Home / இன்றைய செய்திகள் / நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தினால் வட மாகாண சபையில் குழப்பம் எழாது!!

நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தினால் வட மாகாண சபையில் குழப்பம் எழாது!!

நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு அமுல்படுத்தாமல் இருப்பதுதான் குழப்பநிலைக்கு காரணமாக இருக்கின்றது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: