Home / செய்திகள் / உலகசெய்திகள்

உலகசெய்திகள்

இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!!

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் புதிதாக அமையும் ஆட்சியில் பாகிஸ்தான் – இந்தியா இடையிலான அமைதி பேச்சுக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று கடந்த மாதம் இம்ரான் கான் தெரிவித்தார். இந்நிலையில், பாராளுமன்ற …

Read More »

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது !!

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் போர் கப்பல், போர் விமானம் மற்றும் இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது …

Read More »

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 20 பேர் கைது!!

இந்தோனேசியாவில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடோடோவிற்கு 55.5 % வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவிற்கு 44.5 % வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபாவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் …

Read More »

வாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் !!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈபில் டவர் என பெயரிடப்பட்டது. ஆண்டுதோறும் 55 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் என அனைவரும் கண்டுகளித்து வருகின்றனர். இந்த ஈபில் டவர், நேற்று ஒரு வாலிபரால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த டவரில் வாலிபர் ஒருவர் …

Read More »

தைவான் நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி!!

ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 24ம் திகதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆசிய நாடான தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள் பெருமளவில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அங்கும் புற்றீசல் போல் ஓரின சேர்க்கையாளர்களின் சங்கங்கள், அமைப்புகள் பல தோன்றி அவர்களின் உரிமைக்காக ஆண்டு தோறும் பேரணி நடத்தி வருகின்றனர். ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து …

Read More »

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் !!

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. எந்த நிறுவனம் என்று ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். …

Read More »

7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். பல கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன. இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் கோக்கோப்போ என்ற நகரின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் …

Read More »

ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கு மீண்டும் விசாரணை?

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க இராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஜூலியன் அசாஞ்சே சர்வதேச அளவில் பிரபலமான அதேவேளையில், பல நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தார். அதே சமயம் உலக அளவில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. …

Read More »

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற பெண் பலி !!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் …

Read More »

34 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொலைக் குற்றவாளி!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் டைரக்டரை கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளின் டைரக்டராக பணிபுரிந்தவர் பெரி கிரானே(57) . இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டின் படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பெரியின் வீட்டிற்கு வழக்கம்போல பணிபுரிய வந்த வேலைக்காரர் பார்த்துள்ளார். இதனையடுத்து …

Read More »

6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை !!

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மியாசகியை மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு …

Read More »

பிரதமர் மீது முட்டை வீசிய பெண் !!

அவுஸ்திரேலியாவில் வருகிற 18 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ் பகுதியில் அல்பரி என்ற இடத்தில் கிராமப்புற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரதமர் மாரிகன் தலை மீது முட்டையை வீசினார். ஆனால் …

Read More »

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை !!

சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத் (25). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அப்பகுதியில் இருக்கும் பார் ஒன்றின் அருகில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். இந்த தகவல் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து தாவூத்தை தேடி வந்த தனிப்பிரிவுப்படை பொலிஸார், சில மாதங்களில் அவரை கண்டறிந்தனர். பின்னர் தாவூத், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதால் கைது …

Read More »

பயங்கர நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை!

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணி அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்கில் 33 கிமீ தூரத்தில் கடலுக்கடியில் 127 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இப்பகுதியில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் உள்ள தலைநகர் போர்ட் மோர்ஸ்பியிலும் நில …

Read More »

தலைநகரில் ஒரு வாரம் சண்டை நிறுத்தம்!

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். அரசுப் படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் …

Read More »

விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 பேர் பலி !!

ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Read More »

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த பயணிகள் விமானம்!!

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற போயிங் விமானம் செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை கொண்ட போயிங் 737 விமானம் புறப்பட வேண்டி, ஓடுதளத்தில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகே உள்ள செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 136 பேருக்கும் எவ்வித …

Read More »

இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்…!!

அமெரிக்க இராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் கடந்து குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு 14,900 என்ற அளவில் இருந்த முறையற்ற பாலியல் உறவுகள் , 2018 ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் உள்ளது. குறிப்பாக பணிக்கு எடுக்கப்படும் 17 – 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றில் ஒரு பங்கு குற்றத்திற்கு மதுபானமே …

Read More »

மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா!!

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா – மசூத் – அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக கருதப்படுகிறது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் இதனை தமது டிவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய நாடுகள், சிறிய நாடுகள் அனைத்தும் இதில் இணைந்திருப்பதாக தமது ட்வீட்டில் தெரிவித்துள்ள அவர், அதற்கு தமது நன்றியையும் தெரிவித்துள்ளார். “மசூத் அஸாரை பயங்கரவாதிகள் பட்டியலில் …

Read More »

திருமணம் செய்து வைக்க கோரி குள்ள மனிதர் பொலிஸில் புகார் !!

உத்தரபிரதேச மாநிலம் கைய்ரானா நகர் பகுதியை சேர்ந்தவர் அசிம் மன்சூரி 26 வயதான இவர் 2 அடி 3 அங்குலம் உள்ள குள்ள மனிதர் ஆவார். இவருக்கு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்று ஆசை. இது பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு மணப்பெண் தேட குடும்பத்தினர் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் அசிம் மன்சூரி, பொலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதில் …

Read More »

ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை!!

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நீதிமன்றத்தால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன. பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து கடந்த ஏப்ரல் 11ம் திகதி கைது செய்யப்பட்டார்.

Read More »

இந்திய மாணவிக்கு சீட் தர 7 பல்கலைக்கழகம் போட்டி!!

துபாயில் இருக்கும் இந்திய மாணவிக்கு அமெரிக்காவில் உள்ள 7 பிரபல பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயில வாய்ப்புகள் கிடைத்துள்ளன. துபாய் வாழ் இந்திய மாணவி சைமன் நூராலி (17). மிர்டிப்பில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். 9 வயது முதலே நூராலி படிப்பில் முதல் இடம் பிடித்து வந்தார். இதனை தொடர்ந்து பல்கலைக் கழகத்தில் சேருவதற்காக நூராலி விண்ணப்பித்தார். நூராலியின் திறமையை கண்ட அமெரிக்காவின் 7 முன்னணி பல்கலைக் …

Read More »

பேஷன் ஷோவில் மயங்கி விழுந்து இறந்த மாடல் அழகி!!

பிரேசிலில் பேஷன் ஷோவில் பங்கேற்ற பிரபல மாடல் அழகி மயங்கி விழுந்து இறந்தார்.பிரேசிலில் உள்ள சாவோ பாலோ நகரில் மாடல் அழகிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல பிரேசில் மாடல் அழகி டெல்ஸ் ரோரஸ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த ‘கேட் வாக்’ எனப்படும் பூனை நடையை மாடல் டெல்ஸ் நடந்து வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதில் அவருடைய முகத்தில் பலத்த …

Read More »

இந்தோனேசியாவில் பனிசுமை காரணமாக 274 தேர்தல் ஊழியர்கள் உயிரிழப்பு!!

இந்தியாவில் பழையபடி வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என சில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தோனேஷியாவில் வாக்குச் சீட்டு எண்ணும் பணியில் ஈடுபட்ட 274 ஊழியர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய தேர்தல் தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுடன் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணம், உள்ளாட்சி என மொத்தம் 5 …

Read More »

கலிபோர்னியாவில் உள்ள யூதமத கோவிலில் துப்பாக்கி சூடு: பெண் பலி; 3 பேர் படுகாயம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள போவே நகரில் யூதமத கோவில் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த இளம்பெண் மற்றும் 2 ஆண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. …

Read More »

இந்தியாவுடன் நாகரீகமான உறவு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது: பிரதமர் இம்ரான்கான் பேட்டி!!

இந்தியாவுடன் நல்லுறவு இல்லாததுதான் பாகிஸ்தானின் ஒரே பிரச்னை என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது. தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. சீனா, மலேசியா ஆகிய சில நாடுகள் …

Read More »

சீனாவில் லிப்ட் அறுந்து விழுந்து 11 பேர் பலி !!

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொழிலாளர்கள் சிலர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்தது. இதனால் லிப்ட் அதிவேகத்தில் தரையில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக …

Read More »

கனமழையால் 51 பேர் பலி!!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலும், குவாசூலூ-நட்டால் மாகாண பகுதிகளிலும் வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவுகளாலும் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இந்த பிரதேசத்திற்க்கு ஜனாதிபதி சிரில் ராமபோசா விமானம் மூலம் சென்றுள்ளார். கடந்த சில நாட்களில் பெய்த கனமழையால், தென்னாப்பிரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை பகுதிகளில் மேலதிக வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும், பலத்த காற்று வீசலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட கடும் …

Read More »

சீன கடற்படை விழாவில் ஐஎன்எஸ் கொல்கத்தா: இந்திய போர் கப்பல்கள் அணிவகுப்பு!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சீன கடற்படையின் 70ம் ஆண்டு விழா அணிவகுப்பில் ஐஎன்எஸ் கொல்கத்தா உள்ளிட்ட இந்திய போர் கப்பல்கள் பங்கேற்றன.பீஜிங்கில் சீன கடற்படையின் 70ம் ஆண்டு விழா அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் நேற்று நடந்தது. இதனையொட்டி போர் கப்பல்களின் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சீன கடற்படையின் 32 போர் கப்பல்கள் 6 பிரிவுகளாக அணிவகுத்து சென்றன. அதேபோல், கடற்படையின் 39 போர் விமானங்களும் 10 …

Read More »

பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் 3 பேர் பலி!!

கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் 3 பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற 3 பேர், சரியான நேரத்தை கடைபிடிக்கவில்லை. அவர்கள் ஏறிய பகுதிகளில் விமானம் மூலம் சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கி விடப்பட்டிருந்த சில மலையேறும் உபகரணங்கள் இருக்கும் ஆதாரங்களை பார்த்துள்ளனர். மோசமான …

Read More »

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு முன் பதவி விலக தயார்!

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதற்கு வலியுறுத்தும் முயற்சி நேற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால், திட்டமிட்டுள்ளதைவிட விரைவாகவே பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவேன் என்று தெரீசா மே அறிவித்த பின்னரும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தெரீசா மே விலகுவதாக அறிவித்திருப்பது பிரிட்டனின் முன்னாள் வெளியுறவு செயலாளர் போரிஸ் …

Read More »

விண்வெளியில் பெண்களின் வரலாற்று நிகழ்வு ரத்து !!

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் பராமரிப்புப் பணிகள் மற்றும் புதிய கட்டுமானப்பணிகளுக்காக சில மணி நேரம் விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் மிதந்து கொண்டு வேலை செய்வது வழக்கம். இதுவரை இந்தப் பணிகளை பெண்கள் மட்டுமே செய்தது கிடையாது. அதாவது ஆண் …

Read More »

வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி – 47 பேர் படுகாயம்!!

ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமாஎ 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கனமழையால் சுமார் …

Read More »

மியான்மரில் வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!!

மியான்மரின் கிழக்கு பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கு உள்ளது. நேற்று முன்தினம் மாலை வெடிமருந்தை எடுத்துச் செல்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் கிடங்குக்கு வந்தனர். அவர்கள் வெடிமருந்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அங்கு வெடி விபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து கிடங்குக்குள் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. கிடங்குக்குள் இருந்த அனைவரும் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் …

Read More »

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி கைது!!

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை ஜனாதிபதியாக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய பதவி காலத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மிச்சல் டெமர் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க மார்சிலோ பிரெட்ஸ் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுசக்தி …

Read More »

இரசாயன ஆலையில் பெரும் வெடிப்பு – 44 பேர் உயிரிழப்பு!!

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு இரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50 க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி …

Read More »

நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – சட்டம் அறிமுகம் !!

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் …

Read More »

பிரெக்ஸிட் விவகாரம் – வாக்கெடுப்பு இல்லை – சபாநாயகர் அதிரடி !!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கான காலக்கெடு வருகிற 29 ஆம் திகதி முடிவடைகிறது. ஆனால் திட்டமிட்டபடி ‘பிரெக்ஸிட்’ வெற்றிகரமாக நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. பிரெக்ஸிட்டுக்காக, ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம்தான் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது பெரும்பான்மையான எம்.பி.க்கள் அதனை நிராகரித்துவிட்டனர். …

Read More »

24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்!!

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற போது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி தன்னை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த “பிரெண்டன் டாரன்ட்” என்று டுவிட்டரில் அடையாளம் காட்டினான். அத்துடன், 73 பக்கத்தில் தனது …

Read More »

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி – 9 பேருக்கு காயம்!!

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமிலும் மற்ற பல இடங்களிலும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர். 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது “தீவிரவாத தாக்குதல் போல தெரிகிறதாக” தீவிரவாத தடுப்புப் பொலிஸார் கூறியுள்ளனர். துருக்கி நாட்டை சேர்ந்த 37 வயது …

Read More »