Home / செய்திகள் / இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

வலுவிழந்தது கஜ புயல் – 4 பேர் உயிரிழப்பு!!

வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்க ஆரம்பித்த கஜ புயலின் பெரும்பகுதி தற்போது கரையைக் கடந்துவிட்டது. தற்போது அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 80 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிவருகிறது. இந்தப் புயல் நேற்று இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை மூன்று மணிக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் இந்தப் புயல் கரையைக் …

Read More »

வாரிசு சண்டையால் கட்சியில் இருந்து உறுப்பினர்கள் நீக்கம்!!

இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவரும், அரியானா மாநில முன்னாள் முதலமைச்சருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் பணி நியமன மோசடி வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அவருடைய மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும் இந்த வழக்கில் சிக்கினார். இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை அடுத்து ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபே சவுதாலா எதிர்க்கட்சி தலைவராக இருந்து கட்சியை …

Read More »

கஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 15 ஆம் திகதி பிற்பகலில் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி நவம்பர் மாதம் 15 ஆம் திகதி காலை முதல் புயல் கரையை கடக்கும். கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், …

Read More »

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர்!!

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஒரு வாலிபர் பட்டாசு வைத்து வெடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் …

Read More »

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் : முதல்வர் யோகி ஆதித்யநாத்!!

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் சிலை நிச்சயம் அமைக்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ராமர் சிலை அமைக்கும் பணிக்கான திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும், அமைக்கப்படும் ராமர்சிலை அயோத்தியின் அடையாளமாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More »

மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளை கைது!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரை ஓசூர் பகுதியில் உள்ள ஓர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடந்த மே மாதம் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் பேரில் …

Read More »

வாகா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாட்டம்!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அட்டாரி – வாகா எல்லையில் இந்திய – பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.

Read More »

சபரிமலையில் பதற்றம் – நிருபர் மீது தாக்குதல்!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திருவாங்கூர் கடைசி மன்னர் …

Read More »

சபரிமலை நடை திறப்பு – பலத்த பொலிஸ் பாதுகாப்பு, 144 தடை உத்தரவு!!

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இரண்டாவது முறையாக இன்று கோவில் நடை திறக்கப்படுகிறது. சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக இன்று ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது, பெண்களை அனுமதிக்காமல் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர், இறுதி …

Read More »

இளம் வயது பெண் பத்திரிகையாளர்களை சபரிமலைக்கு அனுப்ப வேண்டாம் !!

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து கடந்த மாதம் ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். அவர்களில் பலர் நடுவழியில் பம்பா, நிலக்கல் மற்றும் சில பகுதிகளில் இந்து அமைப்பினரால் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஊடகவியலாளர்கள் குவிந்தனர். சில ஊடகங்களின் சார்பில் பெண் நிருபர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். …

Read More »

13 மனித உயிர்களைக் கொன்ற பெண் புலி சுட்டுக்கொலை!!(உலக செய்தி )

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 மனித உயிர்களை காவு வாங்கிய பெண் புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதனை உள்ளூர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த அவனி என்ற பெண் புலி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 13 பேரை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து அச்ச உணர்வுடன் வசித்து வந்தனர். மனித …

Read More »

முன்னாள் முதலமைச்சர் கட்சி தாவினார்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தவர் மதுகோடா. முதலமைச்சராக பதவியேற்ற மூன்றாவது சுயேட்சை உறுப்பினர் என்ற பெருமையை பெற்ற இவர், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டொக்டர் அஜோய் குமார் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மது …

Read More »

சட்ட சபை தேர்தல் – நக்மா, விஜயசாந்தி பிரசாரம் !!

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார். இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7 ஆம் திகதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர். தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் …

Read More »

எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் – இளைஞர் கைது !!

சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. அந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விஜயவாடாவில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து சென்னையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது, அந்த …

Read More »

15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை !!

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது. தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் …

Read More »

நாட்டு மக்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்!!

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி சட்டசபை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், ஆனந்த் நியாமகவுடாவுக்கு ஆதரவாக நேற்று ஜமகண்டி தொகுதியில் பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜமகண்டி அருகே சாவலிகி கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: மத்தியில் …

Read More »

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து : மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் !!

மும்பையில் கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read More »

நடுவானில் பிறந்த குழந்தை – திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!!

அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுபற்றி விமான பணிப்பெண்கள் மற்றும் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை என்பதால், விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பி …

Read More »

என்ன நடந்தது – உண்மையில் அகற்றப்பட்டதா ஜெயலலிதா கால்கள் ?

சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை என்றும், ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று வெளியான வீடியோ உண்மையானது தான் என்றும் அப்பல்லோ மருத்துவர், ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி. “ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு பெரும்பாலான நாட்கள் சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பாபு …

Read More »

சபரிமலை தீர்ப்புக்கு எதிரான விசாரணை? – உச்ச நீதிமன்றம் நாளை முடிவு !!

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவில் நடை திறந்த போது, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கவில்லை. …

Read More »

2 மதத்தினர் இடையே மோதல் – 55 பேர் பலி !!

நைஜீரியா நாட்டின் வட பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் கசுவான் மாகாணி நகரில் ஒரு சந்தை உள்ளது. இந்த சந்தையில் இரு வெவ்வேறு மதங்களை சேர்ந்த சுமை தூக்குகிறவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக, இரு தரப்பு மத ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 55 பேர் பலியாகினர். இந்த மோதல் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என …

Read More »

சபரிமலை கோவிலுக்கு சென்ற ரெஹானா முஸ்லிம் ஜமாஅத்தில் இருந்து நீக்கம்!!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ரெஹானா பாத்திமா. மாடல் அழகியான இவர் ‘கிஸ் ஆப் லவ்’ என்ற முத்தப் போராட்டத்தை ஆதரித்ததன் மூலம் ஊடகங்களில் பிரபலம் ஆனார். மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் …

Read More »

டிசம்பர் 12 அன்று கட்சி அறிவிப்பு இல்லை!!

நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று கட்சி குறித்த அறிவிப்பு இல்லை என செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தாம் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். மேலும், மாநிலம் முழுவதும் தனது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டது. மேலும், அடுத்தடுத்து அதிரடியாக அவரது அரசியல் வரவு இருக்கும் …

Read More »

100 பொலிஸாருடன் சபரிமலைக்கு செல்லும் பெண் பத்திரிகையாளர்!!

சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு கடுமையான எதிர்ப்புகள் தொடரும் வேளையில், 100 பொலிஸார் துணையோடு ஹைதராபாத்தை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா தனது பணி நிமித்தம் சபரிமலை ஏறி, ஐயப்பன் கோயில் அருகே சென்றுள்ளார். பொலிஸார் புடை சூழ அவர் பம்பையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டுள்ளார் என பொலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சன்னிதானத்துக்கு அருகே உள்ள நடைப்பந்தல் என்ற இடத்தை அவர் அடைந்துவிட்டார். அங்கே குவிந்திருக்கும் போராட்டக்காரர்களுடன் பாதுகாப்புக் …

Read More »

தலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல் !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது கடவுச்சீட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார். இதை தொடர்ந்து, மெஹுல் …

Read More »

மாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்!!

மும்பையை சேர்ந்த வாகன சாரதி ஒருவர் தன் காரில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர் பொலிஸாரிடம் கூறுகையில், அந்தேரி பகுதியில் இருந்து முசாமில் சையத் என்ற பயணி கையடக்க தொலைபேசி செயலி மூலம் என்னுடைய காரை பதிவு செய்து மும்பை விமான நிலையம் செல்ல வேண்டும் என ஒரு சூட்கேசுடன் வந்தார். விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச்சென்ற போது திடீரென …

Read More »

எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் யோசனை!!

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதுபற்றி விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று 3 ஆவது வருடாந்திர உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில், சவுதி அரேபிய பெட்ரோலிய அமைச்சர் காலித் அல் பாலி, ஐக்கிய அரபு அமைச்சர் மற்றும் சர்வதேச முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், மத்திய நிதி அமைச்சர் …

Read More »

பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராஜினாமா செய்ய வேண்டும்!!

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ´மீ டூ´ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். ‘இது பொய்யானது, கற்பனையானது’ என …

Read More »

முதலிரவின் போது காதலனுடன் மாயமான புதுப்பெண்!!

கொப்பல் மாவட்டம் குடூரு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் மல்லனகவுடா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 24 ஆம் திகதி குஷ்டகி தாலுகா புரா கிராமத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் வைத்து நடந்தது. இந்த திருமணத்தை தொடர்ந்து காயத்ரி-மல்லனகவுடாவின் முதலிரவுக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டது. அதன்படி கடந்த 7 ஆம் திகதி அவர்களின் முதலிரவு குடூரு கிராமத்தில் உள்ள காயத்ரியின் வீட்டில் வைத்து …

Read More »

பெங்களூரூவிலுள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!!

டெல்லி: அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரூவில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More »

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல்!!

டெல்லி; மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு இந்த ஆண்டு 49,992 பேர் விண்ணப்பித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ல் 35,595 பேர் பத்ம விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 32 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள் பத்ம விருதுகளுக்காக வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Read More »

பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் நீக்கம்?

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ´மீ டூ´ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ´மீ டூ´ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். தனி மனிதரின் ஒழுக்கத்துக்கு சவால் விடும் வகையில் இந்த ´மீடூ´ தகவல்கள் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளன. மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு சிக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர் மத்திய அமைச்சர் …

Read More »

ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு: இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடி!!

இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெறாத மற்றும் தர நிர்ணய விதிமுறைகளை பின்பற்றாத 10,500 உணவகங்களை, ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி (swiggy), ஸொமேட்டோ (zomoto) ஆகிய நிறுவனங்கள் தங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமம் பெறாத உணவகங்களுடன் இணைந்து சேவை வழங்க கூடாது என்று ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ நிறுவனங்களுக்கு உத்தரவு …

Read More »

தாக்குதல் எதிரொலி… கூட்டம் கூட்டமாக வெளியேறிய வெளிமாநிலத்தவர்கள் : குஜராத்தில் தொழில்துறை பாதிப்பு!!

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து 116 கிமீ தொலைவில் உள்ள சபர்கந்தாவை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை சில தினங்களுக்கு முன் பீகாரை சேர்ந்த தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து, அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், உபி, பீகார், ம.பி மாநில தொழிலாளர்கள் …

Read More »

யூஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்களை திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி!!

யூஜிசி நெட் தேர்வு எனும் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய தேசிய தேர்வுகள் முகமை அனுமதி அளித்துள்ளது. திருத்தம் செய்பவர்கள் http://www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 14ம் தேதி இரவு 11.50 வரை திருத்தம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

Read More »

200 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள் கடத்திய இளைஞன் கைது !!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பொதி செய்தார். கொச்சிக்கு பொதி சென்றதும் அங்கு வந்து பொதிகளை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பொதியை கூரியரை அணுகினார். அப்போது பொதி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பொதிகளை அனுப்பலாமே? …

Read More »

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாட்டோம்!!

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே, இவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லீட்டருக்கு தலா ரூ. 2.50 குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இவ்வாறு விலை குறைக்கப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வரக்கூடிய லாபத்தில் பெரும் பகுதி குறைந்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் பங்குச்சந்தை விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தியன் …

Read More »

திருப்பதி கோயிலில் செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் !!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.87.84 கோடி வருமானம் உண்டியல் காணிக்கை மூலம் வந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையைவிட ரூ.11.56 கோடி அதிகம் எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.76.28 கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதத்தில் சுமார் 23.38 லட்சம் பக்தர்கள் சுவாமி …

Read More »

சொந்தமாக கார் கூட இல்லை – யார் இந்த தலைமை நீதிபதி?

63 வயதாகும் ரஞ்சன் கோகாய் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 46 வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். அவரை பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்துகொள்வோம். அசாமிலுள்ள திப்ருகார் பகுதியில் 1954 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி ரஞ்சன் பிறந்தார். ரஞ்சனின் தந்தை அசாமின் முன்னாள் முதலமைச்சர் கெசாப் சந்திர கோகாய் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கெசாப் சந்திர கோகாய் கடந்த 1982 ஆம் ஆண்டு …

Read More »

மக்களுக்காகப் கதைப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்!!

பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். எல்லா வழக்குகளிலும் அவருக்கு பிணை கிடைத்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். திருமுருகன் காந்தி கடந்த ஆகஸ்ட் 9 ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வழியாக இந்தியா திரும்பினார். ஆகஸ்ட் 12 ஆம் திகதி பெங்களூரில் நடக்கவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அவர் சென்னை திரும்புவதாக இருந்தது. …

Read More »