Home / இன்றைய செய்திகள் / புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..!

onriya logo
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் அவசரக் கலந்துரையாடல் குறித்த அறிவித்தல்..!

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ் நிர்வாக சபையானது நாளைக்காலை (02.04.2018) பத்து மணிக்கு, புர்கடோர்ப் மாநிலத்தில் அவசரமாக கூடுவதையும், இதில் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எவராயினும் கலந்து கொள்ள முடியும் என்பதையும் இதன்மூலம் பகிரங்கமாக அறிய தருகிறோம்.

மேற்படிக் கலந்துரையாடலில் தற்போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கையிருப்பில் உள்ள “நிதி” குறித்து தெளிவாக தீர்மானிக்க உள்ளதினால், நீங்களும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

**தவிர்க்க முடியாத காரணங்களினால், கலந்து கொள்ள முடியாவிடில், கூட்டம் நடைபெறும் போது (நாளைக்காலை (02.04.2018) பத்து மணிக்கு) தொலைபேசி மூலம் நேரடியாக உரையாடலாம். தொலைபேசி தொடர்பினை ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுடன் (077.9485214) மேற்கொள்ளவும். நன்றி…

இவ்வண்ணம்…
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து.

01.04.2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: