Home / செய்திகள் (page 3)

செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது!!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைது …

Read More »

ரஞ்சன் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம்!!

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கட்சி இந்த தீ்ர்மானத்தை எடுத்ததாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சியினுடாக கிடைக்கப்பெற்ற பல்வேறு முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த …

Read More »

LTTE தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில்!!

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் மீளவும் புதுப்பித்துள்ளது. குறித்த பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் காணப்படுவதுடன், மேலும் உலகில் தடை செய்யப்பட்ட 21 பயங்கரவாத குழுக்கள் மற்றும் 15 தனி நபர்களும் தடை செய்யப்பட்டவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். பட்டியலில் உள்ள நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி மற்றும் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பவர்கள் …

Read More »

திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை அடுத்த வாரம்!!

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கை இடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு …

Read More »

ராஜித சேனாரத்னவிடம் சுமார் 4 மணிநேர விசாரணை!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (14) மதியம் 12 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வெளியேறிய நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். (செய்திப்பின்னணி) வெள்ளை வேன் …

Read More »

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு !!

சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் …

Read More »

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால்!!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாரிய ஒரு சவால் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதன் காரணத்தால் பாரிய போட்டித்தன்மை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ராஜித சேனாரத்ன CID யில் ஆஜர்!!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். இன்று (14) மதியம் 12 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வெளியேறிய நிலையிலேயே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

Read More »

ஜனாதிபதி புதிய பாராளுமன்றம் ஒன்றை வழங்க வேண்டும்!!

ஜனாதிபதிக்கு எந்தளவு பலம் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய சக்திமிக்க பாராளுமன்றம் வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ பாராளுமன்றத்தை மாற்றி புதிய பாராளுமன்றம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிடின் ஜனாதிபதிக்கு எந்தளவு பலம் இருந்தாலும் சேவை செய்ய …

Read More »

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்!!

இலங்கை மத்திய வங்கி வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை மேலும் நீடித்துள்ளது. இதுதொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் …

Read More »

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என …

Read More »

ரஞ்சனின் குரல் பதிவு – பின்னணியில் ஐதேகவை சேர்ந்த முக்கியஸ்தர்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குரல் பதிவுகளை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கி, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு நுகேகொட மஜிஸ்திரேட் நீதிமன்றம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவு சம்பவங்களின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார …

Read More »

வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் என செயல்பட்ட 3 பேர் கைது!!

ஹபரண பொலிஸ் பிரிவில் மீகஸ் வேவ என்ற இடத்தில் உள்ள ஆயர்வேத மத்திய நிலையத்திற்கு சென்று பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் என தெரிவித்து 2 பெண்களை கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் ஹபரண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபரண பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பொலிஸ் இலட்சினையுடனான நீல நிற தொப்பி ஒன்று மற்றும் பொலிஸ் …

Read More »

கழிவுப் பொருள் கொள்கலன் – இரசாயன பரிசோதகருக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு!!

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தற்பொழுது கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் வைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை கொண்ட கொள்கலன் தொடர்பில் நீதிமன்ற உத்தரவை தட்டிக்கழித்தமைக்காக இரசாயன பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மேன்முறையிட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) நீதி அமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளருக்கும் சட்டமா அதிபருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்தது. இந்த கொள்கலன் தொடர்பில் இரசாயன அறிக்கை ஒன்றை வழங்குமாறு இதற்கு …

Read More »

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் நாளை (14) வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட …

Read More »

எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கும் அதிகாரம்!!

இன்று தொடக்கம் எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்றிலிருந்த சரியாக 46 நாட்களின் பின்னர் உதயமாகும் நாளின் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றை கலைக்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். …

Read More »

வெட் வரி நிவாரணத்தை பால்மாவுக்கு வர்த்தகர்கள் வழங்கவில்லை!!

அரசாங்கம் வழங்கிய வெட் வரிநிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது. வெட் வரி நிவாரணத்தின் அடிப்படையில் 400 கிராம் பால் மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும். என்று தெரிவித்துள்ள வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச, இது தொடர்பில அடுத்த வாரம் தொடக்கம் ஆராய நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை …

Read More »

ரஞ்சனின் உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகள் நாளை!!

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் நாளைய தினம் (13) விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் அடங்கிய பொருட்களை அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திடம் முன்வைத்து அது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. அதற்கமைவாக கைப்பற்றப்பட்ட இருவட்டுக்கள் …

Read More »

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை!!

எந்தவிதத்திலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க போவது இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதேபோல் எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்தவித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை எனவும் அவர் கூறினார். அம்பலந்தோட்ட பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அமைச்சர் இதனை கூறினார்.

Read More »

சில பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!!

நாளை (13) சில பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, மற்றும் ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குமே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

அசர்பஜானில் உயிரிழந்த மாணவிகளின் உறவினர் பலி!!

அசர்பஜான் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று இலங்கை மாணவிகளினதும் சடலங்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். அந்த மாணவிகள் மூவரும் தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்திலேயே உயிரிழந்திருந்தனர். ஒரு வருட ஆங்கில பாட நெறியை பயில்வதற்காக இந்த மூன்று மாணவிகளும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அங்குள்ள வெஸ்ட் காஸ்பியன் தனியார் பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் …

Read More »

ஐ தே கட்சியின் தலைவர் யார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கையளிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Read More »

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்களே என்பதில் எந்தவித சந்தேகமும் ஏற்பட கூடாது !!

1958, 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இன கலவரம் போன்று மீண்டும் ஒரு கலவரம் ஏற்படுமோ என்ற அச்சம் இலங்கை தமிழகர்கள் மத்தியில் வியாபித்துள்ளளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று ஆரம்பமான ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு …

Read More »

2000 அதிசொகுசு பஸ்களை கொள்வனவு செய்ய திட்டம்!!

இலங்கை போக்குவரத்து சபைக்காக புதிதாக இரண்டாயிரம் அதி சொகுசு பஸ்களை கொள்வனவு செய்வதற்காக தற்போதைய நிலையில் கலந்துரையாடப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீதொடமுல்ல டிப்போவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை நேற்று (10) மேற்கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார். புதிதாக 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்காலத்தில் மேலும் இரண்டாயிரம் பஸ்களை கொள்வனவு செய்ய கலந்துரையாடப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Read More »

​பெற்றோரின் கவனயீனத்தால் பரிதாபமாக பலியான பிஞ்சு குழந்தை!!

பகமுண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புவக்கஹ உல்பத, தெற்கு பிரதேசத்தில் வீட்டில் இருந்த ஒரு வயதுடைய ஆண் குழந்தை ஒன்று கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. குழந்தை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு பகமுண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு (10) 7.15 மணிக்கு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சடலம் பகமுண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பகமுண பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது!!

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது சிலாபத்தில் நேற்று (10) செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (10) மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 229 பொதிகளில் அடைக்கப்பட்ட …

Read More »

நாட்டின் மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!!

நாட்டின் துரித அபிவிருத்திக்காக மூளைசாலிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். உயர் தரம்வாய்ந்த கல்வியை வழங்குவதாக அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் உறுதியளிக்குமாக இருந்தால் இலங்கையில் கல்விக்காக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முடியும் என்பதுடன், உயர் கல்வித் துறையை நாட்டுக்காக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (10) …

Read More »

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்!!

கிழக்கு மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் …

Read More »

சஜித் பிரேமதாச தலைமையில் புதிய முன்னணி!!

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வெலிமடை ஊவா பரணகம பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீதி கட்டமைப்பை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (09) மாலை இடம்பெற்றது. இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அ.அரவிந்தகுமார் …

Read More »

இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா!!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட …

Read More »

இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலம் பதிவு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 300 க்கும் அதிகமானவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவு செய்த நபர்களிடம் இருந்தும் அதேபோல் முறைப்பாடுகளுடன் தொடர்புடைய நபர்களிடம் இருந்தும் இவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இதற்கமைய இதுவரை 345 பேரிடம் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது. ஆணைக்குழுவின் பதவி காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளதுடன், குறித்த …

Read More »

இலஞ்ச ஆணைக்குழு மற்றும் FCID குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமனம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் புதிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டு ஜனவரி 8 திகதி முதல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஆணைக்குழு மற்றும் பொலிஸ் விசேட பொலிஸ் பிரிவின் செயற்பாடுகளின் போது அரசியல் தலையீடு குறித்து ஆராய இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read More »

60 மதுபான போத்தல்களுடன் நபரொருவர் கைது!!

அதிக விலைக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இல்லாத மதுபான போத்தல்கள் தொகையொன்றினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 60 போத்தல்களுடன் கெகிராவை நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெகிராவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மதுபான தொகையின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் …

Read More »

இ.போ.சபைக்கு 400 புதிய பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!!

தற்போது நடைமுறையில் உள்ள இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இந்திய கடன் உதவி நடைமுறையின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு புதிய பஸ்களை கொள்வனவு செய்தல் இந்திய கடன் …

Read More »

கடவுச்சீட்டை தயார் நிலையில் வைத்திருக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் !!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேவையற்ற பயணங்களில் ஈடுபடவேண்டாம் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தமது கடவுச்சீட்டை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தூதரகம் அந்நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவித்துள்ளது.

Read More »

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை முடிவு!!

இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவா்களை விடுவிக்கவும், அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 52 படகுகளை திருப்பித் தரவும் இலங்கை முடிவு செய்துள்ளது என தினமணி செய்தி கூறுகிறது. இரண்டு நாள் பயணமாக புதுடெல்லி வந்த வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரை நேற்று (09) சந்தித்து கலந்துரையாடினார். இரு நாட்டு அமைச்சா்களும் பொருளாதார வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து …

Read More »

புலனாய்வுத் தலைமை அதிகாரியாக இஸ்லாமியர்?

உலகுக்கும், இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலை முஸ்லிம் பயங்கரவாதம் ஏற்படுத்தியுள்ள பின்னணியில், அரச புலனாய்வு தலைமை அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினை என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டார். இலங்கையில் தமிழ் பயங்கரவாதம் நிலவிய காலப் பகுதியில் தமிழ் புலனாய்வு அதிகாரி …

Read More »

நீதிமன்ற செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் தலையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது!!

நீதிமன்ற செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் தலையிட்டுள்ளமை ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் நீதிமன்ற அமைப்பு, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியன இலங்கையின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நீதிபதிகள் …

Read More »

பொலிஸார் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை!!

10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரனால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரதிவாதிகளுக்கு சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு அரலகங்வில பொலிஸில் பணி …

Read More »

குரல்பதிவுகள் வௌியானமை தொடர்பில் தௌிவுபடுத்திய பொலிஸ் தலைமையகம்!!

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெவ்வேறு நபர்களால் மற்றும் சமூக ஊடகங்களில் வௌியிடப்பட்டுள்ள தொலைப்பேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகள் பொலிஸாரால் வௌியிடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதற்காக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் தலைமையகம் இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் வௌியானமை தொடர்பில் அவற்றை வைத்திருந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் …

Read More »