Home / இன்றைய செய்திகள் / ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த நிதியமைச்சர் மங்கள!!

ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த நிதியமைச்சர் மங்கள!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஸ்ரீலங்கன் கேட்டரின் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நிதியமைச்சர் மங்கள சமரவீர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் சமயத்தில் உரிய அமைச்சர் என்ற வகையில் சாட்சியமளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவால் நேற்று அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட அமைச்சர், அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்படும் போது விமான சேவைகள் அமைச்சராக இருந்ததன் அடிப்படையில் வாக்குமுலம் வழங்க சென்றதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: