Home / இன்றைய செய்திகள் / பிறந்த மண்ணிற்குத் தேவையான, அனைத்து மீள்கட்டமைப்புக்களையும் செய்வதில் பெருமிதம்..! -ஐங்கரன், கனடா.

பிறந்த மண்ணிற்குத் தேவையான, அனைத்து மீள்கட்டமைப்புக்களையும் செய்வதில் பெருமிதம்..! -ஐங்கரன், கனடா.

33 copy
பெருமிதம்…!!!

பூவரசந்தோப்பில் இருந்து காலச்சூழலால் சிறகடித்துப் பறந்த எம்மூரவர்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று, அங்கே தமது வாழ்க்கையை அமைத்து வாழ்ந்து வந்த போதிலும், யுத்தத்தால் பாழடைந்த எம் மண்ணை மட்டும் மறக்காமல், தாங்கள் பிறந்த மண்ணிற்குத் தேவையான அனைத்து மீள்கட்டமைப்புக்களையும் செய்வதில் முனைப்புக் காட்டுவது நாம் அறிந்ததே.

அந்த வகையில், பல நாடுகளில் எம் மண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் சங்கங்களும் தங்களது கடமையாய் ஊர் நோக்கிய நற்காரியங்களைச் செய்வதில் ஊரானாக எனக்கு மனநிறைவு.

இவ்வாறான சங்கங்களில், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் செயற்பாடுகளும், ஒழிவுமறைவுகளற்ற கணக்குவழக்குகளும், திறம்பட உழைக்கும், ஊக்கம் கொடுக்கும் ஊர்ப்பற்றாளர்களும் என் பெருமதிப்புக்குள்ளானவர்கள்.

2018 பங்குனியில் தனது இருபத்தியோராவது அகவையைக் கொண்டாடும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” மற்றும் ஒன்றியத்தின் நிகழ்கால சபை உறுப்பினர்கள், குறிப்பாக தலைவர் சுவிஸ் ரஞ்சன் அண்ணன், மற்றும் சதா அண்ணன், குழந்தை அண்ணன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகை எனக்கு.

தொடர்ந்தும், ஊர்சார்ந்த அனைத்து விடயங்களிலும், வழமைபோல் ஒற்றுமையோடும், பொறுப்போடும் சேவையாற்றி, எம் மண்ணை உயரத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்னும் நம்பிக்கையுடன்,

மீண்டும் மீண்டும், நன்றிகளும் வாழ்த்துகளும்…

நன்றி,
அன்புடன்,
ஐங்கரன் கதிர்காமநாதன்
“படைப்பாளிகள் உலகம்”
கனடா.

மாசி 08, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: