Home / இன்றைய செய்திகள் / ஹொங்கொங்கை எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான்!!

ஹொங்கொங்கை எளிதாக வீழ்த்தியது பாகிஸ்தான்!!

ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் – ஹொங்கொங் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற ஹொங்கொங் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடிப்படையில் களமிறங்கிய ஹொங்கொங் அணி பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கியது.

இதனால் ஹொங்கொங் அணியினர் 35.1 ஓவரில் 116 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஐஜாஸ் கான் 27 ஓட்டமும், கின்சிட் ஷா 26 ஓட்டமும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 117 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பகர் சமான் 24 ஓட்டங்களிலும், பாபர் அசம் 33 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 23.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: