாலப்பாக்கத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் ரம்யாவுக்கும் (22), சென்னை துரைப்பாக்கம், கந்தன்சாவடியைச் சேர்ந்த ஆனந்த் (30) என்பவருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது வரதட்சிணையாக 10 பவுன் தங்க நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும் பெண் வீட்டார் …

Read More »

சம்பூர் மகா வித்தியாலயத்தை விடுவிக்கவும்; கல்வி அமைச்சருக்கு கடிதம்!!

கடற்படையினரின் பயிற்சி முகாமாக இயங்கி வரும் சம்பூர் மகா வித்தியாலயத்தை, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்க கிழக்கு மாகாண செயலாளர் எஜ்.ஜெயராஜாவினால், கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலை மாவட்டத்தின் தொன்மையினைப் பறைசாற்றி நிற்கும் பழம்பெரும் கிராமம் சம்பூர் கிராமமாகும். அக்கிராமத்தின் தொன்மையினை ஒத்ததாகவே திÆசம்பூர் மகா வித்தியாலயம் விளங்குகின்றது. அப்பிரதேச …

Read More »

வேலை நிறுத்தம் செய்யும் சுகாதார துறையினர் அடுத்த பிறவியில் நோயாளியாக பிறப்பர்!!

சுகாதார சேவையில் எந்தவொரு பதவியில் இருந்து கொண்டும் வேலை நிறுத்தம் செய்தால் அடுத்த பிறவியில் நோயாளியாகவே பிறக்க நேரிடும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகில் சமூக அரசியல் மாற்றம் ஏற்படும் போது சுகாதார துறையிலும் மாற்றம் ஏற்படுவதாகவும் அதனால் தொழிற்சங்கங்களின் போராட்ட முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். 2,500 புதியவர்களை தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு நியமனம் வழங்கும் …

Read More »

உயர்தரம் இல்லாவிட்டால் பரவாயில்லை விமலுக்கு வாசித்து தெரிந்து கொள்ள முடியும் தானே! எஸ்.பி!!

உயர்தரம் சித்திபெறா விட்டாலும் உயர்கல்வி இல்லாவிட்டாலும் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு புத்தகங்கள் வாசித்து படித்துக் கொள்ள முடியும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி சம்பிரதாயம் பொருளாதார தத்துவம் தொடர்பில் சிறிதளவேனும் தெரிந்திருக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்பில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விமர்சித்துள்ளார். கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பிபி.ஜயசுந்தர ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் …

Read More »

கள்ளக் காதலனுடன் இணைந்து தனது மகளை துன்புறுத்திய தாய் கைது!!

தனது சொந்த மகளை துன்புறுத்திய தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது கள்ளக் காதலனுடன் இணைந்து தனது ஆறு வயதான சிறுமியை துன்புறுத்திய குற்றச்சாட்டில் குறித்த பெண் பதவிய பொலிஸால் கைது செய்யப்பட்டார். இன்று சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியவளை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இதேவேளை அப் பெண்ணின் கள்ளக் காதலனை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More »

அச்சுறுத்தல் விடுத்ததாக த.தே.கூ மாநகர சபை உறுப்பினர் முறைப்பாடு!!

படையினரின் சீருடையை ஒத்த உடையணிந்த இனம் தெரியாத 4 பேர் தன்னுடைய வீட்டுக்கு வந்து பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அச்சுறுத்தியதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வீட்டிலிருந்து வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு தான் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டேன். இந் நிலையில் இருவர் சீருடையிலும் இருவர் …

Read More »

பல்கலைக்கழக மாணவர்கள் மீது மிளகாய்த்தூள் வீச்சு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்னால் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை இனந்தெரியாதோர் சிலரால் மிளகாய்த்தூள் வீசப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் இருவரே இந்த தாக்குதலை நடத்தியதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் சம்பத் விக்கிரமசிங்க தெரிவித்தார். மிளகாய்த் தூளை நீரில் கரைத்தே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றும் போராட்டத்தில் …

Read More »

இலங்கைத் தம்பதியை கைது செய்ய இன்டர்போல் உதவி!!

தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்கள் இருவரை (தம்பதி) கைது செய்ய, இன்டர்போல் பொலிஸாரின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த மே 5 ஆம் திகதி தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு 2 தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் அகதிகளாக வந்தனர். இலங்கை இராணுவத்தினரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் உயிர்ப் பிழைப்பதற்காகவே அகதிகளாக …

Read More »

அகதி முகாம் வீடு இடிந்ததில் இலங்கை சிறுமி பலி!!

தமிழகம், மேலூர், திருவாதவூரிலுள்ள அகதி முகாம் வீடொன்று இடிந்து விழுந்ததில் இலங்கையைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். அத்துடன், அவரது இரு சகோதரர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது. இதில் சரண்யா அதிபதி என்ற சிறுமியே பலியாகியுள்ளார். நேற்று மாலை முதல் பெற்று வந்த அடை மழை காரணமாகவே இந்த வீடு இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்த மேலூர் பொலிஸார், இது …

Read More »

இலங்கையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்!!

பாகிஸ்தான் கடற்படையினரின் கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து 03 நாட்கள் விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது. நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் அடிக்கடி இலங்கை துறைமுகத்துக்கு வருகின்றன. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது. மேற்படி இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலுள்ள வலுவான பாதுகாப்பு, கலாசார, பொருளாதார, இராஜதந்திர உறவுகளை பி.என்.எஸ்.சாம்ஸீர் என்ற இந்தக் கப்பலின் வருகை வெளிப்படுத்துகின்றது.

Read More »

மது,இறைச்சி கடைகள் இரு நாட்களுக்கு மூடப்படும்!!

சகல மதுபானசாலைகள்;, இறைச்சி கடைகள், கசினோ மற்றும் பந்தைய நிலையங்கள் யாவும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More »

முடிவெட்டிய ஆசிரியைகள் இருவருக்கு பிணை!!

வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் ஆறாம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவியொருவரின் விருப்பத்திற்கு மாறாக வகுப்பறையிலேயே வைத்து அந்த மாணவியின் தலைமுடியை வெட்டிய ஆசிரியைகள் இருவரை தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் தலா 25 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்துள்ளது.

Read More »

104 வயது வயோதிபர் ஓட்டத்தில் சாதனை!!

100 மீற்றர் தூரத்தை 32.79 செக்கன் நேரத்தில் ஓடிக் கடந்து 104 வயது வயோதிபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐரோப்பாவிலேயே 100 மீற்றர் தூரத்தை வெற்றிகரமாக ஓடிக் கடந்த மிகவும் வயதானவர் என்ற பெயரை போலக் தின் ஸ்விட்னிகா நகரைச் சேர்ந்த ஸ்ரெயின்ஸ்லாவ் கொவல்ஸ் கி என்ற மேற்படி வயோதிபர் பெறுகிறார். அவர் ஏற்கெனவே 96 வயது ஐரோப்பியர் ஒருவரால் நிறைவேற்றப்பட்ட சாதனையை முறியடித்துள்ளார். தனது வாழ்நாளில் …

Read More »

ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன்? பாலிவுட்டில் பரபரப்பு!!

உலக அழகி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணாத நபரே இருந்திருக்க மாட்டார்கள். அப்படி தான் இங்கு ஒருவர் கனவு கண்டு இருக்கிறார் போல, இலங்கையைச் சேர்ந்தவர் நிரோஷன் தேவபிரியன், இவர் தற்போது கொடுத்துள்ள ஒரு புகார் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நிரோஷன் கொடுத்துள்ள புகாரில், பாலிவுட் நடிகை ஐஸ்வராய்க்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. …

Read More »

தடை தாண்டும் நவிப்பிள்ளை!!

இலங்­கையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள சர்­வ­தேச விசா­ர­ணைக்குத் தேவை­யான நிதியைப் பெற்றுக் கொள்­வதில் ஐ.நா.மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை வெற்றி பெற்­றுள்­ள­தாக, ஆங்­கில வார­ இதழ் ஒன்று தெரி­வித்­துள்­ளது. இலங்கையில் ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­துக்குள் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்ள நிலையில், போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் முயற்­சிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. இந்­த­வாரம், இந்த முயற்­சி­களில் மற்­றொ­ரு­படி முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஐ.நா.மனி­த­உ­ரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை, இந்த விசா­ர­ணை­க­ளுக்குத் தேவை­யான …

Read More »

ஐ.பி.எல் கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி..

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. அதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கித் சர்மாவும், வாட்சனும் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். மோகித் ஷர்மா வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரிகள் விரட்டி அங்கித் சர்மா அசத்தினார். ஆட்டத்தின் 8வது ஓவரில் அணியின் …

Read More »

ஈராக் குண்டுவெடிப்புகளில் 28 பேர் பலி!!

ஈராக்கின் பாக்தாத் நகரில் இன்று(13) இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சதார் நகரத்திற்கு அருகில் காலை நேரத்தில் மக்கள் அதிகமாக இருந்த இடத்தில் கார்குண்டொன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் பலியானதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக ஈராக் பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேலும் மக்கள் குடியிருப்புகள் இருந்த இடத்தில் கார்குண்டு வெடித்ததில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 பேர் …

Read More »

நான்காவது முறையாக மாட்ரிட்டில் பட்டம் வென்றார் நடால்..

ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட்டில் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரராக உள்ள ரபேல் நடால் பத்தாம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரியுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வென்று இரண்டாவது செட்டில் 4-2 என்ற முன்னிலை பெற்றிருந்தபோது நிஷிகோரிக்கு முதுகு வலி ஏற்பட்டது. அப்போது மருத்துவ இடைவேளை எடுத்து தனக்குரிய சிகிச்சையை …

Read More »

எரிந்த சடலம் மீட்பு!!

மீகஹாதென்ன மயானாத்திலிருந்து எரிவடைந்த சடலமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலத்தின் அரைவாசி எரிவடைந்து காணப்படுவதால், சடலத்தை அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் கூறினார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Read More »

வத்தளை சிறுமி விபத்தில் பலி: அறுவர் காயம்!!

கொழும்பு- ஹட்டன் பிரதான வீதியில் கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 47/40 சந்தியிலுள்ள மதகின் மீது காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வத்தளையைச்சேர்ந்த எட்டுவயது சிறுமி பலியானதுடன் அறுவர் காயமடைந்து தெலிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் திருமண வைபவமொன்றுக்கு வத்தளை – தெலங்கபாதையிலிருந்து சென்ற காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த …

Read More »

(PHOTOS) வெசாக் தோரணங்கள்…!!

நாளை 14 ஆம் திகதி புதன்கிழமையும் மறுநாள் 15 ஆம் திகதி வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள வெசாக் போயா தினங்களை யொட்டி கொழும்பு மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெசாக் தோரணங்கள் சிலவற்றை படங்களில் காணலாம்.

Read More »

பாப்பரசர் மன்னிப்பு கோரவேண்டும்:பொதுபல சேனா!!

பாப்பரசர் புனித பிரான்ஸிஸ் இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பௌத்த அமைப்புகளான பொதுபல சேனாவும், ராவணா சக்தி அமைப்பும் இலங்கையில் மத நல்லிணக்கம் இல்லையென பாப்பரசர் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவிக்கையில், பாப்பரசர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மத நல்லிணக்கம் இலங்கையில் இல்லையெனத் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும். அதன் …

Read More »

கூறிய ஆயுதத்தால் தாக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை!!

அளுத்கம பொலிஸ் நிலையத்தில் சேவை புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிபென்ன மீகம பகுதியில் வைத்து நேற்று இரவு இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்ரபிள் ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிவத்தார். தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் …

Read More »

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடி­யமை அநீதி, ஆளு­ந­ராக சிவி­லி­ய­னையே நிய­மிக்க வேண்டும் : அமைச்சர் வாசு­!!

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தை மூடி­யது அநீ­தி­யான செயற்­பா­டாகும். விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பை முதன்­மைப்­ப­டுத்­தாது தமிழ் மக்­களின் விடு­த­லைக்­காக உயிர்நீத்­த­வர்கள் எனக் கூறும் உரிமை தமிழ் மக்­க­ளுக்கு உள்­ளது என்று அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். வட மாகாண ஆளு­ந­ராக மீண்டும் படைத்­த­ரப்பைச் சார்ந்­த­வரை நிய­மிப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இதனை எதிர்ப்­ப­தா­கவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார். இது தொடர்­பாக சமூக ஒரு­மைப்­பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்­பான …

Read More »

வெசாக் தினத்தை முன்னிட்டு 30 ஆயிரம் பொலிஸார் கடமையில்!!

வெசாக் தினங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 30 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். பௌத்த கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில்நடந்து கொள்ளும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அத்தோடு வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Read More »

யேமனியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்!!

யேமனிய முகல்லா நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்றில் குறைந்தது 10 யேமனிய பொலிஸார், பொதுமகன் ஒருவர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் நிலையத்துக்கு வாகனமொன்றில் வந்த தற்கொலைக் குண்டுதாரி பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையடுத்து குண்டை வெடிக்க வைத்துள்ளார். அதேசமயம் அன்றைய தினம் தலைநகர் சனாலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை. மேற்படி குண்டு வெடிப்பால் …

Read More »

நீரில் மூழ்கியே கொன்சலிற்றா உயிரிழப்பு: நீதிமன்றதில் அறிக்கை

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா (23) கன்னித் தன்மை இழக்கவில்லையெனவும், அவர் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும் சட்டவைத்தியதிகாரி மன்றில் நேற்;று திங்கட்கிழமை மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அத்துடன் மேற்படி வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று (12) தெரிவித்தார். மேற்படி வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாதிரியார்களின் தொலைபேசிப் பாவனையின் …

Read More »

யாழ். மாணவி மீது, இளைஞன் திடீர் தாக்குதல்

யாழ். திருநெல்வேலி பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மீது நேற்று இளைஞன் ஒருவன் கன்னத்தில் அறைந்ததாக மாணவியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மாணவி பாடசாலை முடிந்து திருநெல்வேலி பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை வீதியின் வழியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த இளைஞன் மாணவியினை இடை மறித்துள்ளான். அதேவேளை குறித்த மாணவி நிற்காமல் சென்றதினையடுத்து மாணவியின் துவிச்சக்கர வண்டியினை …

Read More »

மூதாட்டி கொலை; இலங்கை அகதிகள் இந்தியாவில் போராட்டம்

தமிழகம் ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் மூதாட்டியை கொலை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யக் கோரி இலங்கை அகதிகள் திடீரென வீதி மறியலில் ஈடுபட்டனர். இலங்கை அகதி முகாமில் இருந்த 62 வயதான பெலிசிட்டா குரூஸ், நேற்று முன்தினம் அதே பகுதியில் பற்றைகாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை கோவை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மூதாட்டி …

Read More »

பெற்ற தாயை கத்தியால் குத்தி தங்கச் சங்கிலி பறித்த மகன்..

தனது தாயை கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்தி அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த மகன் கத்தியால் தன்னை தாங்கி விட்டு 24,000 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளதாக மாரவில – ஹந்தினிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயான …

Read More »

ஜனவரி 13இல் போப் இலங்கை வருகிறார்!!

போப் பிரான்ஸிஸ் எதிர்வரும் வருடம் ஜனவரி 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வத்திகானுக்கான விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஆயர்கள் குழு இது தொடர்பில் போப் பிரான்ஸுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்தியதை தொடர்ந்து இறுதி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள போப் பிரான்ஸில் மன்னார் மடு தேவலாயத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் அரசியல் தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். …

Read More »

சுவிஸ் டென்னிஸ் சுற்றுப் போட்டியில், “சாயிபிரசாந்த் ரவீந்திரன்” சாதனை!!

சுவிட்சர்லாந்து ஸ்போர்ட்ஸ் சென்டர் சூமாக்கர் சம்மர் 2014 (Sports Center Schumacher Sommer Turnier 2014) சுற்றுப் போட்டி 10.05.2014 நடைபெற்ற போது, அதில் பங்குபற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த, சூரிச் வாழ் தமிழ் இளைஞன் சாயிபிரசாந்த ரவீந்திரன் ராசமாணிக்கம் இறுதியாட்டம் வரை தகுதி பெற்று இறுதியாட்டத்தில் A-Wisst 7-6, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். சாயிபிரசாந்த் காலிறுதி ஆட்டத்தில் Gerber Michael ஐ W.O முறையிலும், …

Read More »

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக முஸ்டாக் அஹமட்!!

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முஸ்டாக் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இவர் இங்கிலாந்து அணியின் சுழல்ப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் குறித்த பதவிக்கு சக்லைன் முஸ்டாக், முஸ்டாக் அஹமட் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவி வந்தது. இருப்பினும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர் தெரிவுக்குழு முஸ்டாக் அகமட்டை, தலைமைப் பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுசுக்கு பரிந்துரை செய்தது. …

Read More »

கடத்தப்பட்ட பெண்கள் அடங்கிய, புதிய காணொளி (வீடியோ)!!

நைஜீரியாவில் கடந்த மாதம் கடத்தப்பட்ட 100 ற்கும் அதிகமான இளம் பெண்கள் அடங்கிய புதிய காணொளியொன்றை இஸ்லாமிய தீவரவாத குழுவான பொக்கோ ஹராம் வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தமது குழுவின் உறுப்பினர்களை விடுதலை செய்யும் வரை இந்த பெண்கள் விடுவிக்கப்படமாட்டார்கள் என பொக்கோ ஹராம் அமைப்பின் தலைவர் அபூபக்கர் சேகுத் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண்கள் இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகளில் …

Read More »

மடிக்கணினியை திருமணம் செய்வதற்காக சட்ட அனுமதி கோரிய நபர்!!

ஆபாசப்படங்கள் நிறைந்து கிடக்கும் தனது மடிக்கணினியை திருமணம் செய்துகொள்வதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை தருமாறுகோரி சட்டத்தரணி ஒருவர் அமெரிக்க நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்துள்ளார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் செவிர் என்ற வழக்கறிஞரே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இசையைப் போலவே ஆபாசப் படங்களையும் அதிகமாக நேசிக்கும் இவர் அவரது மடிக்கணினியில் அதிகமான ஆபாசப்படங்களை சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில், உட்டாவில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து மேற்படி சட்டத்தரணிக்கும் மடிக்கணினியை …

Read More »