Home / செய்திகள் (page 20)

செய்திகள்

தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஊழியர் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்களை விமான நிலையத்தில் இருந்து கடத்த முற்படும்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான 40 தங்க பிஸ்கட்களையே குறித்த நபர் கடத்த முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்!!

நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமாயின் மனித வளத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மனித வளத்தை முன்னேற்றுவதில் 3 விடயங்கள் உள்ளடங்குவதாகவும் அவை கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கல்வியை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள்!!

2019 ஆண்டுக்கான சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 246 பேர் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெற்றுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.. பெறுபேறுகளை www.donets.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும்.. 2019 ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு 4,900 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி …

Read More »

லண்டனில் நடைபெறும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கு குறித்து விளக்கம் !!

மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியார் அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 …

Read More »

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி – 6 பேர் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி 40 ஏக்கர் பகுதியில் குளவிகூடு கலைந்து குத்தியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்கள் உள்ளிட்ட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வீட்டிற்கு அருகில் பாரிய குளவிகூடு ஒன்று காணப்பட்டுள்ளது. வீசிய கடும் காற்று காரணமாக குளவிகூடு கலைந்து அயலில் இருந்தவர்களுக்கு குத்தியுள்ளது. துரத்தி துரத்தி குத்தியதன் காரணமாக 67 அகவையுடைய கறுப்பையா சிவஞானம் என்ற வயோதிப குடும்பஸ்தரின் …

Read More »

தனியார் தொழில்முனைவோருக்கு பொருளாதாரத்தில் அதிகபட்ச வாய்ப்பை வழங்கும் நிதிக் கொள்கை!!

தனியார் தொழில்முனைவோருக்கு பொருளாதாரத்தில் அதிகபட்ச வாய்ப்பை வழங்கும் அரச நிதிக் கொள்கை ஒன்றை உருவாக்க எதிர்ப்பார்த்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அதிகாரத்திற்கு வரும் எமது ஆட்சியினுள் அரச நிதிக் கொள்கை ஒன்று உருவாக்கப்படும். …

Read More »

சீன நாட்டை சேர்ந்த 7 பேர் கைது!!!

சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் நேற்று (18) புத்தளம், வன்னாத்தவில்லு அருவக்காலு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் 7 பேரும் விசா இன்றி, புத்தளம் அருவக்காலு பிரதேசத்தில் உள்ள திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வன்னாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே …

Read More »

கோட்டாவிடம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பார்வை உள்ளது!!

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு பார்வை இருப்பதாக ஸ்ரீ.ல.சு.க. நம்புவதாக என்று ஸ்ரீ.ல.சு.க.வின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். நேற்று இரவு (18) நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்தார்.

Read More »

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு அறிவுறுத்தல்!!

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிதது;ள்ளார். இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டதாகவம் அவர் சுட்டிக்காட்டினார்.

Read More »

முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கை அடுத்த வாரம்!!

தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை ஒன்று இதுவரையில் நாட்டில் தயாரிக்கப்படவில்லை என்பதுடன், முன்பள்ளி கல்வியை முறைமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முதன்முறையாக இந்த தேசிய கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆளுநர்கள், மாகாண தலைமைச் செயலாளர்களுக்குமிடையே நேற்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி …

Read More »

எச்சரிக்கை – யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் ஏற்படக்கூடிய அபாயம்!!

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்பொழுது நிலவும் மழையுடனான காலநிலையயை அடுத்து டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று இந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரித்தார். விஷேடமாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வருடத்தின் கடந்த …

Read More »

இராணுவ தளபதி – கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி சந்திப்பு!!

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு நேற்று (18) உத்தியோகபூர்வமாக விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை சந்தித்தார். பின்னர் இராணுவ தளபதிக்கு கிளிநொச்சி படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதி, படையினர் மத்தியில் உரை நிகழ்த்தியதுடன் இறுதியில் அங்குள்ள …

Read More »

M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!!

மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read More »

அபிவிருத்தி பணிகளை மதிப்பீடு செய்ய சுயாதீன ஆணைக்குழு !!

பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் வியாபாரங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பணிகளை அங்கிகரிப்பதற்கும் அதனை மதிப்பீடு செய்வதற்கும் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் என தகவல் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த சுயாதீன ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கும், அது குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கும் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும், இலங்கையின் தேசிய மதிப்பீட்டுத் திறனை …

Read More »

கோட்டாபயவுக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு !!

தமது சங்கத்தின் பெரும்பாலானவர்களின் ஆதரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்டோர் இன்று (18) மிஹியான பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து தமது சங்கத்தின் ஆதரவை தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, தனியார் துறையாகிய …

Read More »

நாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என அறிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் தற்போது தீர்மானமிக்க தருணத்தில் இருக்கின்றோம். கடந்த நான்கரை வருடங்களில் நல்லாட்சி என்ற போர்வையின் கீழ் இருந்த அரசாங்கத்தில் சில பொறுப்புக்களில் இருந்த நபர் …

Read More »

TNA யோசனைகளுக்கு சஜித் இணங்கியுள்ளார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு சஜித் பிரேமதாச இணங்கியுள்ளாரா என்பது தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வௌிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு சஜித் பிரேமதாச முன்பே இணங்கியிருந்ததாகவும், எனினும் இரு கட்சிகளுக்கும் குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கருத்து பொய்யானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு …

Read More »

உரம் விலை தெரியாத எதிர்க்கட்சி வேட்பாளர்!!

நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு பொதுமக்களின் கோடிக்கணக்கான பணம் வழங்கப்படுவதாகவும், குறித்த பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக உரத்தை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும், அது ஒரு குற்றமா என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தான் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டு குறித்த பணத்தை பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அவர் தெரிவித்தார். …

Read More »

ஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைது !!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட 11 பேரில் 2 பிரதேச சபை உறுப்பினர்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். அத தெரண பிக் போக்கஸ் நிகழ்ச்சிக்கு இன்று (18) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுடன் …

Read More »

வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு!!

கடந்த 8 மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் 238 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக பெறப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 27 கோடி அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்பி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாத்தில் 143,587 சுற்றலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இத் தொகை …

Read More »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்!!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (17) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் மற்றும் 29 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று (17) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 89 முறைப்பாடுகள் …

Read More »

ஐதேக அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்!!

கோட்டாபய ராஜபக்ஷ என்பவர் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தால் கொழும்பு மாநகர சபையில் உள்ள பாதைகளை கூட செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் …

Read More »

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு!!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்கள் நால்வரிற்கு விஷேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் புதிய பாதுகாப்பு தொடர்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயக்க, மகேஷ் சேனாநாயக ஆகியோருக்கு விசேட பாதுகாப்பு …

Read More »

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறையாது!!

அரசாங்கத்தின், நிர்வாகத்தின், அமைச்சரவையின் மற்றும் முப்படையின் தலைவராக எதிர்காலத்திலும் ஜனாதிபதி செயற்படுவார் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 க்கும் அதிக பெரும்பான்மையை கொண்ட அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும் என அவர் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுராதபுர வர்த்தகர்களுக்கிடையிலான …

Read More »

மிருகக்காட்சி சாலையை சுற்றிவளைத்த பொலிஸாரிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு பிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 100 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெஹிவளை, கடுவான பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கசுன் ஷெஹான் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 100 …

Read More »

நாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை மேற்கொள்வதே எமது இலக்காக இருக்க வேண்டும்!!

அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பேசிய பெரும்பான்மையான தரப்பினர் தற்போதைய நிலையில் ஒற்றையாட்சி இலங்கையினுள் அதிகார பகிர்வு தொடர்பில் உடன்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை பிளவு படுத்தாமல் அதிகார பகிர்வை மேற்கொள்வதே எமது இலக்காக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். யாழ்ப்பாண காரியாலயத்தில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான இறுதி முடிவு …

Read More »

2 பிரதான யோசனைகளை சஜித் ஏற்றமை தோட்ட தொழிலாளர் வாழ்வில் புரட்சிகர மாற்றமே!!

பெருந்தோட்டதுறை மறுசீரமைக்கப்பட்டு, தோட்ட தொழிலாளர்கள், சிறு தோட்ட உடைமையாளராக மாற்றப்படுவார்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் தொடர்பாக விசேட ஜனாதிபதி செயலணி (Special Presidential Task Force on Plantation Community) உருவாக்கப்படும் என்ற இரண்டு பிரதான யோசனைகளை எங்கள் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஏற்றுக் கொண்டுள்ளமை இந்நாட்டு தோட்ட தொழிலாளர் வாழ்வில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த அடித்தளம் இட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், …

Read More »

நாட்டிற்கு பல நற்செய்திகளை கொண்டு வரம் தேர்தல் விஞ்ஞாபனம்!!

2020 ஆம் ஆண்டிற்கான எமது தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக நாட்டிற்கு பல நல்ல செய்திகளை கொண்டு வரவுள்ளதாக என மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (16) தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்திரனராக கலந்து கொண்ட அமைச்சர் இந்த இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ” 2015 எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் …

Read More »

நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவிப்பு!!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளைய தினம் (18) தனக்கு முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதால் தனக்கு நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவித்துள்ளார். மத்தல விமான நிலையத்தினுள் நெல் களஞ்சியப்படுத்தியதன் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் …

Read More »

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்!!

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய வம்சாவளித் தமிழரின் பிரவேசம் அமைந்துள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரண்டு தமிழர்கள் களமிறங்கியுள்ள போதிலும், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் தடவையாக களமிறங்கியுள்ளார் சுப்ரமணியம் …

Read More »

உலக ஓசோன் தினம் – கடற்படை 2000 சதுப்புநில மரங்களை நாட்டல்!!

ஓசோன் தினத்தை முன்னிட்டு 15 ஆம் திகதி மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், எரிவாயு வள பாதுகாப்பு மற்றும் ஓசோன் பிரிவு மற்றும் மீன்வள சங்கங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கடலோர பாதுகாப்புத் துறை, வனத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை கடற்படையினால், உலக கொண்டாட்டத்திற்காக திருகோணமலையில் உள்ள குளத்தில் 2000 சதுப்புநில மரங்களை நாட்டியுள்ளது. கிழக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்த பிரச்சாரத்தில் கிழக்கு கடற்படை கட்டளை …

Read More »

கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனம் 25 ஆம் திகதி !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (15) இரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போதைய நிலையில் நாட்டின் சுயநிர்ணயம் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். …

Read More »

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான …

Read More »

ஆயுதக்களைவு நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்துவதற்கு இலங்கை உறுதி!!

உலகளாவிய ஆயுதக்களைவு நிகழ்ச்சி நிரலை மேலும் மேம்படுத்துவதில், ஆயுதக்களைவுக்கான இலங்கையின் நடைமுறை ஆதரவை ஐக்கிய நாடுகள் உயர் பிரதிநிதி இசுமி நகாமிட்சுவுக்கு நியூயோர்க், ஜெனீவா மற்றும் வியன்னாவில் இருந்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க உறுதிப்படுத்தினார். நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 74 ஆவது அமர்வில் இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார செயலாளர், ஐ.நா. பொதுச் சபையின் பக்க நிகழ்வுகளில் 2019 அக்டோபர் 7ஆந் திகதி உயர் பிரதிநிதிகளை …

Read More »

ஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை!!

இலங்கையின் 07 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படும் தேர்தல் 2019.11.16 ஆந் திகதி அதாவது, இன்னும் 32 நாட்களில் நடைபெறவுள்ளது. இம்மாதம் 06 ஆந் திகதியுடன் முடிவடைந்த வேட்புமனுக்கள் கையேற்கும் காலத்துள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 41 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியிருந்தபோதும், 35 வேட்பாளர்கள் மாத்திரமே வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்துள்ளனர். 18 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 02 வேறு அரசியல் கட்சிகளும் 15 சுயேச்சை …

Read More »

நீண்ட காலமாக பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞன் யாழில் கைது !!

யாழ்ப்பாணம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உடமையிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜமேசன் அஜந்தன் (வயது 21) என்ற இளைஞனே நேற்று (15) கைது செய்யப்பட்டார். வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டில் பல முறைப்பாடுகளின் கீழ் இளைஞனை பொலிஸார் தேடி வந்த …

Read More »

யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்!!

யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பு – ஷங்கிரில்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து ராணுவத்திடம் 13,784 பேர் சரணடைந்திருந்ததாக அவர் …

Read More »

கோட்டாவிற்கு எதிரான வழக்கு 2020.01.09 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!!

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழங்கு இன்று (15) சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் சாட்சி விசாரணைகள் …

Read More »

நாட்டின் பாதுகாப்புக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்!!

இராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று (14) காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கஜபா படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் ஜய ஶ்ரீ மஹாபோதியில் மஹா சங்க தேர ர்களின் தலைமையில் சமய அனுஷ்டான ஆசிர்வாத பூஜைகள் மற்றும் பிரித் நிகழ்வுகள் இடம்பெற்றன. கஜபா …

Read More »