Home / செய்திகள் / இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

பாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருந்ததா? பொலிஸில் முறைப்பாடு!!

பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று பொலிஸ் அவசர இலக்கத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த கூறினார். நேற்று பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபஷ ஆற்றிய உரையின் நம்பகத்தன்மை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை தோன்றியது. இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் கையில் …

Read More »

கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு!!

கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது. இதேவேளை இன்று மதியம் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளமை கூறத்தக்கது.

Read More »

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலை நடத்தி வெற்றி பெறுங்கள் – ஹக்கீம் சவால்!!

ஜனாதிபதிக்கு துணிச்சல் இருந்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி, அதில் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சவால் விடுத்துள்ளார். நேற்று (15) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றி ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர், …

Read More »

வடக்கு மக்கள் அவனதானத்துடன் இருக்கமாறு அறிவுறுத்தல்!!

வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் உருவான கஜ சூறாவளி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்தச் சூறாவளி இன்று பிற்பகல் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்குத் திசையில் சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டிருந்ததாக அறிவிக்கப்படுகிறது. இது இன்றிரவு கரையிலிருந்து 100 கிலோ மீற்றர்வரை அண்மிக்கக்கூடும். இதன் காரணமாக வடமாகாணத்தில் அடைமழை பெய்து கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கஜ …

Read More »

100 முதல் 110 கி.மீ. வேகத்தில் தீவிர புயலாக கரையை கடந்தது கஜா!!

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நாகை …

Read More »

சபாநாயகர், கட்சித்தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் சந்திப்பு!!

கட்சித் தலைவர்கள், சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

ஹெரோயின் வைத்திருந்த மாணவனுக்கு ஒரு மாத சிறை!!

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை மாணவனுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார். ஒரு மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க மாணவனை சான்று பெற்ற சீர்திருத்தப் பாடசாலையில் சேர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் கட்டளை வழங்கியது. ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண நகர் பகுதியில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் கடந்த …

Read More »

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பியல் திஸாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். சந்தேகநபருக்கு பிணை வழங்குவது சம்பந்தமாக அன்றைய தினம் அறிவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகள் இடம்பெறுவதனால் சந்தேகநபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் …

Read More »

பெற்றோல் மற்றும் டீசல் விலை 05 ரூபாவால் குறைகிறது!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே கூறியுள்ளார். அதன்படி ஒரு லீட்டர் 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலை 05 ரூபாவால் குறைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் கூறியிருந்தமை கூறத்தக்கது.

Read More »

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்!!

கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் நடத்தப்படுகிறது.

Read More »

பசிலின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வீடு வழங்குவதற்காக 2992 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதன் மூலம் …

Read More »

12 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது!!

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவலை பிரதேசத்தில் கார் ஒன்றில் அவற்றை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சுமார் ஒரு கிலோ கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், போதைப் பொருளின் பெறுமதி சுமார் 12.6 மில்லியன் ரூபா என்று …

Read More »

பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா!!

காஸாவிலுள்ள பாலத்தீனிய தீவிரவாதிகளோடு நடத்தி வருகின்ற 2 நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போர் நிறுத்தும் ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் லீபர்மென் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவையின் இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திடம் சரணடைவது” என்று இஸ்ரேல் பெய்டெய்னியு கட்சியின் தலைவரான அவிக்டோர் லீபர்மென் விமர்சித்துள்ளார். ஹமாஸ் குழுவோடு நீண்டகால போர் நிறுத்தத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் விமர்சித்துள்ளார். …

Read More »

பாராளுமன்றம் மீண்டும் நாளை கூடும்!!

பாராளுமன்றத்தை மீண்டும் நாளை (16) கூட்டுவதற்கு தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர்களுக்கு இடையில் இன்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மீண்டும் நாளை பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்பட உள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read More »

ஐ.தே.க உறுப்பினர்கள் கூரிய ஆயுதங்களை எடுத்து வந்தனர்!!

பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று (15) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனது ஆசனத்தில் அமர்ந்து இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு அமைதியற்ற நிலமை ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தால் இவ்வாறான நிலமை …

Read More »

சிறியளவில் மழை பெய்யக் கூடும்!!

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும். நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில …

Read More »

புகையிரதத்தில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை!!

பேராதெனிய, நானுஒயா புகையிரத கடவைக்கு அருகில் புகையிரதத்தில் குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (14) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பில் இருந்த கண்டி நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்திலேயே குறித்த நபர் குதித்த தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிலிமதலாவ, இம்புல்மல்கம பகுதியை சேர்ந்த 21 வயதுடைய சானக நிரோஷன் எனும் இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். …

Read More »

பொதுத் தேர்தலை நடத்து ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை!!

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருப்பதை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே தான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.10 ரூபாவாக பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நவம்பர் 2 ஆம் திகதி அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பாராளுமன்றம் 21ம் திகதி வரை ஒத்தி வைப்பு!!

பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

Read More »

இனிமேல் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை!!

பாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்குவதாகவும், அதற்கு தனக்கு உரிமை இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

Read More »

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பார் !!

சபாநாயகரிடமிருந்து கடிதம் கிடைக்கப் பெற்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பார் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேலே அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கூறினார்.

Read More »

மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி !!

எதிர்வரும் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சருக்கு பதிலாக சீருடைக்கான துணி வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். கல்வியமைச்சர் சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவே சீருடைக்கான துணி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More »

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த தீர்மானம்!!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக சட்ட வரைவு ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய தேவையுள்ளதாகவும், ஆகவே இவ்வாறானதொரு சட்ட …

Read More »

அமைச்சரவையின் ஊடக சந்திப்பு இன்று!!

அமைச்சரவையின் தீர்மானங்களை தெரிவிப்பதற்கான அமைச்சரவை கலந்துரையாடல் இன்று (14) பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளது.

Read More »

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு!!

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரேரணை ஒன்று பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனமானது அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால், ஒக்டோபர் 26ம் திகதி நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் இந்த …

Read More »

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் வாக்களிப்பு!!

பாராளுமன்றத்தில் இன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறியுள்ளார். இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்து அவர்கள் வாக்களித்துள்ளதாக ஆர். சம்பந்தன் கூறியுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் …

Read More »

பேசாலை அருள்மிகு ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான சூரன் போர் நிகழ்வு.!!(PHOTOS)

பேசாலை அருள்மிகு ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான சூரன் போர் நிகழ்வு. 13.11.2018

Read More »

மன்னார் கீரி அருள்மிகு ஶ்ரீ முருகன் ஆலய சூரசங்காரம்.!!(PHOTOS)

மன்னார் கீரி அருள்மிகு ஶ்ரீ முருகன் ஆலய சூரசங்காரம் 13.11.2018

Read More »

மாதம்பை முருகன் ஆலயத்தில் 12.11.2018 அன்று கந்தசஷ்டி விரத 5ஆம் உற்சவத்தன்று!!(PHOTOS)

மாதம்பை முருகன் ஆலயத்தில் 12.11.2018 அன்று கந்தசஷ்டி விரத 5ஆம் உற்சவத்தன்று சுவாமி வீதிவலம் வரும் காட்சி…

Read More »

பேசாலை சிவசுப்பிரமணியம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருக்கல்யாண வைபவத்தில் பதிவுகள்.!!(PHOTOS)

பேசாலை சிவசுப்பிரமணியம் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருக்கல்யாண வைபவத்தில் பதிவுகள்….

Read More »

கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும்!!

ஜனநாயகம் தொடர்பில் துளி அளவேனும் மரியாதை இருக்குமானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (14) கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 122 பேர் பெரும்பான்மையை சிறப்பான, பண்பான மற்றும் முறையான விதத்தில் வெளிப்படுத்தி இருந்ததனர். மஹிந்த ராஜபக்ஷ …

Read More »

டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலக்கரத்ன டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான அங்கத்துவத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை திலக்கரத்ன டில்ஷான் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 2016 செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி ரி 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் …

Read More »

பாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது!!

யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கத்தியால் பாதுகாப்பு உத்தியோகத்தரை குத்திய இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் …

Read More »

இராஜாங்க அமைச்சர் ஆனேன் – ஆனால் ஐ.தே.க வை விட்டு விலகவில்லை!!

அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டேனே தவிர ஐக்கிய தேசிய கட்சியை விட்டு ஒரு போதும் விலகவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (14) கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற …

Read More »

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு!!

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் …

Read More »

மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட வேண்டும்!!

மக்களுடைய வார்த்தைக்கு மதிப்பளித்தும், 122 பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ஜனாதிபதி செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (14) கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் ஜனநாயகத்தை விரும்பக்கூடிய மக்கள் எதிர்ப்பார்த்த தீர்வை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. …

Read More »

ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விலை தீர்மானித்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அறிக்கை தொடர்பாக சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில் செயற்பட பொறுப்பாகவுள்ள இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவிடம் விரைந்து செயற்படுமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் வலியுறுத்துகின்றது. கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக TISL நிறுவனம் இலஞ்ச மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. மேலும், அமைச்சர்களுக்கு இலஞ்சம் வழங்குதல் …

Read More »

ஓடையில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு!!

இங்கிரிய, கங்கபட பிரதேசத்தில் ஓடையொன்றில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார். இன்று காலை அந்த வீதியால் பயணித்த நபர் ஒருவர் சடலத்தைக் கண்டு இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கங்கபட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் ​நேற்று குறித்த இடத்திற்கு குடும்ப உறுப்பினர்களுடன் குளிக்கச் சென்றுள்ள நிலையில், குளித்து முடிந்த பின்னர் குடும்பத்தினரை …

Read More »

கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்!!

கட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சம்பந்தமாக பிபிசி வினவிய போது பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அது நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு முறை இருப்பதாகவும், அதன்படி செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் …

Read More »