Home / செய்திகள் (page 40)

செய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மிகப் பெரிய தவறு !!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது என்பது மிகப் பெரிய தவறு என அக்மீமன தயாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லது ஒழிபதன் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அக்மீமன தயாரத்தன தேரர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

Read More »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாடு இன்று!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மகளீர் மாநாடு இன்று (31) கொழும்பு கண்காட்சி மற்றும் சம்மேளன மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால செயற்பாடுகளை சக்தி மயப்படுத்தும் நோக்கில் இன்று மேலும் பல கூட்டங்களும் நடைபெறவுள்ளன. இதேவேளை, இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளீர் மாநாடு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கோகிலா ஹர்ஷனி குணவர்தன, ´ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன …

Read More »

FBI மற்றும் புலனாய்வு நிறுவனங்கள் உரிய அங்கீகாரத்துடனேயே இலங்கைக்கு வருகை !!

அமெரிக்காவின் FBI உள்ளிட்ட ஏனைய புலனாய்வு நிறுவனங்கள் உரிய அங்கீகாரத்துடனேயே இலங்கைக்கு வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் இலங்கைக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். விசாரணைகளின் போது தடய மாதிரிகளை அவர்கள் பெற்றிருந்தால் அது சட்டரீதியான முறைகளுக்கு அமைவாகவே பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாகவே …

Read More »

காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு !!

காற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், கம்பஹா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ …

Read More »

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் முதல் வாரத்தில் !!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கு தேர்தலை உடனடியான நடத்துமாறு உயர்நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்து. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியால் எல்பிட்டிய பிர​​தேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு, நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட மனு தொடர்பிலான தீர்ப்பின் போதே …

Read More »

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமனம்!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ ஊடக பேச்சாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹலிய ரம்புக்வெல மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஊடக பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுஜன முன்னணியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் நளீன் குமார நிஷ்ஷசங்க வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களை பார்த்து வேதனையடைகிறேன்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா மேலதிக கொடுப்பனவை பெற்றுக்கொடுக்காத தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களை பார்த்து வேதனையடைவதாக முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர்களான திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்து வந்தனர். அதற்காக அவர்கள் இன்றைய நாள் வரை காலக்கெடு ஒன்றையும் வழங்கிய நிலையில் அந்த உறுதி மொழியை நிறைவேற்ற அவர்கள் தவறியுள்ளனர். இந்த …

Read More »

பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்!!

பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக தனித்தனியாக போராடுவதை விட ஒன்றிணைந்து மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலம் வினைத்திறனான பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More »

கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019 ஜனாதிபதி தலைமையில்!!

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (29) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உலகளாவிய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய தரப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை விசேட நிபுணர்களின் பங்குபற்றலில் “சமகால பாதுகாப்பு தேவைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் மகத்தான பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு நேற்றும் இன்றும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. …

Read More »

காற்றின் வேகத்தில் அதிகரிப்பு ஏற்படும்!!

காற்று நிலைமை நாடு முழுவதும், குறிப்பாக தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, களுத்துறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் …

Read More »

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் நாளாந்த விசாரணை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் விஷேட நீதாய நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Read More »

சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கு முயற்சி!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரலின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்பட வேண்டும் என ஐ.தே.கவின் யாப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவால் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு கோரிய பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்பட வேண்டும் என கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிசங்கா நாணாயக்கார நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் இரண்டு முக்கிய கட்சிகள் ஏற்கனவே தேர்தலுக்கான …

Read More »

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை!!

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. குறித்த இருவரும் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றதை அடுத்து அவர்கள் பதவி விலகியதாக கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இரந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மீனவர்களுக்கு விஷேட அறிவுறுத்தல்!!

நாளை காலை 6 மணி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி காலை 8 மணி வரையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மன்னார் முதல் புத்தளம் வரையில், கொழும்பு, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் முதல் மட்டக்களப்பு கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் …

Read More »

ரணில் விக்ரமசிங்க பாரிய பொருளாதார புரட்சியை நிகழ்த்தியுள்ளார்!!

கடந்த நான்கு வருடங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையாமல் இருந்திருந்தால் ஹம்பாந்தோட்ட துறைமுகம் போன்ற மூன்று துறைமுகங்களை உருவாக்கியிருக்கலாம் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´நாட்டின் கடன் சுமை 70 வீதம் முதல் 90 வீதம் வரை உயர்த்த முடிந்துள்ளது. இதுவே ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார …

Read More »

கோட்டாபயவை சந்தித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள்!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரபல மூவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். அதனடிப்படையில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் பொருளாலர் லசந்த அழகியவன்ன மற்றும் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர ஆகியவர்களே இவ்வாறு சந்தித்துள்ளனர்.

Read More »

ஒன்றரை வாரங்களுக்குள் ஐ.தேக வின் வேட்பாளர் நியமிக்கப்படுவார்!!

எதிர்வரும் ஒன்றரை வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்கப்படுவார் என அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் இந்த விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு …

Read More »

சஜித் தலைமையில் விசேட சந்திப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மங்கள வழங்கிய இராபோசன நிகழ்விலும் அவர்கள் கலந்துக்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, …

Read More »

தனித்து போட்டியிடுவதற்கான இயலுமை எமக்கு உள்ளது!!

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்ட பின்னர் கூட்டணியில் இணைவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். தேர்தலில் வெற்றிப்பெற வேண்டுமாயின் மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார். ஒருவரின் …

Read More »

பெருந்தோட்டங்களில் தற்போது பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள்!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதானமான செயற்பாட்டின் காரணமாகவே பெருந்தோட்டங்களில் தற்போது பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பதுளை பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார். தமிழ் முற்போக்கு கூட்டணி பிரிந்து செயற்பட்டால் அது மற்றைய தரப்புகளின் வெற்றியாக அமைந்துவிடும் எனவும் அவர் தெரிவித்தார். ஆகவே தான் பிரிவினைக்கு இடம்கொடுக்காமல் தமது கூட்டணி நிதானமாக செயற்படுவதாக அவர் …

Read More »

சஜித் பிரேமதாசவிற்கு எதிராக குற்றச்சாட்டு !!

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் விதிமுறைகளை மீறி 4500 ஊழியர்களை உள்ளீர்க்க அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுக்கமைய இன்று( 28) விசாரணைகள் ஆரம்பமாகின. இதற்கிடையில், வீடமைப்பு, நிர்மானம் மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மத்திய கலாச்சார நிதியத்திற்கு சொந்தமான 120 பில்லியன் ரூபா நிதி காணாமல் போனமை தொடர்பாக பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் …

Read More »

எவர் ஆட்சியமைத்தாலும் திருடர்களை பிடிப்பது வெறும் கனவாகும்!!

திருடர்களை பிடிப்பதற்கு சிறந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை ஒன்றுக்காக உயர் நீதிமன்றத்திற்கு வருகைதந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நடவடிக்கைகளை மக்களால் விளங்கிக்கொள்ள முடியாது எனவும் ஜே.வி.பியில் உள்ள பெரும்பாலானோர் திருடர்களாக இருப்பதனாலேயே அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், எவர் வந்தாலும் திருடர்களை …

Read More »

சில பகுதிகளுக்கு 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி!!

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, …

Read More »

மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்!!

மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இவ்வாறு சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Read More »

விபத்துக்குள்ளான புகையிரதத்தின் சேவையாளர்கள் வேலைநிறுத்தம்!!

சமிஞ்ஞையை கவனத்திற்கொள்ளமால் பயணித்து விபத்துக்குள்ளான புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவரே இவ்வாறு வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இன்று காலை இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதனால் பிரதான வீதியின் …

Read More »

ஜனாதிபதியை இரகசியமாக சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு கொழும்பில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக செயலாளர் ரொஹன் வெலிவிட்ட உறுதி செய்துள்ளார். எவ்வாறாயினும் இது தனிப்பட்ட சந்திப்பு என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட விசேட உபகரணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!!

ரஷ்ய விஞ்ஞானியினால் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள், கதிர்வீசல் மற்றும் இரசாயன பொருட்களை கண்டறிவதற்கான விசேட உபகரணமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (27) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 50,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இந்த புதிய தொழிநுட்ப உபகரணம் கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ்வின் (Dr.Evgeny Usachev) தயாரிப்பாகும். கலாநிதி எவ்ஜெனி உசச்சேவ் இவ்வுபகரணத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததுடன், ரஷ்ய விஞ்ஞானி ஓல்கோ உசச்சேவா (Olgo Usacheva), இலங்கைக்கான ரஷ்ய …

Read More »

புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்!!

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயை சந்தித்தார். அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயத்தின்படி இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் இராணுவத் தளபதியினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.லங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் …

Read More »

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை இடம்பெறும். முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும். முற்றாக மூடப்படும் பாடசாலைகள் அடுத்த தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்விப் பொது …

Read More »

வாஸ் குணவர்தனவின் வழக்கு விசாரணை டிசம்பரில்!!

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது வழக்குடன் தெடர்புடைய தொலைப்பேசி அழைப்புகள் சம்பந்தமான சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதுடன் வழக்கை …

Read More »

எந்தவொரு கட்சிக்கு சார்பாகவும் கருத்து தெரிவிக்கவில்லை!!

எந்தவொரு சந்திர்ப்பத்திலும் தான் ஒரு கட்சிக்கு சார்பாக கருத்து தெரிவிக்கவில்லை என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இத்தாலியில் இருந்து வருகைதந்த ஆயர்கள் குழாமுடன் இன்று காலை கண்டி தலதா மாளிகைக்கு சென்ற ஆண்டகை இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆண்டகை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது எமது பொறுப்பு என கூறினார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் குறித்து முறையான …

Read More »

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும்!!

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த சரியான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்க வேண்டும் என ஜனாதிபதி என்ற வகையில் தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவ்வாறான சரியான தொலைநோக்கு மற்றும் திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே கல்விமான்கள் நிறைந்த சிறந்ததோர் நாடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (26) பிற்பகல் றுகுணு பல்கலைக்கழக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 13வது இலங்கை பல்கலைக்கழக …

Read More »

ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் …

Read More »

மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!!

பதுரளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (26) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெலின் கந்த பகுதியை சேர்ந்த 72 வயதுடைய பிரேமதாஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பதுரளிய பொலிஸார் …

Read More »

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அல்ல!!

மக்கள் வங்கியை தனியார் மயமாக்குவதற்கான ஒரு செயல்முறை இருப்பதாக சோசலிச மக்கள் முன்னணி கூறியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவா நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என சிலரால் அழைக்கப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாச, இந்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார். நிதி மையத்தை தனியார் மயமாக்குவது …

Read More »

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல!!

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவான் விஜேவர்த்தன தெரிவித்தார். பியகமவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் அவசரகாலச் சட்டம் கண்டி தலதா மாளிகை பெரஹரவை முன்னிட்டு நீடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். பொலிஸாரும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். இராணுவத்தின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்திருந்தனர். இதனால்தான் அவசரகாலச் சட்டத்தை நாம் ஒரு …

Read More »

இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை!!

பதவியில் இருந்து சபாநாயகர் இராஜினாமா செய்ய போவதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என சபாநாயகரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. சபாநாயகரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ´2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாமல் ஒரு புதிய பிரதமர் சட்டவிரோத மற்றும் ஜனநாயக விரோத செயன்முறையினூடாக தெரிவானதை போன்று மற்றுமொரு நிலைமை ஏற்பட்டால் தான் வகிக்கும் பதியைவிட்டு விலகுவதாக …

Read More »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் மாற்றம் !!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் அப்பதவியிலிருந்த எஸ்.பி திசாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளராக இருந்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

ஜாகிர் நாயக்கை நாடு கடத்தப் போவதில்லை?

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். மலேசிய இந்தியர்கள், சீனர்கள் குறித்து மதப் போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. …

Read More »

குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு!!

“இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன. வருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971 ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2041 ஆம் ஆண்டு வாக்கில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியைவிட அதிக குறைந்த …

Read More »