Home / இன்றைய செய்திகள் / விழிநீர் அஞ்சலி..!! அமரர். சுப்பிரமணியம் அன்னம்மா

விழிநீர் அஞ்சலி..!! அமரர். சுப்பிரமணியம் அன்னம்மா

unnamed (2)

விழிநீர் அஞ்சலி..!!

அமரர். சுப்பிரமணியம் அன்னம்மா
===========================

இயற்கை அழைப்பை ஏற்றாயோ..
எங்களை மறந்து போனாயோ..
எம் உயிர் துடிப்பை அறியாயோ..
துவண்டு அழுகிறோம் பாராயோ..

மரணம் என்பது இயற்கை தான்..
அதை ஏற்பது மனிதஇயல்பு தான்.
ஏனோ.. இதயம்.வலிக்கிறது..
அது ஏனென்று.. இதுவரை புரியவில்லை.

அன்பு என்பதை அறியச்செய்த,
ஆளுமை கொண்ட அம்மாவே..
உங்களை இழப்போம் என்பதை,
ஏற்க்குது இல்லை எம்மனசு..

புங்குடுதீவு பொக்கிஷத்தை,
சுவிஸ்நகரில்.. தொலைத்து விட்டோம்..
விம்மிஅழுது, வெடிக்கின்றோம்,
வேதனை மிகுந்து, அழுகின்றோம்..

ஏனம்மா பாராமல் இருக்கின்றாய்?
வேணாமம்மா, எமைவிட்டு போகாதே..
ஆறுதல் சொல்ல யாருமில்லை,
அம்மா.. உம்மைப் போல வேறு யாருமில்லை..

புங்கையின் புன்சிரிப்பு ஓவியமே,
போய் வா, இறைவன் பக்கத்தில்..
கண்ணீர் நிறைந்த வலியோடு,
கனத்த மனதோடு அஞ்சலிக்கிறோம்…

-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: