Home / இன்றைய செய்திகள் / விஜயகலாவின் உரை தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது!!

விஜயகலாவின் உரை தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது!!

விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குறிய அண்மைய உரை சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

விஜயகலா மகேஸ்வரன் அந்த சர்ச்சைக்குறிய உரையை ஆற்றிய போது அந்த இடத்தில் இருந்த அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 40 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.

அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை செய்வதற்காக சபாநாயகரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அந்த உரையின் சிங்கள மொழி பெயர்ப்பை அரச கரும மொழிகள் திணைக்களத்தில் கேட்டுள்ளதாகவும், அது இன்றைய தினத்திற்குள் கிடைத்து விடலாம் என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

அதன்படி இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: