Home / இன்றைய செய்திகள் / புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…!

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…!


புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த 05.05.2014 இல் “உத்தியோகபூர்வமாக” ஆரம்பிக்கப்பட்ட இணையத்திலும், முகநூலிலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இதேவேளை சிலருடைய கருத்துக்கள் மற்றும் அவர்களது எண்ணங்கள் எமக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வந்ததற்கு அமைவாக, நாம் எமது இணையத்தில் சில அத்தியாவசிய விடயங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். குறிப்பாக உலக ரீதியிலான நேரம், இலங்கை இந்திய பணமாற்று விடயம் போன்றவை ஆகும்.

இதேபோன்று சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய மேற்படி “உத்தியோகபூர்வ” இணையத்திலோ அல்லது முகநூலிலோ மேலும் பல மாற்றங்களை நாம் செய்ய வேண்டுமென கருதுபவர்கள், தங்களது கருத்துக்களை எமக்கு எழுதி அனுப்புமாறும் வேண்டி நின்றோம். அப்படி வந்த பலரது கருத்துக்களை “உள்வாங்கி” இன்றுமுதல் 02.06.2018 புதிய வடிவில் வடிவமைத்து உள்ளோம்.

அத்தோடு, உங்கள் இல்ல நிகழ்வுகள் (பிறந்த நாள், திருமணம், பூப்புனித நீராட்டு விழா) மற்றும் மரண அறிவித்தல், அஞ்சலி நிகழ்வுகள், வர்த்தக நிலைய விளம்பரங்கள் உட்பட வேறு எந்தவொரு பொது அறிவித்தல்களையும் நாம் கட்டணமின்றி எமது ஒன்றிய இணையத்திலும் முகநூலிலும் பிரசுரிக்க தயாராக உள்ளோம். ஆகவே அவற்றையும் உரிய ஆதாரங்களுடன் எமது ஒன்றிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். (**உங்கள் எந்தவொரு அறிவித்தல்கள் குறித்தும், “ஒன்றிய நிர்வாகசபை” முடிவெடுத்து, வெளியிடுவது குறித்து தீர்மானிக்கும்.)

மேலும், புங்குடுதீவின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பெரியோர்கள், மறைந்த எமது பெரியோர்கள், மூதாதையர் மற்றும் புங்குடுதீவுக்காகவும், புங்குடுதீவு மக்களுக்காகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டவர்கள் தொடர்பாகவும், புங்குடுதீவின் பன்னிரண்டு வட்டாரங்களிலும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், குறிப்பாக கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல் உட்பட முக்கிய ஸ்தலங்கள், பாடசாலைகள், பொது நிலையங்கள் பற்றியும் தங்களது ஆக்கங்களையும், கருத்துக்களையும், தரவுகளையும் எமக்கு எழுதி அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

மேற்குறித்த ஆக்கங்கள், கருத்துக்கள் மற்றும் தரவுகளை நாம் வட்டார ரீதியில் இணைத்துக் கொள்வதற்காவே கேட்கின்றோம்.

ஆகவே ஆக்கங்கள், கருத்துக்கள் மற்றும் தரவுகளை வெளிநாடுகள் மற்றும் இலங்கையிலுள்ள சகல புங்குடுதீவு மக்களிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பதோடு, அவற்றை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

இவ்வண்ணம்,
“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய”
நிர்வாக சபை சார்பில்,
சுவிஸ்ரஞ்சன். (தலைவர் & ஊடகப் பொறுப்பாளர்)

02.06.2018
pungudutheevuswiss@gmail.com

https://www.facebook.com/swisspungudutivu?fref=ts

www.swisspungudutivu.com

*** தொடர்புபட்ட செய்திக்கு…

புங்குடுதீவு மக்களோடு, நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்…!
http://www.swisspungudutivu.com/?p=45

http://www.swisspungudutivu.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: