Home / இன்றைய செய்திகள் / சட்டவிரோத எத்தனோலுடன் மூன்று பேர் கைது!!

சட்டவிரோத எத்தனோலுடன் மூன்று பேர் கைது!!

சட்ட விரோத விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை எத்தனோலுடன் மூன்று சந்தேகநபர்கள் ஜாஎல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலால் திணைக்கள அதிகாரிகளால் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த எத்தனோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த எத்தனோல் பெரல்கள் இலங்கை சுங்கத்திடம் இருந்து சட்ட ரீதியாக ஏலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு அல்லாமல் வேறு பிரதேசத்திற்கு விநியோகத்திற்காக எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போதே கலால் திணைக்களத்தால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கிடைத்த தகவல் ஒன்றின் படி உளவாளி ஒருவரை அனுப்பி இந்த எத்தனோல் பெரல்கள் கைப்பற்றப்பட்டதாக கலால் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: