Home / இன்றைய செய்திகள் / பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு இன்று!!

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு இன்று!!

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று (17) இறுதி முடிவை எடுப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட் வேண்டும் என குறித்த சம்மேளனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

அதனடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் முடிவுக்கு வர அரசாங்கத்திற்கு 3 நாட்கள் வழங்குவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும் தங்களது பிரச்சினைகளுக்கு உரிய முடிவு கிடைக்காத காரணத்தினால் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக குறித்த சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரயஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: