Home / பொது அறிவித்தல்கள்

பொது அறிவித்தல்கள்

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்.., …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை “இலக்கை எட்டுகிறது”..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு பொன்னன் கிணறு, புங்குடுதீவு ஊரதீவுப் பொதுக் கிணறு ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டார நுனுக்கல் பிரதேசத்தில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. இந்நிகழ்வானது, இன்றையதினம் (05.08.2018) பூர்த்தி செய்யப்பட்டு, அப்பிரதேச மக்களிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டது. இவ்வைபவத்தினை, புங்குடுதீவு பானாவிடை சிவன் ஆலய பிரதமகுரு திரு.ரூபன் சர்மா …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, நேற்றையதினம் (13.07.2018) ஆரம்பமாகி உள்ளது. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் கையொப்பமிட்டு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, திருத்தி புதிதாக கட்டிக் கொடுப்பதென தீர்மானித்து கடந்த 28.06.2018, அன்று “சுவிற்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) திருமதி.சுதா செல்வி அவர்கள், கடந்த வருடம் இலங்கை சென்று இருந்த போது, புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் கோரிக்கை வைப்பதாக அங்கிருந்தபடியே ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கு தெரிவித்து இருந்தார். நாம் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றையதினம் பல நிகழ்வுகள் இருந்ததினால், பலரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ள போதிலும், …

Read More »

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…!

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த 05.05.2014 இல் “உத்தியோகபூர்வமாக” ஆரம்பிக்கப்பட்ட இணையத்திலும், முகநூலிலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதேவேளை சிலருடைய கருத்துக்கள் மற்றும் அவர்களது எண்ணங்கள் எமக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வந்ததற்கு அமைவாக, நாம் எமது இணையத்தில் சில அத்தியாவசிய விடயங்களை …

Read More »

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்) பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவுக்கான கூட்டம் இன்றையதினம் (27.05.2018) நடைபெற்றது. இதில் பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் புதிய தலைவராக திரு.பிரேம்ரஞ்சீத் சிவசாமி (பபா) அவர்களும், செயலாளராக திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் (யோகி) அவர்களும், பொருளாளராக திரு.குருமூர்த்தி பாரதிதாசன் (பாரதி) அவர்களும், உபதலைவராக திரு.வேலுப்பிள்ளை வேணுகுமார் (ராசன்) அவர்களும், உபசெயலாளராக திரு.ரி.திருஞானசம்பந்தர் (ஸ்ரீ) …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகசபை” தெரிவு..!! (விபரங்களுடன், படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகசபை” தெரிவு..!! (விபரங்களுடன், படங்கள் இணைப்பு) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாகசபை” தெரிவுக்கான “பொதுச்சபை” ஒன்றுகூடல் இன்றையதினம் 06.05.2018 பேர்ண் மாநிலத்தில் ஒபேர்புர்க் எனும் இடத்தில் நடைபெற்றது. முதலில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில், முன்னைய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து முன்னைய செயலாளர் திரு.செல்லத்துரை சதானந்தன் அவர்களினால், “ஒன்றியத்தின் கடந்த கால செயல்பாடுகள்” …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. எதிர்வரும் 06.05.2018 அன்று புதிய நிர்வாகசபை தெரிவுக்கான, …

Read More »

பிறந்த மண்ணிற்குத் தேவையான, அனைத்து மீள்கட்டமைப்புக்களையும் செய்வதில் பெருமிதம்..! -ஐங்கரன், கனடா.

பெருமிதம்…!!! பூவரசந்தோப்பில் இருந்து காலச்சூழலால் சிறகடித்துப் பறந்த எம்மூரவர்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கே தமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்த போதிலும், யுத்தத்தால் பாழடைந்த எம் மண்ணை மட்டும் மறக்காமல், தாங்கள் பிறந்த மண்ணிற்குத் தேவையான அனைத்து மீள்கட்டமைப்புக்களையும் செய்வதில் முனைப்புக் காட்டுவது நாம் அறிந்ததே. அந்த வகையில், பல நாடுகளில் எம் மண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் சங்கங்களும் தங்களது கடமையாய் ஊர் நோக்கிய நற்காரியங்களைச் செய்வதில் …

Read More »

“வேரும் விழுதும்” மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில், பெருமிதம் அடைகிறேன்.. -ஜெகநந்தினி (“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

வாழ்த்துச் செய்தி.. புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் / சுவிற்சர்லாந்து நடத்தும் 21 வது ஆண்டுவிழாவில் வெளியிடப்படும் “வேரும் விழுதும்” மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் பெருமிதம் அடைகிறேன். புலம்பெயர் உறவுகள் ஒன்றுகூடி உருவாக்கிய இவ்வமைப்பின் ஊடாக ஊரின் அபிவிருத்திக்காக பல்வேறு அபிவிருத்திகளை செய்து வருகின்றார்கள். இச்செயல்பாடானது அவர்களின் ஒற்றுமையையும் பரந்த மனப்பான்மையினையும் எடுத்துக் காட்டுகின்றது. ஒவ்வொரு வருடமும் பல்வேறு அபிவிருத்திகள், உதவிகள் என்பன செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் …

Read More »

புங்கையின் மைந்தர்களே, புகழோடு வாழ்க..! -சிவமேனகை (“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து)

புங்கையின் மைந்தர்களே புகழோடு வாழ்க..! – சிவமேனகை அசைந்தாடிவரும் கடலலைகள் தாலாட்ட அகம்மகிழும் அருள்தீவின் அகத்தினுள்ளே அழகழகாய் உயர்ந்துநிற்கும் ஆலயங்கள் ஆன்மீக அருளலையை அள்ளிவீச நிலம் செழிக்கும் நீலக்கடல் தீவு உங்கள் நினைவுகளில் நீங்காத புங்குடுதீவு.. பொன் விளைந்த கிரவுஞ்ச பூமி அது பெண்ணரசி கண்ணகியாள் தலமும் அது மன்னவர்கள் போற்றிய வீரநிலமும் அது மாதரசி மலர்ந்த எழில் மலர்வனமும் அது தென்னவனின் மகன் தமிழ்கற்ற மலையும் அது தேமதுரத்தமிழ் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம் அண்ணர்..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், கௌரவிக்கப்பட்ட திரு.தனம்..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், கடந்த 28.03.2018 அன்று நடைபெற்ற “வேரும் விழுதும் -2018” விழாவில், பொதுசேவை மற்றும் சமூக சேவைகளில் தம்மை இணைத்துக் கொண்டோரும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் உறுப்பினர்களுமான பலரில், முதல்கட்டமாக ஐவரை கௌரவித்து விருது வழங்குவதென “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபை தீர்மானித்து செயல்பட்டது. இதன் காரணமாக “வேரும் விழுதும் -2018” விழாவில், திரு.சிவகுமார் (பீல்), …

Read More »

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்”, அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு, “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், அதிகூடிய புள்ளி பெற்ற மாணவனுக்கு “பணமுடிப்பு” வழங்கிக் கௌரவிப்பு..! (படங்கள்) இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கல்வித் பொதுத்தராதர சாதாரணதர (ஓ.எல்) பரீட்சையில், புங்குடுதீவில் அதிகூடிய புள்ளி பெற்ற மாணவன் செல்வன்.புஷ்பானந்தன் துகீசன் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அவரது “எதிர்கால கல்வி செயல்பாட்டுக்கு” உதவும் நோக்கில், இன்றையதினம் “பணமுடிப்பு” கொடுத்து கௌரவிக்கப்பட்டார். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த, மாணவன் செல்வன். புஷ்பானந்தன் துகீசன், …

Read More »

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்த பின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள். பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு? …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் “வைப்பில்” இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “நிதி”, இலங்கையில் வங்கியில் வைப்பில் இடப்பட்டது… (படங்களுடன், பகிரங்க அறிவித்தல்) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது இம்மாத ஆரம்பத்தில் (02.04.2018) புர்கடோர்ப் மாநிலத்தில் கூடியதும். இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன், மேலும் சில ஒன்றிய உறுப்பினர்கள் தொலைபேசி மூலமும் தமது கருத்துக்களை தெரிவித்தனர் என்பதுடன். இக்கலந்துரையாடலில் தற்போது கைவசம் உள்ள “ஒன்றிய நிதி”யானது “எதிர்காலத்தில் …

Read More »

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..! (அறிவித்தல்)

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..! (அறிவித்தல்)

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான தீர்மானம்..!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய அவசரக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட “நிதி” தொடர்பான தீர்மானம்..! புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது இன்றுகாலை (02.04.2018) பத்து மணிக்கு, புர்கடோர்ப் மாநிலத்தில் கூடியது. இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன், மேலும் சில ஒன்றிய உறுப்பினர்கள் தொலைபேசி மூலமும் தமது கருத்துக்களை தெரிவித்தனர். மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..! புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது நாளைக்காலை (02.04.2018) பத்து மணிக்கு, புர்கடோர்ப் மாநிலத்தில் அவசரமாக கூடுவதையும், இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எவராயினும் கலந்து கொள்ள முடியும் என்பதையும் இதன்மூலம் பகிரங்கமாக அறிய தருகிறோம். மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள “நிதி” குறித்து தெளிவாக தீர்மானிக்க உள்ளதினால், …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “புதிய நிர்வாகத்துக்கான” பொதுச்சபை கூடுதல்…!! (அறிவித்தல்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுக்கான, பொதுச்சபை ஒன்றுகூடுதல், அதாவது சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஒன்றுகூடல் எதிர்வரும் 13.05.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு பேர்ண் மாநிலத்தின் புர்கடோர்ப் மாவட்டத்தில் நடைபெற உள்ளது என்பதை அனைவருக்கும் அறிய தருகிறோம். (ஒன்றுகூடல் நடைபெறும் விலாசம் பின்னர் அறிய தரப்படும்) மேற்படி ஒன்றுகூடலில் …

Read More »

சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்)

சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அழைப்பில், சுவிஸ்லாந்துக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களுடன், இருதினங்களுக்கு முன்னர் (20.03.2018) சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்கள் சிலர் சந்திப்பினை மேற்கொண்டு இருந்தனர். இதன்போது சுவிஸ் ஒன்றிய தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். …

Read More »

“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன்.. (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், தலைமையுரை) -வீடியோக்களுடன்-

“ஊருக்காக ஒன்றிணைந்து, நேரிய வழியில் செயல்படுவோம்” -சுவிஸ்ரஞ்சன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில், தலைமையுரை) -வீடியோக்களுடன்- (சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஒன்றிய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை இது..) ஒன்றியத்தின் தூண்களாய் ஒன்றிணைந்திருந்து இருபத்தொரு ஆண்டுகளாக …

Read More »

விழா சிறப்புற நடைபெற உதவிய, “நல்லுள்ளங்களுக்கு” நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் நன்றியுரை)

விழா சிறப்புற நடைபெற உதவிய, நல்லுள்ளங்களுக்கு நன்றி…! -திரு.செ.சதானந்தன் (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் நன்றியுரை) (சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஒன்றிய செயலாளர் திரு.செ.சதானந்தன் அவர்கள் நிகழ்த்திய நன்றியுரை இது..) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வில் …

Read More »

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை)

வந்தாரை வரவேற்று, பெருமைப்படுத்தும் புங்குடுதீவு..! -திருமதி.செல்வி சுதாகரன். (சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய விழாவில் வரவேற்புரை) (சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த 17.03.2018 சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன்போது திருமதி.செல்வி சுதாகரன் நிகழ்த்திய வரவேற்புரை இது..) வரவேற்புரை… பிறந்த ஊருக்காய் உறவுகள் நட்புக்கள் ஒன்றுகூடி ஒன்றியத்தின் இருபத்தோராவது ஆண்டுவிழா காணும் …

Read More »

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்)

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, “வேரும் விழுதும் 2018” கலைமாலை நிகழ்வானது கடந்த சனிக்கிழமை சூரிச்சில், மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக சிறப்பு விருந்தினர் திரு. சிவஸ்ரீ த.சரஹணபவானந்த குருக்கள் (பிரபல ஆன்மீக குரு -ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம் …

Read More »

சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்)

சுவிஸ் சூரிச்சில் அடுத்த சனிக்கிழமை மதியம், “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (அறிவித்தல்) சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் எதிர்வரும் 17.03.18 சனிக்கிழமை மதியம் 02.00 மணிக்கு நடைபெற இருக்கும் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு… மங்கள விளக்கேற்றல்.. வரவேற்பு நடனம்.. **பொது வாழ்வில், சமூக சேவகர்களான வயதில் மூத்தோர் கௌரவிப்பு… ***தலைமையுரை…. திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (தலைவர், புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத் தலைவர்) ***பிரதம விருந்தினர்… திரு விந்தன் …

Read More »

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்)

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை விழா..! (அறிவித்தல்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து”, எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் “விழா மலர்” வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் (Varasithy Mahall, Hütenwiesen str-6, 8101 Dallikön …

Read More »

சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” (வீடியோ & படங்கள்)

சிறப்பாக நடைபெற்ற, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” (வீடியோ & படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் “சுவிஸ் வாழ் மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி” கடந்த 28.01.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது. மேற்படி போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்குமான “பரிசில்கள்” எதிர்வரும் 17.03.2018 அன்று மாலை இரண்டு மணிக்கு, சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில், நடைபெறும் “வேரும் விழுதும்” விழாவில் வைத்து …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், 2017 ம் ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை..! (விபரமாக)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் 2017 ம் ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை (விபரமாக) எமது அன்பின் உறவுகளே கடந்து சென்ற 2017ஆண்டிற்கான வரவுசெலவு கணக்கறிக்கை ஒன்றியத்தின் பொருளாளர் அருணாசலம் கைலாசநாதன் ஆகிய நான், என்னால் கையாளப்பட்ட “கணக்கறிக்கை” ஒன்றிய கணக்காய்வாளர் திரு.சதாசிவம் பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரினால் துல்லியமாக பரீசிலிக்கப்பட்டு, ஒன்றிய தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன், ஒன்றிய செயலாளர் திரு. செல்லத்துரை சதானந்தன் அவர்களின் ஒப்புதலுடன் உங்களின் (மக்களின்) பார்வைக்காக …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ) தமிழ் புதுவருடப் பிறப்பான “தைத்திருநாளாம் தைப் பொங்கலை” முன்னிட்டு, இன்று காலை புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” சார்பில், “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிகளினால் பொங்கல் நிகழ்வு, “தாயகம் பொது நூலகத்துக்கு” முன்பாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வில் “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிக ளுடன் தாயகம் சமூக சேவை அகம் …

Read More »

புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்)

புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்) கடந்த வருட நடுப்பகுதியில் வேலணை பிரதேச செயலகம் ஊடாக, “கற்றாலை வளர்ப்பு” குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீவக பிரதேசம் எங்கும் தெரிவிக்கப்பட்டு, “கற்றாலை வளர்ப்புக்கு” முன்வருவோருக்கு தம்மால் முடிந்த உதவிகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவில் திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தமது காணியில் “கற்றாலை …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018 விழாமலர்” தொடர்பான, பகிரங்க இறுதி அறிவித்தல்… (உங்களின் கவனத்துக்கு)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “வேரும் விழுதும்-2018 விழாமலர்” தொடர்பான, பகிரங்க இறுதி அறிவித்தல்… (உங்களின் கவனத்துக்கு) புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தில், அரசியல் (சார்பு அரசியல்) தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் உள்நுழைப்பதில்லை என்பதுடன், ஒன்றிய நிதியில் இருந்து, சுவிஸில் எந்தவொரு விழாவும் மேற்கொள்ளக் கூடாது எனும் முடிவுடன் செயல்படும் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்” இம்முறையும் வழமைபோல் மேற்படி “வேரும் விழுதும் -2018” விழாவை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. “வேரும் விழுதும் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடல் கூட்டம்… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், சிறப்பாக நடைபெற்ற இன்றைய கலந்துரையாடல் கூட்டம்… (படங்கள்) இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் ஒபேர்புர்கில் உள்ள தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின்கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மேற்படிக் கூடடத்தில், திரு.தயாபரன், திரு.கீர்த்தன், திரு.தஜீவன், திருமதி.தகீதா பிரசாந்த், திருமதி.செல்வி சுதாகரன், திரு.சதா, திரு.சதீஷன், திருமதி.தனம், திரு.சண்முகம், திரு.பிரேம்குமார் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லையென …

Read More »

சுவிஸ் ஒபேர்புர்க் எனும் இடத்தில் நடைபெறவுள்ள, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்…

மீண்டும் ஞாபகமூட்டுகின்றோம்…!!! அன்புடன் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்கள் உட்பட, அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும்… எதிர்வரும் 25.12.2017 திங்கள்கிழமை மாலை 04.30 (16.30)க்கு புர்கடோர்ப் (BURGDORF) எனும் இடத்தில் நடைபெறவுள்ள ஒன்றியக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்… எதிர்வரும் 28.01.2018 அன்று, பேர்ண் கீர்க்பேர்கில் நடைபெறவுள்ள “அறிவுத்திறன் போட்டி”, 17.03.2018 அன்று, சூரிச் வரசித்தி மஹாலில் நடைபெறவுள்ள “வேரும் விழுதும்” நிகழ்வு உட்பட புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” செயற்பாடுகள் குறித்த …

Read More »

(“புதிய விண்ணப்ப முடிவு திகதி”யுடன்) சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மாணவர்களுக்கான, “அறிவுத்திறன் போட்டி” (அறிவித்தல்)

(“புதிய விண்ணப்ப முடிவு திகதி”யுடன்) சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மாணவர்களுக்கான, “அறிவுத்திறன் போட்டி” (அறிவித்தல்) சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz.. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்”, இரண்டாது தடவையாக, எதிர்வரும் …

Read More »