Home / செய்திகள் (page 30)

செய்திகள்

சவுதி அரேபியா சபாநாயகரை சந்தித்த ஜனாதிபதி!!

இலங்கைக்கு வருகைதந்துள்ள சவுதி அரேபியாவின் சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையே பாராளுமன்ற தொடர்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென சவுதி அரேபியாவின் சபாநாயகர் தெரிவித்ததுடன், இதற்கான புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பினை பல துறைகளில் விரிவுபடுத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், …

Read More »

முத்தையா முரளிதரனின் வார்த்தைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் !!

நாம் இன்று புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையிலே பழையவற்றை களைந்து புதிய பாதையில் பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் பொழுது முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என இவருடன் பயணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது சம்பந்தமாக மேலும் கருத்து தெரிவித்த அவர், …

Read More »

பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனைக்கான திகதி குறிப்பு!!

வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை பரிசீலனை செய்வதற்காக டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது. காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி மற்றும் மாற்று கொள்கை மையத்தினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் சிசிர …

Read More »

8 அமைச்சர்களுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

2018 – 2019 வருடங்களுக்கான சொத்துக்கள் பொறுப்புக்களை அறிவிக்காத 8 அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனத்தினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, நவீன் திஸாநாயக்க, ஹரீன் பெர்ணான்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகில விராஜ் காரியவசம், ரவீ கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாச போன்ற அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்த …

Read More »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் அதிகாரம் !!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சட்ட ரீதியிலான அதிகாரம் இன்று (10) தொடக்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைப்பதாக அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் செயலக அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பு என்பனவற்றுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் இன்று முதல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கான …

Read More »

ரணில் – சஜித் இடையே இன்று முக்கிய கலந்துரையாடல்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று (10) முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் அலரிமாளிகையில் இன்று இரவு இடம்பெறவுள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும். இந்த சந்திப்பை கடந்த ஞாயிற்றுகிழமை நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது பிற்போடப்பட்டது. இதேவேளை, சஜித் …

Read More »

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவொரு பிரச்சினையும் இல்லை!!

ஒரே நாட்டுக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு மூலம் தீர்வு காண வடக்கு கிழக்கு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் என்டப்பிரைஸ் சிறிலங்கா கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவொரு …

Read More »

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி!!

இலங்கை இராணுவத்தில் புதிதாக பதவியேற்ற இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோக பூர்வமான விஜயத்தை இம் மாதம் (8) ஆம் திகதி மேற்கொண்டார். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனுர ஜயசேகர வரவேற்றார். பின்னர் இராணுவ தளபதியவர்களுக்கு கஜபா படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் …

Read More »

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!!

அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகாகக் காணப்படுகின்றது. எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் …

Read More »

கோட்டாபயவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தொடர்பில் சிக்கல்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள விதம் தவறானது என கோட்டாபய ராஜபக்ஷ சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள விதம் தவறானது …

Read More »

திறமையான குழந்தைகளுக்காக ஆதரவளிக்கும் திட்டம்!!

குறைந்த வசதிகளுடன் கல்வி கற்கும் திறமையான குழந்தைகளுக்காக ஆதரவளிக்கும் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக மின்சாரம், எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

Read More »

துலாலிந்த வனப்பகுதியில் தீப்பரவல்!!

மீகஹகிஹுல, துலாலிந்த வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இனந்தெரியாத சிலர் இன்று (09) மதியம் 1.30 மணி அளவில் இந்த பகுதிக்கு தீ வைத்துள்ளதாக வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அக்கலா உல்பத கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், பாதைகள் அற்ற அடர்ந்த வனப்பகுதியில் குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு செல்வது கடினம் எனவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றது. குறித்த வனப்பகுதியில் , பன்றிகள், மான்கள் மற்றும் மரைகள் அதிகளவில் உள்ள நிலையில், அவற்றை வேட்டையாடுவதற்காக …

Read More »

ரணிலை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவிப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் அரச நிறுவலனங்களில் இடம்பெற்ற மோசடி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி காலை 9.30 இற்கு ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பானை பிரதமரின் செயலாளர் அலுவலகத்திற்கும் அலரி மாளிகைக்கும் தொலைநகல் மூலம் நாளை (10) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Read More »

குப்பைகளை எடுத்துச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

அறுவக்காடு குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு குப்பைகளை எடுத்துச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று (09) அதிகாலை கரிக்கட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து அறுவக்காடு பகுதிக்கு குப்பைகளை எடுத்துச்சென்ற டிப்பர் வாகனம் ஒன்று முன்னால் சென்ற டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னால் சென்ற டிப்பர் வாகனத்தின் சுக்கானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த …

Read More »

பல மாகாணங்களில் இன்று மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு …

Read More »

10 கேரளா கஞ்சா பைக்கற்றுகளுடன் ஒருவர் கைது !!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 10 கட்டு கேரளா கஞ்சா பைக்கற்றுகளுடன் ஒருவரை நேற்று (08) கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீனக்குடா, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் கேரளா கஞ்சா விற்பனை செய்து வருவதாக திருகோணமலை போதைப் பொருள் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை சோதனை மேற்கொண்ட …

Read More »

தனி நபர்களினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது!!

கூட்டு முயற்சியில்லாமல் தனி நபர்களினால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டிற்கு புதிய ஆட்சி முறை ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை மக்கள் சொத்துக்களாக மாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாது!!

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் எனும் சக்திவாய்ந்த அடித்தளத்தில் இருந்து தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் இடம்பெற்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையாவிட்டாலும் கோட்டாபயவினால் வெற்றிபெற முடியும்!!

ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கதா பொதுஜன பெரமுனவுடன் சேர்வதினால் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். பலபிட்டிய பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் ஆதரவாளர்களும் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணையாவிட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷவினால் வெற்றிபெற முடியும் என பாராளுமன்ற …

Read More »

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி தடுப்புக்காவலில்!!

குருணாகல் நகரில் பாரிய அளவல் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி உட்பட இருவரையும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனத்தில் பயணித்திற்கு கொண்டிருந்த போது 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் சந்தேக நபர் ஒருவர் மற்றும் பெண்கள் இருவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட …

Read More »

ஐ.தே.கட்சியின் முடிவு நெருங்கி விட்டது!!

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரண்டு பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், அது எமது வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியில் இடம்பெறும் அதிகார போட்டி அக்கட்சியின் முடிவை நோக்கி கொண்டு செல்வதாக அவர் இதன்போது தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பிரதமர் ஜனாதிபதி தேர்தலில் …

Read More »

இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!!

பிலியந்தலை, படுவன்தர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட இராணுவ வீரர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவர் அனுராதபுரம்- எலகஹபத்துவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். தனது உயர் அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்துள்ள இவர், அந்த அதிகாரியின் வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத …

Read More »

பெரஹெரவில் யானை குழப்பம் – 17 பேர் காயம்

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையின் வருடாந்த தலதா பெரஹெரவில் இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் 13 பேர் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளனர். பெரஹெரவினை பார்வையிட வந்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் கலுபோவில, ஶ்ரீ ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுள் 13 பெண்களும் மற்றும் 4 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

சஜித்திடம் டீல் இல்லை!!

சஜித் பிரேமதாச மக்கள் தோல் கொடுத்து வந்த தலைவர் ஒருவரே அன்றி ஒப்பந்த அரசியலில் அதிகாரத்தை பெற்றுக் கொண்ட நபர் அல்ல என பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்தார். ஹோமாகம பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் கொண்ட இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாசவை இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அது கட்சியின் பின்னடைவுக்கான …

Read More »

தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர்!!

இலங்கையில் வடக்கில் மட்டும் மக்கள் படுகொலை செய்யப்படவில்லை தெற்கிலும் ஏராளமான இளைஞர் யுவதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கை மக்கள் தங்களின் நாட்டிலேயே ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ நடை முறை சாத்தியமான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என மேல் மாகாணம் மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாநகர சபை மைதானத்தில் முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் …

Read More »

பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிக்கும் கும்பல்!!

பாரிய நோயினால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதனால் நிதி வழங்கும் படி பலர் பொய்யான ஆவணங்களுடன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதினால் மக்கள் விழிப்புடன் இருந்து கொள்ளும் படி பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி, மீராவோடை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நிதி திரட்டும் வேலைகளில் பலர் இறங்கியுள்ளதாக அப்பிரதேச பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. அவ்வாறு நிதி கேட்டு வருபவர்கள் தொடர்பில் பொது மக்கள் …

Read More »

தேர்தல் பொலிஸ் கடமைகளுக்கு பொறுப்பாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம் !!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜெகத்அபேசிறி குணவர்தன சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக மேல் மாகாண மற்றும் வாகன போக்குவரத்து மாவட்ட பொறுப்பாளருக்கு மேலதிகமாக தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சுகாதார பணி உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு குறித்து ஆளுநரின் அதிரடி பணிப்புரை !!

சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இது தொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். …

Read More »

காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி!!

இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும். நச்சுத் தன்மை கொண்ட அந்தப் பாம்புக் குட்டிக்கு இரண்டு தலைகள், இரண்டு நாக்குகள் மற்றும் நான்கு கண்கள் உள்ளன. இரண்டு தலைகளும் ஒன்றோடு ஒன்றாக இல்லாமல் தனித்தனியாக இயங்குகின்றன. ´டபுள் டேவ்´ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்புக் …

Read More »

பிக்பாஸ் பார்க்கும் மக்களை நாய்கள் என திட்டிய சாக்க்ஷி !!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என கமல்ஹாசன் பல முறை கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று சீசனாக ஷோ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கும் அது தான் காரணம். இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. நேற்று வனிதா-ஷெரின் இடையே பெரிய சண்டை நடந்த நிலையில், தனக்கு தர்ஷன் உடன் எந்த relationshipம் இல்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார். அது பற்றி பேசிய சாக்ஷி “நாய்கள் ரோட்ல குரைக்கும்.. நான் …

Read More »

பிரதமரை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் நேற்றைய கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்தஅந்த கட்சியின் தவிசாளர், நேற்றைய கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தகுதியான வேட்பாளரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக …

Read More »

பெற்றோலிய கூட்டுத்தாபன வருமான இழப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் ஆறு கோடிக்கும் அதிகமான வருமான இழப்பு சம்பந்தமாக செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. கூட்டுதாபனத்தின் தகவல் தொழினுட்ப பிரிவின் செயற்பாடுகளுக்கு விரோதமாக மற்றுமொரு தெரிவு செய்யப்பட்ட எண்ணெய் உரிமையாளரின் கூட்டுதாபன அனுமதிபத்திரத்தை இரத்து செய்தமை மற்றும் எண்ணை நிரப்பு மத்திய நிலையத்தை மாற்றியமையால் ஆறரை கோடி வருமானம் …

Read More »

கமல் குணரத்னவின் கோரிக்கை!!

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் முன்பு பெற்ற சம்பளத்தை வழங்குமாறு எதிர்வரும் அரசாங்கத்திடம் கோர எதிர்பார்ப்பதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கமல் குணரத்ன எழுதிய ´உத்தர தேவி´ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று கொழும்பு பிசோப் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் …

Read More »

இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் !!

இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி கையில் தான் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிவாசன் யோகேஸ்வரன் தெரிவித்தார். கொடைக்கானலில் ஊடகவியலாளர்களிடம் நேற்று (06) கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஊட்டி போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் படித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. …

Read More »

மீனவர் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு !!

கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று (06) நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு வருகிறேன். கொடைக்கானல் அழகான பகுதி என்றும் இந்திய நாட்டிற்கும் இலங்கை நாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் இலங்கையில் கடந்த …

Read More »

இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை!!

சர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 43 இல் 23 ஊழல் சம்பவங்கள் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு, என்.சீ.சீ கிரிக்கட் கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சங்கக்கார, துரதிஷ்டவசமாக அண்மைய காலத்தில் ஊழல் தொடர்வில் சில சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. தற்போது விளையாடும் அல்லது விளையாடிய வீரர் ஒருவரேனும் …

Read More »

புதிய இராணுவ தளபதிக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி வாழ்த்து!!

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தில் வைத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியான அட்மிரல் ரவிந்திர சி. விஜயகுணவர்தனவை சந்தித்தார். பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவ தளபதியை பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் …

Read More »

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!!

2019 ஆண்டின் தேருனர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா என ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது. தங்களது அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேருனர் இடாப்பில் உங்களது பெயர் இல்லை என்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

சில பிரதேசங்களுக்கு இன்று நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது …

Read More »

கிளிநொச்சியில் மத வழிபாட்டு தலங்களில் படையினரின் சிரமதான பணிகள்!!

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் முழங்காவில் பிள்ளையார் கோயில் மற்றும் கரியலானஹபடுவான் அந்தோனியர் கிறிஸ்த்தவ தேவாலய வளாகத்தில் அண்மையில் படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிரமதான பணிகளில் 11 (தொ) கஜபா படையணி, 20 (தொ) விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த 32 படை வீரர்களும், 16 சிவிலியன்களும் இணைந்து கொண்டனர். …

Read More »