Home / அஞ்சலி அறிவித்தல் / விழிநீர் அஞ்சலி..!! அமரர். இராசையா குகதாஸ்

விழிநீர் அஞ்சலி..!! அமரர். இராசையா குகதாஸ்

unnamed (4)

அமரர்.இராசையா குகதாஸ்
தோற்றம் : 3 ஒக்ரோபர் 1949 — மறைவு : 2 ஏப்ரல் ௨௦௧௭

அடங்கிப் போனதோ,
அமைதி கொண்ட இதயம்.
அதிர்ந்து பேசாத ஆளுமை..,
அவனியில் வாழ்வை முடித்து,
ஆண்டவனிடம் சரணடைந்தது..

சகிப்புத் தன்மையை தரணிக்கு.
சொன்ன சத்தியம்..
சாந்தமாகி, சமாதி அடைந்ததோ?..
அன்பு, கருணை, பாசம், பரிவு..
இனி யார்தருவார் எமக்கு?..

பட்டம் பதவி கண்டு,
பல்லிளித்து நிண்டதில்லை..
எட்டநின்டு இறுமாப்பு கொண்டதில்லை..
அரசியல் வாழ்வுக்கு,
அடிபணிந்து போனதில்லை..

மக்கள்பணி செய்ய..,
மன்னவளை பெற்றெடுத்து..
அரசியல் பாதையிலே..,
அன்னநடை போடச் செய்து….
வெற்றி காணும் நேரத்தில்..,
விண்ணுலகம் போனதென்ன?..
விழியினை மூடி,
நீண்டதுயில் செய்வதென்ன?..

இனி நீங்கள் இல்லை..
என்ற செய்தி..
பொய்யாகிப் போகாதோ..
தவிக்கும் எமக்கு உம்மைப்.போல்..
ஆறுதல் சொல்ல. யாருள்ளார்..

யாரை யார் தேற்றுவது..
ஒன்றுமே புரியவில்லை..,
“புங்குடுதீவு ஒன்றியம்”..
பெரும் துயர் கொண்டு,
செய்யும் கண்ணீர் அஞ்சலி…
காணிக்கையாக வெண்பூக்களை கண்ணீரோடு அஞ்சலி செய்கிறோம்..

-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: