Home / இன்றைய செய்திகள் / மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்)

மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்)

001

மிக ஆரோக்கியமான முறையில் நடைபெற்ற, புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் கலந்துரையாடல்.. (படங்கள்)

நேற்றையதினம் (07.05.2017) புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக மற்றும் ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் நேற்றுமாலை 02.30 முதல் மாலை ஐந்து முப்பது மணிவரை, மிகவும் ஆரோக்கியமாகவும், மிக சிறப்பாகவும் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமை குறித்து லுக்ஸ் அண்ணர், குமார், பன்னீர், திருமதி.தனம், சதீஷ், சுரேந்திரன் ஆகியோர் “தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமை” குறித்து அறிய தந்தனர்.

இன்றைய கலந்துரையாடலில், இவ்வருட “வேரும் விழுதும்-2017” விழா குறித்தும், வரவு,செலவுக் கணக்கு குறித்தும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அனுசரணை வழங்குவதாகக் குறிப்பிட்டு தராதோரிடம் நிதியைக் கேட்டு பெறுமாறும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, “புங்குடுதீவின் சிதைவுறும் நிலம்” எனும் குறும்படத்தை திரையிடுவது குறித்த, வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில், பெரும்பாலோரினால், இக்குறும்படத்தை “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” திரையிடுவது, ஆரோக்கியமானது இல்லை எனவும், பிரச்சினைகளை வளர்க்கவே இது உதவுமெனவும் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலோனரின் கருத்தின் அடிப்படையில் இதனை திரையிட முடியாதென, அவர்களுக்கு தெரிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனை அடுத்து புங்குடுதீவில் கட்டப்படவுள்ள “இலங்கை அரசின் “காணியற்றோருக்கான வீடமைப்புத் திட்டம்” குறித்தும், “காணி புனரமைப்புக்கான சுவிஸ் ஒன்றியத்தின் பங்களிப்பு” குறித்தும் உரையாடப்பட்டது.

இதுகுறித்து இலங்கையில் இருந்து, “புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், வடமாகாண சபை ஆளுநரின் செயலாளருமான, திரு.இ.இளங்கோவன்” அவர்கள், தொலைபேசி மூலமாக நேரடியாகத் தொடர்பு கொண்டு விபரித்தார்.

இதனையடுத்து இதற்கான நிதி பங்களிப்பை வழங்குவதென ஏகமனதாக தீர்மானிக்கப் பட்டதுடன், இதுகுறித்து ஏனைய புலம்பெயர் ஒன்றியங்களிடமும் கேட்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை மேற்படிக் குடியேற்ற குடியிருப்புத் திட்டத்துக்கு, “புங்குடுதீவின் அரசியல் புரட்சியாளன், சமத்துவ வித்தகன்” திரு.மு.தளையசிங்கம் அவர்களின் ஞாபகர்த்தமாக “மு.த. குடியிருப்புத் திடடம்” என பெயர் வைக்க வேண்டுமென, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் திரு.சுவிஸ்ரஞ்சன்” விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொள்வதாகவும், திரு.இளங்கோவன் அவர்களினால் தெரியவிக்கப் பட்டது.

இதனையடுத்து, புங்குடுதீவு தபால் கந்தோரின் நிலை குறித்தும் திரு.தயாபரன் அவர்களினால் விபரிக்கப்பட்டது. இது குறித்தும் திரு.இளங்கோவன், திரு.விந்தன் கனகரெத்தினம் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பிரஸ்தாபிக்கப்பட்டது.

அவர்களும் மிகவிரைவில் இதுகுறித்த விபரங்களை தருவதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து, இதுகுறித்து சுவிஸ் ஒன்றியத்தால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கை குறித்து தீர்மானித்து, அறிவிப்பது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் கோரப்பட்ட கோரிக்கையான, “புங்குடுதீவு சுற்றுலாத் தளங்களில் ஒன்றான, பெருக்குமரம் அமைந்துள்ள, புளியடித்தீவு வீதியின் பராமரிப்புக்கான நிதியை” திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களின் வடமாகாணசபை சார்பில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கி உள்ளார் என்பதை, நேரடியாக தொலைபேசி மூலம் அறிய தந்தார்.

இதனையடுத்து, புங்குடுதீவு பானாவிடை சிவன் கோயில் சுவிஸ் நிர்வாகசபை சார்பாகக் கலந்து கொண்ட ஒன்றிய உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களான, “புங்குடுதீவு திருநாவுக்கரசு வித்தியாலயம் புனரமைப்பு, பானாவிடை சிவன் கோவில் வீதிக்கான அனுமதி மற்றும் புனரமைப்பு” குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து உடனடியாக, வடமாகாணசபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரெத்தினம் அவர்களிடம் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தொடர்பு கொண்டு வினவிய போது, அனைவரும் கேட்கக் கூடிய வகையில் தெளிவான பதில் தெரிவிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதேவேளை எவராயினும் தமது கோரிக்கைகளை “எழுத்து மூலம், ஒன்றியத்தின் நிர்வாக சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனத்” தெரிவிக்கப்பட்ட கருத்தும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதுடன், பானாவிடை சிவன் கோவில் நிர்வாகத்தின் கோரிக்கைகளும் எழுத்து மூலம் இருநாளில் சமர்ப்பிக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் புங்குடுதீவு ஊரதீவு சனசமூக நிலைய ஆசிரியர்களின் கொடுப்பனவு குறித்தும் விவாதிக்கப்பட்டு, அதனை இவ்வருட இறுதிவரையும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” செய்வதெனவும், அதேவேளை இதுகுறித்த நடவக்கைகளை உடனுக்குடன், அவர்கள் எழுத்து மூலம் “சுவிஸ் ஒன்றியத்துக்கு” தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தை” சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவரும், தற்போது கனடாவில் வதியும் திரு.திருவருட்ச்செல்வன் அம்பலவாணர் (ராசன்) அவர்கள், “தற்போதைய புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய நிர்வாகத்தின் செயல்பாடுகளை பாராட்டி” 2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான ஒன்றிய சந்தாப்பணமாக 250 கனடா டொலரை அனுப்பி வைத்தமை குறித்தும் பொருளாளர் திரு.குழந்தை அவர்களினால் தெரிவிக்கப்பட்டு அனைவராலும், ராசன் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வருட எட்டாம் மாதப் பகுதியில் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்” சார்பாக விளையாட்டுப் போட்டி நடாத்துவது குறித்து, வாதப் பிரதிவாதங்களை அடுத்து “விளையாட்டுப் போட்டியை நடத்துவதை” ஏகமனதாக அனைவரும் ஏற்றுக் கொண்டாலும்,

எப்படி நடாத்துவது? என்பது குறித்து கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து ஊர் மக்களையும் இணைத்து நடத்துவதென” பெரும்பான்மையோரின் கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது.

அதேபோல் இவ்வருட இறுதியில் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், அனைத்து மாணவ மாணவியர்களுக்கான “பொது அறிவுப் போட்டி”யை நடத்துவதென” ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் அடுத்த வருட ஆரம்பத்தில் (இரண்டாம் மாதத்துக்கு முன்பாக) 2018 க்குமான “வேரும் விழுதும்” விழாவை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதில் கலந்து கொள்ள சிலரை, விருந்தினராக அழைக்க (தமது செலவில்) தெரிவிக்கப்பட்ட கருத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2018 க்குமான “வேரும் விழுதும்” விழாவை சூரிச் “வரசித்தி மஹாலில்” நடாத்த திரு.கௌதமன், திரு.மணிவண்ணன் ஆகியோர் கலந்துரையாடி உள்ளதை தெரிவித்து, எப்படி நடாத்துவதென? கலந்துரையாடி தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின் இறுதியில், கருத்துத் தெரிவித்த “ஒன்றிய முக்கியஸ்த்தர்” திரு.இ.இரவீந்திரன் அவர்கள், “ஒன்றியத்தின் நிதியில் இல்லாமல், அரச நிதியில் இருந்து பல செயல்பாடுகளை புங்குடுதீவுக்கு செய்வதுக்கு ஊன்றுகோலாக இருக்கும் ஒன்றியத் தலைவர் ரஞ்சனுக்கும், இதனை செய்து தரும் திரு.இளங்கோவன், திரு, விந்தன் கனகரெத்தினம் ஆகியோருக்கும் தமது நன்றி” எனக் குறிப்பிட்ட போது, கலந்து கொண்ட எல்லோரும் கைதட்டி வரவேற்றுக் கொண்டனர்.

இன்றைய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” கலந்துரையாடலானது மிகவும் ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும், பிரயோசனமாகவும் இருந்ததுடன், சிறப்பம்சமாக இக்கலந்துரையாடலில் “சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு ரஞ்சன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வடமாகாணசபை ஆளுநரின் செயலாளர் திரு. இலடசுமணன் இளங்கோவன் அவர்களும், வடமாகாணசபை உறுப்பினர் திரு விந்தன் கனகரெத்தினம் அவர்களும், தொலைபேசி மூலம் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய கலந்துரையாடல் நிகழ்வுக்கு தமது வாசல்ஸ்த்தலத்தை ஒழுங்குபடுத்தி தந்ததுடன்.. சிற்றுண்டி, தேநீர் கொடுத்து உபசாரம் செய்த திரு.திருமதி. சுதா செல்வி குடும்பத்தினருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” நன்றி..

இவ்வண்ணம்…
திரு. செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: