Home / அஞ்சலி அறிவித்தல் / “புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி…

“புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி…

S.g.saanthan
“புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன்” எஸ்.ஜி.சாந்தனுக்கு, எமது விழிநீர் அஞ்சலி…

புங்குடுதீவில் பிறந்து, கிளிநொச்சியில் வளர்ந்து, யாழில் மறைந்த “புங்குடுதீவு மண்ணின் மைந்தன், எழுட்சிப் பாடகன், எஸ்.ஜி.சாந்தனுக்கு”, புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “விழிநீர் அஞ்சலி”…

புங்குடுதீவு புயல் புறப்பட்டு விட்டது – இதுவரை
விடுதலை வேள்வியில்
வீறுநடை போட்ட கானக்குயில்
காலனிடம் சரணடைந்து விட்டது!

ஒவ்வொரு இடமாக ஓடித்திரிந்த
தேசத்தின் குரல் இன்று,
தெய்வத்தோடு இணைந்து விட்டது!

இவன் பாடிய பாட்டு தமிழனை
வீரியம் கொள்ள வைத்த விந்தையை,
கண்டுபிடிக்க இன்னும் கன நாளாகும்!

இவன் பாட்டுக்கென தமிழர் கூட்டமிருப்பதை,
வேட்டொலிகள் மத்தியிலும் விழிந்திருந்து,
கேட்டுக் கொண்டிருப்பதும் விந்தையிலும்; விந்தை!

பாட்டு, நாடகம், பல்துறைக் கலைஞனாய்
வேள்வி நடத்திய வேந்தனே -உன்
காந்தக் குரல் கேட்டு கண்மடல் திறந்து
போர் செய்ய புறப்பட்ட தமிழர்
புது பரணி எழுதிய பாவலர்!

ஆயுதம் தூக்கச் செய்யும் ஆண்மைக் குரலே,
போய் வா உனக்கு புங்குடுதீவு மண்
புது பரணி எழுதும்!

தேசத்தின் விடுதலையை உன்
சுவாசக் காற்றிலே கலந்து
பாட்டாய் சொன்ன இசைப் பாவலனே
உன் காந்தக் குரல் கேட்டு
கையில் துப்பாக்கி ஏந்திய
தமிழன் தன் விடுதலையை
தனக்குச் செய்தான்!

தாகத்தோடு போர் செய்து இன்று
அமைதியாக தேவாரம் பாடியதைக் கூட
கேட்க முடியாமல்,
நீண்டு நிமிர்ந்து கிடக்கும் உன் உருவம்,
சாந்தி அடைய வேண்டும் சாந்தனே!
சாந்தி அடைய வேண்டும் சாந்தனே!

புங்குடுதீவு ஒரு
புது பரணி எழுதும்
சாந்தன் தலை நிமிர்வான்..
புங்குடுதீவு மண் உன்
கர்ப்பத்தை சுமந்து
தமிழுக்கும், விடுதலைக்கும்,
ஈழத்திற்கும் தன் பெயரை
குறித்துக் கொண்டது
புங்குடுதீவு உனக்குத் தலைவணங்கும்!

– புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ் –

S.g.saanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: