Home / செய்திகள் (page 5)

செய்திகள்

வெளிநாடுகளுடன் நட்புறவை முன்னெடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதே நோக்கம் !!

இந்தியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுடன் நட்புறவுடனும் சர்வதேச அரசியல் ரீதியிலும் தொடர்புகளை முன்னெடுத்து நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கையை மேற்கொள்வதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச சொத்துக்களை வெளிநாட்டுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு இலங்கையில் காணி வழங்குவது தொடர்பாக …

Read More »

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ …

Read More »

உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம்!!

உத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். கடந்த காலப்பகுதியில் பதவியில் இருந்த அரசாங்கமும் இந்நாட்டை நேசிப்பவர்களும், எதிர்க் கட்சியினரதும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்த உத்தேச …

Read More »

தினேஸ் – ஜோன்ஸ்டன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்பு!!

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை, சபை முதல்வர் அலுவலகப் பணியாளர்கள் வரவேற்றதுடன், அவர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடமைகளைப் பொறுப்பேற்றுக் …

Read More »

சிகை அலங்கார நிலையத்தில் கொலைச் சம்பவம்!!

படபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மது போதையில் இருந்த ஒருவரினால் சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக வருகைதந்த இளைஞன் ஒருவர் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த குறித்த இளைஞன் பலபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக …

Read More »

தற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் !!

8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (03) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முற்பகல் 10 மணிக்கு சபா மண்டபத்துக்கு சமூகமளித்த ஜனாதிபதி, பிரதான ஆசனத்தில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தியிருந்தார். கொள்கை பிரகடன உரையை தொடர்ந்து மதியம் 1.00 மணி வரை பாராளுமன்றம் ஜனாதிபதியால் …

Read More »

அரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்!!

இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களான நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த வருண லியனகே !!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண பிரியந்த லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டுள்ளார். (பின்னிணைப்பு – 01.47 pm) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானதை தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வருண லியனகே இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். 8 ஆவது பாராளுமன்றத்தின் 4 …

Read More »

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிப்பு!!

ஜனாதிபதியால் இன்று முற்பகல் ஒத்திவைக்கப்பட்ட 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் இன்று மதியம் 1.00 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். மேலும், எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

பாராளுமன்றத்தில் புதிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படுவர் !!

பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா மற்றும் எதிர்க் கட்சியின் பிரதம கொறடா ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் இன்று (03) உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளனர். இதேவேளை குறித்த பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் பாராளுமன்ற செயற்பாடுகள் குறித்து கலந்துரையாட ஆளும் கட்சியினதும், எதிர்க் கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் நேற்று நடைபெற்றன. இதற்கமைய ஆளும் கட்சியின் பாராளுமன்று உறுப்பினர்களின் குழு கூட்டம் ஜனாதிபதி …

Read More »

மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவதே நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக தீர்வு மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்குவது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருடம் முதல் நல்ல விடயங்களை மாணவர்களுக்காக செய்வதை இலக்காக கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

புதிய சபை முதல்வர், பிரதம கொறடா பெயரிடப்பட்டுள்ளனர்!!

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (பின்னிணைப்பு – 5.48 pm) இந்நிலையில், எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக கயந்த கருணாதிலகவை நியமிப்பதற்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அக்கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More »

ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்குட்படுத்துவது முறையல்ல – ரணில் !!

பாராளுமன்றத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்துவது முறையல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் போன்ற தேசிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – 3 , 5ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இலத்தில் இன்று …

Read More »

அரசியல் முதிர்ச்சியற்ற முடிவுகளால் கூட்டமைப்புக்கு பாரிய சரிவுகளை சுமந்திரன் ஏற்படுத்தி உள்ளார்!!

போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, …

Read More »

காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி!!

வீரவெவ, திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த நபரொருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (01) அதிகாலை உயிரிழந்த நபர் பயிர் நிலங்களை பார்வையிடுதவற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ள நிலையில் மீண்டும் வராததால் அவரை தேடி சென்ற போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் குறித்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த …

Read More »

நாட்டின் நெருக்கடிகளுக்கு 19 ஆவது அரசியலமைப்பு திருத்தமே காரணம்!!

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் பல நெருக்கடிகள் உருவாக காரணமாக அமைந்ததாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்த நிபுணர்களில் கலாநிதி ஜயம்பதி, இது பெரும் அழிவு என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அனைவரும் உடன்படுவார்களாயின் அது தொடர்பில் மீண்டும் …

Read More »

சுவிட்சர்லாந்து அரசு வௌியிட்டுள்ள அறிக்கை!!

இலங்கையை களங்கப்படுத்தும் எவ்வித நோக்கமும் தமக்கு இல்லை எனவும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதாகவும் சுவிட்சர்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன கடந்த 30 ஆம் திகதி இராஜதந்திர அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் ஒருவர் தொடர்பான தவறான புரிதல்களால் …

Read More »

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!

பேலியகொடையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றவியல் பிரிவினரால் நேற்று (01) காலை 11.40 மணியளவில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 5 கிராம் 270 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (02) புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றவியல் …

Read More »

பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில …

Read More »

யாழ்ப்பாணத்திற்கு அதிவேக நெடுஞ்சாலை!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக அதிவேகப் நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார் கண்டி – கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், கொழும்பிலிருந்து இரத்தினபுரி …

Read More »

சிங்களத் தலைவர்கள் அரசியல் தீர்வை வழங்க கூடாதென்பதில் – சித்தார்த்தன்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மறு கருத்து வைத்திருப்பவர்களே கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை விமர்சனங்களை சுமத்தி வருவதாக அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பிற்கு மறு கருத்து வைத்திருக்கின்றவர்கள் தான் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை, கூட்டமைப்பின் செயற்பாடுகளில் திருப்தியில்லை உள்ளிட்ட இவ்வாறான பல குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கின்றார்கள் என்பது உண்மை. ஆனால் எல்லா விடயங்களிலும் நாங்கள் எங்களால் இயன்ற அளவு முயற்சிகளை எடுத்திருக்கிறோம். முக்கியமாக …

Read More »

20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின் !!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 1999 ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புதினை நியமனம் செய்தார். அதன்பின் ஜனாதிபதி பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் …

Read More »

புத்தாண்டு மது விற்பனை 300 கோடி?

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு கொண்டாடும் நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு பீர், விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம் உள்ளிட்ட பல்வேறு மது வகைகளை பாட்டில் பாட்டிலாக வாங்கிச்சென்றனர். மாலையில் இருந்து இரவு வரையிலும் மதுக்கடைகளில் கட்டுக்கு அடங்காத கூட்டம் …

Read More »

இரண்டு திருமணம் – கையில் பணம் இல்லை – நடிகை மருத்துவமனையில்! !

தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலா. ஏற்கெனவே திருமணம் ஆன இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார். அவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஷர்மிலா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அட்மிட் ஆகும்படி கூறியுள்ளனர். மருத்துவமனையில் …

Read More »

ராஜித்த சாதாரண வார்டுக்கு மாற்றம்!!

லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று (01) பகல் சாதாரண வாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜித்த சேனாரத்ன கடந்த 30 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை …

Read More »

தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி இணைவு!!

வளம்பெறும் நாட்டிற்கு – பலன்தரும் மரங்கள்´ எனும் தொனிப்பொருளில் பத்து இலட்சம் மரங்களை நாட்டும் தேசிய மரநடுகை செயற்திட்டத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இன்று (01) முற்பகல் இணைந்துகொண்டார். மிரிஹானையில் அமைந்துள்ள தனது தனிப்பட்ட உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டிய ஜனாதிபதி நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள மரநடுகை செயற்திட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இலங்கையில் தற்போது 29 சதவீதமாக காணப்படும் வன அடர்த்தியை எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் …

Read More »

அரச சேவைக்கு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!!

´நாட்டை கட்டியெழுப்பும் செழிப்பின் பார்வை´ என்ற தொனிப்பொருளை முதன்மைப்படுத்திய பயனுள்ள மற்றும் அனுகூலமான அரச சேவைக்கு உண்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும் அரச சேவையில் ஜனாதிபதி மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். ஜனாதிபதி செயலாளரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் நிகழ்வில் …

Read More »

நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை, களுத்துறை பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை வீழ்ச்சி பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை …

Read More »

மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கதிரை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு எவரினதும் பிடியில் சிக்க நான் தயாராக இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மஹர மற்றும் வத்தளை தொகுதிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும் எனவும், அவ்வாறு இல்லையென்றால் மொட்டு …

Read More »

தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் மீது குற்றச்சாட்டு!!

பெருந்தோட்ட பகுதிகளில் வீடுகளையும் ஏனைய கட்டடங்களையும் அமைக்க தேசிய கட்டிட ஆய்வு நிறுவகத்தினால் துரிதமாக ஆய்வறிக்கைகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க வித்தானகமகே தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன் …

Read More »

நிறுத்தி இருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!!

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மித்தெனிய 8 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01)அதிகாலை 3.20 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு …

Read More »

மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை!!

நாட்டினுள் வெளிநாடுகளில் இருந்து எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் அடிப்படையில் இன்று (01) முதல் மதுபானம் தயாரிப்பதற்காக எத்தனோல் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் எத்தனோல் பாரிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More »

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதே தீர்வு!!

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார் சென்னைப் பல்கலைக்கழகக் குற்றவியல் துறையின் மூத்த ஆய்வாளர் இளம்பரிதி. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களுக்கு மட்டுமல்லாது, இலங்கைக்கும் பலமுறை பயணம் மேற்கொண்டிருக்கிறார் இவர். இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை களை அரசியல் தளத்தில் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். புதிதாக நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள சூழலில், இளம்பரிதியைச் சந்தித்து சில …

Read More »

பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஷவேந்திர சில்வா நியமனம்!!

பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து இவர் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More »

இவ்வருட காலப்பகுதியில் 16,647 வழக்குகள் நிறைவு!!

இவ்வருட காலப்பகுதியில் மாத்திரம் 16,647 வழக்குகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வருடத்திற்குள் 9,851 குற்றப்பத்திரிக்கைகள் நாட்டின் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு செயற்பாடுகளை பரிமாற்றுவதற்காக பொலிஸ் நிலையங்களுக்கு 3568 வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2957 விடுதலை உத்தரவு வழக்குகள் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் …

Read More »

பதவியை விட மக்களின் அன்பு பெறுமதியானது!!

பதவியை விட மக்களின் அன்பு மற்றும் வரவேற்பே தனக்கு பெறுமதியானது என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்மலான பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பதவிக்கு ஆசைப்பட்டு சண்டை போட்டு கட்சியை பிளவுபடுத்த நாங்கள் எவ்விதத்திலும் முயற்சி செய்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் அன்பு என்பது ஜனாதிபதி பதவியை விட பெறுமதி வாய்ந்த பதவி, அதனால் நாங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளும் …

Read More »

பொலிஸ் சேவை எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டமான நிலைமைக்கு காரணம் இதுதான்!!

பொலிஸ் திணைக்களத்திற்கு நேரடி தலைமைத்துவத்தை வழங்க கூடிய புகழ் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்கப்படாமையே பொலிஸ் சேவை தற்போது எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டமான நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் தான் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட போது அந்த நேரத்தில் தன்னைவிட மூத்தவராக இருந்த ஒரு நேர்மையான அதிகாரி அந்த வாய்ப்பை இழக்க …

Read More »

பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மாணவ குழுக்கள் ஒரே தடவையில்!!

பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மாணவ குழுக்களை ஒரே தடவையில் உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை இதுவரையும் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க முடியாதுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டளருடன் கலந்துரையாடி விரைவான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

பட்டாசுகளை பயன்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தவும்!!

புத்தாண்டு காலத்த அனர்த்தங்களைத் தவிர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பட்டாசுகளைக் பயன்படுத்துதல் மற்றும் வீதி, நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தில் சிறுவர்கள் விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More »

120 தமிழ் பொலிஸாருக்கு அதிரடி இடமாற்றம்!!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இந்த இடமாற்றம் உடனடி அமுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொலிஸாருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ். மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கான கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தமிழ் பொலிஸார் தான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு …

Read More »