Home / இன்றைய செய்திகள் / யுத்தம் மற்றும் சுனாமியை விட நாடு இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!!

யுத்தம் மற்றும் சுனாமியை விட நாடு இன்று மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!!

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமும் இன்றி வாழக்கூடிய ஒரு நிலை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பசி, மரண பயம், 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் மற்றும் சுனாமி பேரழிவுகளால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை விட அதிகமான துன்பங்களை அனுபவிக்ககூடிய ஒரு சூழ்நிலையை இன்றைய அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்நிலை சகல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: