Home / இன்றைய செய்திகள் / புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்)

புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்)

001
புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்)

கடந்த வருட நடுப்பகுதியில் வேலணை பிரதேச செயலகம் ஊடாக, “கற்றாலை வளர்ப்பு” குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீவக பிரதேசம் எங்கும் தெரிவிக்கப்பட்டு, “கற்றாலை வளர்ப்புக்கு” முன்வருவோருக்கு தம்மால் முடிந்த உதவிகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதன் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவில் திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தமது காணியில் “கற்றாலை வளர்ப்பை” முன்னெடுத்து இருந்ததுடன், வேலணை பிரதேச செயலகம் ஊடாக முன்வைத்த கோரிக்கையின் நிமித்தம்,

இன்றையதினம் (09.01.2018) ஊரெழு “நியூ லங்கா பார்மில்” இருந்து மூவாயிரம் கற்றாலைக் கன்றுகள், வேலணை பிரதேச செயலகர் ஊடாக திருமதி.த.சுலோசனாம்பிகை அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மொத்தமாக ஒன்பதாயிரம் கற்றாலைக் கன்றுகள் வழங்குவதெனவும், அதன் முதல்கட்டமாக மூவாயிரம் கற்றாலைக் கன்றுகள் இன்று (09.01.2018) வழங்கி வைக்கப்பட்டதுடன், மிகுதி கற்றாலைக் கன்றுகள் விரைவில் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: