Home / செய்திகள் / விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி!

கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர். ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச …

Read More »

பந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை !!

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியின்போது மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க தொடைப்பகுதியில் தேய்த்தார். அப்போது கை பெருவிரலால் பந்தின் மேற்பகுதியை சேதப்படுத்தினார். இது கேமராவில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நடுவர்கள் அவருக்கு …

Read More »

இந்திய அணியில் 2 மாற்றம்?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். பங்களாதேஷிடம் முதல் முறையாக 20 …

Read More »

பப்புவா நியூ கினியா ரி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட தகுதி!!

ஐசிசி ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாயில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் …

Read More »

100 பந்து கிரிக்கெட் உலகளவில் பிரபலமடையும்!!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 100 பந்து கிரிக்கெட் லீக்கை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்தத் தொடர் அடுத்த வருடம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போது உலகளவில் ரி20 கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது. 100 பந்து போட்டியை சரியான வகையில் கொண்டு சேர்த்தால் உலகளவில் பிரபலமான தொடராக மாறும் என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானும், எம்சிசி-யின் தலைவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இதுகுறித்து சங்கக்கார கூறுகையில் ´´டெஸ்ட் …

Read More »

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் 148 என்ற வெற்றி இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக …

Read More »

பாகிஸ்தான் அணிக்கு 298 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 298 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 297ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 133 ஓட்டங்களையும் தசுன் சானக 43 ஓட்டங்களையும் பெற்றுக் …

Read More »

மெஸ்சிக்கு உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது!!

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டு தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பிபா விருதின் இறுதிப்பட்டியலில் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), விர்ஜில் வான் டிஜிக் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் மெஸ்சி சிறந்த கால்பந்து வீரராக தேர்வு பெற்றார். அவர் 46 வாக்குகள் பெற்று வான்டிஜிக் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி பிபா விருதை பெற்றார். …

Read More »

47 வருடங்கள் கடந்து சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்!!

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. நேற்று முடிந்த 5 வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. தொடர் டிராவில் முடிந்தால் ஆஷஸ் கிண்ணம், இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அவுஸ்திரேலியாவிடம் ஆஷஸ் கிண்ணம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் இந்தத் தொடருக்கான டிராபி …

Read More »

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2 க்கு 0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்ட கோலி… !!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடும் திறனை கண்டு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரசிகர்களிடம் விராட் கோலி அன்புடன் நடந்தும் வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கிண்ணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவருக்கு, அவர் கேட்ட இலவச இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை அனுப்பி வைத்தார். இப்போது மற்றொரு குட்டி ரசிகரிடம் விராட் கோலி அன்பாக நடந்துக் கொள்ளும் …

Read More »

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஷேர் செய்திருந்தார். இதற்கிடையில், முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், தனது கணவர் முகமது ஷமியும் …

Read More »

நியூஸிலாந்து அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம் சௌதி மற்றும் …

Read More »

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும் திமுத் …

Read More »

பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் கோலி !!

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் …

Read More »

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் (வயது 57) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி தலைவராக இருந்துள்ளார். 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வி.பி. சந்திரசேகர் பதவி …

Read More »

மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. மழைக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் கோலியின் 100 ஓட்டங்களின் துணையுடன் இந்தியா இந்த போட்டியில் வென்றுள்ளது. இந்த நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும் இபின் லெவிஸூம் …

Read More »

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மரணம் !!

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் ஜோஸ் லூயிஸ் பிரவுன் (வயது 62) மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். 1986 இல் உலக கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணியில் இவரும் இடம் பெற்று இருந்தார். அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது. இதில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோல் அடித்தவர், லூயிஸ் பிரவுன் தான். …

Read More »

300 வது போட்டியில் லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல் !!

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது கிறிஸ் கெய்லுக்கு 300 வது போட்டியாகும். 300 வது போட்டியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 ஓட்டங்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார். என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி …

Read More »

BCCI அமைப்பை கிழித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் !!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீசில், ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்கும்போது, இந்தியா சிமெண்ட்சில் எப்படி துணை தலைவராக இன்னொரு பதவி வகிக்க முடியும்? என கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு ராகுல் விளக்கம் அளிக்க பிசிசிஐ 2 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் …

Read More »

இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் அத்தநாயக்க !!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் அத்தநாயக்க நியமிப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நியுசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More »

50 ஓவருக்கான கிரிக்கெட் அணியில் சச்சின் மகனுக்கு இடம்!!

ஆந்திர மாநிலத்தில் வருகிற 22 ஆம் திகதி தொடங்கும் விஸ்ஸி டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூன் இடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் வருகிற 22 ஆம் திகதி விஸ்ஸி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மும்பை அணி இடம் பெறுகிறது. இதற்கான மும்பை அணியில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூனுக்கு இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே அர்ஜூன் தெண்டுல்கர் …

Read More »

இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமைப் படுத்தப்பட்டேன்!!

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத் தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். …

Read More »

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் !!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கௌரவத்துக்காக களத்தில் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் நீயா-நானா? என்று இரு அணி வீரர்களும் எப்போதும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு. குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் …

Read More »

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களையும், குசல் …

Read More »

பங்களாதேஷ் அணிக்கு 295 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களையும், …

Read More »

பெண்களை ஏமாற்றிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்டார் கிரிக்கெட் வீரர்கள்!!

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக்கின் உறவினரும், அந்த அணியின் இளம் கிரிக்கெட் வீரரும் இமாம் உல் ஹக் ஆவார். இமாம், தங்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக 8 இளம் பெண்கள் புகார் அளித்துள்ளனர். இது குறித்து ஒரு நெட்டிசன் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சில பெண்களுடன் இமாம், நடத்திய வாட்ஸ் அப் சாட்களை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள சாட்டில், இமாம் அந்த பெண்களிடம் காதலிப்பதாக …

Read More »

முகமது அமிர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு !!

பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திழ்ந்தவர் முகமது அமிர். இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருநது ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 27 வயதே ஆகும் முகமது அமிரின் ஓய்வு ரசிகர்ளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக காலே டெஸ்டில் அறிமுகமான அமிர், 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் மற்றும் …

Read More »

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் நுவன் குலசேகர !!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார். இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர இதனைத் தெரிவித்தார். உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவிக்க இருந்ததாகவும் நுவன் குலசேகர தெரிவித்துள்ளார். மேலும், உலகக் கிண்ண போட்டிகளின் போது, சித் மலிங்க தெரிவித்த விடயங்கள் குறித்து …

Read More »

இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் அறிவிப்பு!!

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் விபரம் இலங்கை கிரிக்கட்டால் வௌியிடப்பட்டுள்ளது. 22 வீரர்களை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் தினேஷ் சந்திமால் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், திமுத் கருணாரத்ன தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

Read More »

2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்த உலகக் கிண்ணத்தை உருவாக்கிய நட்சத்திரங்கள் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், 2019 உலகக் கிண்ணத்தை தங்களின் பங்களிப்பை அழுத்தமாக பதிவு செய்த 5 இளம் நட்சத்திரங்கள் யார் என்பதை இங்கு விவரங்களுடன் பட்டியலிட்டுள்ளோம். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக் கிண்ண …

Read More »

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாட நியூஸிலாந்து அணி தீர்மானம்!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்றை இறுதி போட்டியில் மோதிக் கொள்கின்றன. அதனடிப்படையில் நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்துள்ளது.

Read More »

டோனி ரன் அவுட் – எங்க லக்!!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் 9 ஆம் திகதி மென்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ஓட்டங்கள் சேர்த்தது. மழை குறுக்கிட்டதால் மறுநாள் (10) போட்டி ரிசர்வ் செய்யப்பட்டது. இதனை அடுத்து 240 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இறுதியில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த …

Read More »

உலக கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக குமார் தர்மசேன!!

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து மற்று நியூஸிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை கூறத்தக்கது.

Read More »

அவுஸ்திரேலிய முதலில் துடுப்பாட்டத்தில் !!

உலகக் கிண்ணத்திற்கான இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 2 ஆவது அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதற்கான நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா அணி தலைவர் ஆரோன் பிஞ்ச் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளார்.

Read More »

World Cup 2019 – இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?

12 வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். கடந்த சனிக்கிழமையுடன் லீக் போட்டிகள் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், மேற்கிந்திய …

Read More »

விராட் கோலி துடுப்பாட்டத்தில் தொடர்ந்தும் முதலிடம்!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோலி 891 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். உலகக் கிண்ணத்தில் ஐந்து சதங்கள் விளாசியதால் 885 புள்ளிகள் பெற்றுள்ளார். விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் 6 புள்ளிகளே வித்தியாசம் உள்ளன. 3-வது இடத்தில் பாகிஸ்தான் துடுப்பாட்டக்காரர் பாபர் ஆசம் 827 புள்ளிகள் பெற்றுள்ளார். டு …

Read More »

World Cup 2019 – நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து !!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து 123 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது ஜேசன் ராய் 60 …

Read More »

World Cup 2019 – பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!!

இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர். உலகக் …

Read More »

338 ஓட்டங்களை பெற்றது இலங்கை அணி!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறுகின்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அதன் அடிப்படையில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை அணி சார்ப்பாக அவிஷ்க பெர்ணான்டோ 104 ஓட்டங்களளையும், குசல் பெரேரா 64 …

Read More »