Home / இன்றைய செய்திகள் / அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்)

அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்)

Kamalam (1)

அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்)
இன்று காலை சுவிஸ் லீஸ் மாவட்டத்தில் வதியும் திருமதி.வரதன் (கிளியக்கா) அவர்களின் தாயார் காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம்.

விழிநீர் அஞ்சலி…!

அமரர் வேலாயுதம் கமலம்
(10.07.1940 – புங்குடுதீவு) (13.05.2017 – சுவிஸ்)

நித்திய புன்னகை கொண்ட
எங்கள் கமலம் அம்மாவே,
நிம்மதியாய்த் தூங்கி விட்டாயா?!

எங்களை எல்லாம் “தம்பி, பிள்ளை” என்று
உரிமையோடு அழைத்தாயே..!
அந்த உன்னதமான இனிய குரலை
நாங்கள் எப்போ கேட்போம் அம்மா?!

வந்தாரை வரவேற்று வசந்தங்கள் நிழலாட,
வாழ்வாங்கு (வென்று) வாழ்ந்தாய் அம்மா..
இன்று சொந்தங்களின் கண்ணீரால்
நிலையாக நின்றாய் அம்மா…!

உறவுகள் உன்னை ஒளிவட்டமாக சூழ்ந்திருக்க,
வானில் தோன்றும் மின்னலாய்,
மறைந்து விட்டாயே அம்மா…

புங்கையின் ஊருக்காய் உழைத்த,
உங்கள் கருணை உள்ளம் – இனி
யாருக்கு வருமோ அம்மா…!
தெய்வப் பணி செய்து நின்ற,
எங்கள் கமலமம்மா நீங்கள்.,
எங்கள் விழி பார்த்திருந்த,
கண்கண்ட தெய்வமே..,

உதவும் கரங்களோடு,
உறவுக்கும், நட்புக்கும்
உறுதுணையாய் நின்றாயே அம்மா…!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆதிபராசக்தியை வேண்டுகிறோம் ஓம் சக்தி..!!

–புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: