Home / இன்றைய செய்திகள் / பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீதான விசாரணை CID இற்கு மாற்றம்!!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீதான விசாரணை CID இற்கு மாற்றம்!!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா தொடர்பிலான விசாரணையை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக நாலக டி சில்வா தொடர்பிலான விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பொலிஸ் விஷேட விசாரணைக் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் விஷேட விசாரணைப் பிரிவில் இருந்து அதனை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கண்டி பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததுடன், இதுதொடர்பான ஒலிப்பதிவுகளையும் வௌியிட்டிருந்தார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை வேறு பக்கம் திருப்பிவிடலாம் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறியதாக ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார கூறினார்.

அத்துடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் உட்பட மேலும் சில பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு எதிராகவும் நாலக சில்வா திட்டம் தீட்டுவது சம்பந்தமான ஒலிப்பதிவுகளை ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார அந்த ஊடக சந்திப்பில் வௌியிடப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குறித்த ஒலிப்பதிவுகள் மற்றும் நாலக சில்வா மீது விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: