Home / இன்றைய செய்திகள் / குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ !!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ !!

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் இன்று காலை அங்கு ஆஜராகியிருந்தார்.

சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று பகல் 01.40 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: