Home / இன்றைய செய்திகள் / ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேற்றம்!!

ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேற்றம்!!

ஆசிய கிண்ணத்தை ஐந்து முறை கைப்பற்றிய இலங்கை அணியை, ஆப்கானிஸ்தான் அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

14 வது ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் 3 ஆவது ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷாஹ் 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு 05 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 250 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

அதன்படி இலங்கை அணி இந்த தொடரில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணி பெறும் 7 ஆவது தோல்வி இது என்பதுடன் ஆசிய கிண்ணத்தை 1986, 1997, 2004, 2006 மற்றும் 2014 என ஐந்து முறை இலங்கை அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: