Home / அஞ்சலி அறிவித்தல் / விழிநீர் அஞ்சலி… அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி

விழிநீர் அஞ்சலி… அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி

Amma-004

விழிநீர்அஞ்சலி

அமரர். செல்லத்துரை இராஜேஸ்வரி

உறவுகளை இணைத்து, ஊரைக்காத்து…
உளப்பூர்வமாக இறைவனை ஏற்று…
இல்லற வாழ்வில், நல்லறம் காத்த தெய்வமே…
நானிலத்தில் நன்மை கிடைக்க..
நேர்மை காத்த சத்தியமே..
உன்னை சாவு, காவு கொண்டதோ?….

எல்லோரையும் அன்பு செலுத்த. .
எந்த கல்லூரி கற்றுத் தந்தது..
அன்பு செலுத்தி அரசாள..
எந்த சட்டம், பாடமா.. நடத்தியது?
எல்லாமே.. அதிசயமாய்..
அத்தனையுமே.. புதினமாய்..
அம்மா உங்கள் அன்பு வாழ்க்கை. .

மண்ணின் மகத்துவம் மறைந்து விட்டது.
எண்ணில் அடங்காத.. இனிய உள்ளம்
இன்றோடு உலகில்.. இல்லாமல் ஆகிவிட்டது.
மண்ணை நேசித்து, மனிதத்தை பூசித்து..
அன்னம் ஊட்டிய அன்பு, அணைந்து விட்டது.

புங்கையின் ஒளியே.. பூமலர்ந்த முகமே..
இன்முகம் காட்டி, இனிமை பேசும் உறவே..
உங்களை எண்ணி, புங்கைநகர் வாழும்..

காணிக்கையாக, வெண்பூக்களை..
காலடியில் வைத்து அஞ்சலிக்கிறோம்..

-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸர்லாந்து-

(** அன்னார் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸர்லாந்து” அமைப்பின் செயலாளர் திரு.சதானந்தன் (சதா) அவர்களின் தாயாரும் ஆவார்.)

Amma-004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: