Home / இன்றைய செய்திகள் / ​ஓடுதள விளக்கில் 227 பயணிகளுடன் மோதிய விமானம்!!

​ஓடுதள விளக்கில் 227 பயணிகளுடன் மோதிய விமானம்!!

1527436373-sri-lankan-arilines-landed-Lகொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் இன்று (27) மாலை கிளம்பிய UL 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் மோதியுள்ளது.

இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது.

இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: