Home / இன்றைய செய்திகள் / இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ள பிரதேசங்கள்!!

இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ள பிரதேசங்கள்!!

1527830272-tap-கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று 12 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (01) இரவு 07.00 மணிமுதல் நாளை காலை 07.00 மணிவரை இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு தற்காலிகமாக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேநேரம் பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகியநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: