Home / இன்றைய செய்திகள் / புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, ஊரதீவு “பாணாவிடை சிவன் ஆலயவீதி” புனரமைப்புக் குறித்த கலந்தாய்வு… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, ஊரதீவு “பாணாவிடை சிவன் ஆலயவீதி” புனரமைப்புக் குறித்த கலந்தாய்வு… (படங்கள்)

20171117_153625_001
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய வேண்டுகோளை ஏற்று, ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயவீதி புனரமைப்புக் குறித்த கலந்தாய்வு… (படங்கள்)

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய சுவிஸ் நாட்டு நிர்வாக சபை உறுப்பினர்களும், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகளுமான திரு.நிமலன், திரு.பாபு, திரு.கோபால், திரு.திகில் உட்பட மேலும் சிலர் (திரு. பகீரதன் -கனடா) நேரிலும், எழுத்து மூலமும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்திடம்” முன்வைத்த கோரிக்கையான, “புங்குடுதீவு ஊரதீவு பிரதான வீதியில் இருந்து, பாணாவிடை சிவன் ஆலயத்திற்குச் செல்லும் வீதி ஒன்றினைப் புனரமைத்துத் தரும்படியும், அது முடியாவிடில் அந்த வீதி புனரமைப்புக்கான அனுமதியைப் பெற்றுத் தருமாறும், அத்தோடு அதன் செலவு மதிப்பீட்டையும் பெற்றுத் தருமாறும்” கோரி இருந்தனர்.

இதேபோல் புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய இலங்கை நிர்வாக சபைத் தலைவர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்) அவர்களும் தனிப்பட்ட ரீதியில், சுவிஸ் ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் இக்கோரிக்கையை முன்வைத்து உரையாடி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” சார்பாக தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான திரு.என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம், பலமுறை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்து உரையாடியதை அடுத்து,

அதற்கமைவாக ஆலயத்திற்குச் செல்லும் வீதியினை யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.என். கனகரட்ணம் விந்தன் மற்றும் வேலணை பிரதேச சபை செயலாளர் திரு.A. குருநாதன், தொழில்நுட்ப உத்தியோகத்தார் திரு.K.மாதவன் ஆகியோர் 17.11.2017 அன்று சென்று பார்வையிட்டனர்.

மேற்படி வீதியின் தூரம் 1500 மீற்றர் எனவும், வீதியைப் புனரமைப்பதற்கான உத்தேச மதிப்பீடு 15 மில்லியன் (ஒன்றரைக் கோடி) எனவும் மதிப்பீட்டு செய்து தந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” சார்பாக தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள், யாழ். மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) யாழ். தீவுப்பகுதி அமைப்பாளருமான திரு.என். கனகரட்ணம் விந்தன் அவர்களிடம், “இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது, ஆலய நிர்வாக சபையாலோ, அப்பிரதேச மக்களாலோ உடனடியாக முடியாத காரியமெனவும், இதனையும் அரச நிதியின் மூலம் புனரமைப்பு செய்து தருமாறும், இதனை செய்து தந்தால் அப்பிரதேச மக்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்” எனும் கோரிக்கையை முன்வைத்து (தொலைபேசி மூலம்) சிலமணி நேரம் உரையாடி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, “மேற்படி ஆலய வீதியானது உள்ளூராட்சி வீதி என்பதினால், வடமாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் வீதி அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின், 2018 ம் ஆண்டுக்கான பாதீட்டில் (பட்ஜெட்) இந்த திட்டத்தையும் சேர்க்கும்படி கோருவேன் எனவும், என்னால் முடிந்தவரை இதற்க்காக முயற்சிப்பேன் எனவும்” வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரெட்ணம், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார் என்பதையும் மனமகிழ்வுடன் அறிய தருகிறோம். நன்றி..

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்”

21.11.2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: