Home / இன்றைய செய்திகள் / “விழிநீர் அஞ்சலி”.. திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார் (கோயில் ரவி)

“விழிநீர் அஞ்சலி”.. திரு இராசரத்தினம் ரவீந்திரகுமார் (கோயில் ரவி)

Kumar 2
திரு.இராசரத்தினம் ரவீந்திரகுமார்
(கோயில் ரவி- புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா)
பிறப்பு : 19 யூலை 1961 — இறப்பு : 28 நவம்பர் 2017
புங்குடுதீவு – சுவிஸ்

விழிநீர் அஞ்சலி…

ஊரை நேசித்த உறவு..,
உலகை விட்டு போய்விட்டது..
புங்குடுதீவு கண்ணகி அம்பாள்
அடியான் அமரராகியது இன்று..

வேர்விட்ட மண்ணில் விழுதுகள் பரப்பி..,
தாய் சொந்தங்களை எண்ணும்..
சரித்திரம் ஒன்று இறைவனிடம்
சரணாகதி அடைந்து விட்டது..

கலைப்பணியோடு,
சமயப்பணி.செய்யும்..
சாமான்ய மனிதம்,
மரணத்தை வென்றுள்ளது..

புங்கையின் கண்ணகி ஆலய..
பரம்பரை தர்மகர்த்தா,
“கோயில் ரவி” என அழைக்கும்,
ஊரை நேசிக்கும் உத்தமம்..
உலகில் விடை கேட்டு விட்டு..,
நீண்டதுயில் கொள்கின்றது..

பாதிவழி பயணம் இது..,
யாரை இங்கே நோகுவது?..
இறைவன் அழைத்த வேளையிலே..
இவர் பயணம் செல்கிறதோ?..
இறைவனோடு செல்லத்தானோ,
இந்த அவசரம் உங்களுக்கு?..

மரணமே வெக்கப்படும் -இந்த
மனிதனைக் கண்டு துக்கப்படும்..
புலம்பெயர் சொந்தமாய்
உலாவிடும் இதயம்..
தன் இயக்கத்தை..
நிறுத்தி விட்டு எங்கே தான்,
போகக்கூடும்?..

ஊரைவிட்டு போக மாட்டார்..,
உறவுகளை மறக்க மாட்டார்..,
மண்ணை எண்ணி வாழ்ந்த இதயம்
எங்களை விட்டு போகமாட்டார்…

போகும்வயது இல்லையானாலும்..,
இறைவன் அழைப்பை
தட்ட மாட்டார்..

அன்புமிகு “கோயில் ரவி”.அண்ணரே..
வணங்குகிறோம் பாதம் தன்னை..
இனியொரு காலம் வரும்..

உங்களைப்போல் யார் வருவார்?..
காத்திருப்போம் காலமெல்லாம்..,
உங்கள் வரவை எண்ணி
அஞ்சலிகள் பூக்களை கொண்டு..,
வணங்கிடுவோம் கண்ணீரோடு..
வழிநெடுக தூவும் மலர்..,
அஞ்சலிகள் பூக்கள் நண்பா..

இறுதியாக வணங்குகிறோம்
எங்கள் “கோயில் ரவி” எனும்,
புங்கை ஊரவனை.. ஓம் சாந்தி..!!

-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸர்லாந்து-

Kumar 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: