Home / இன்றைய செய்திகள் / விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பலி!!

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பலி!!

அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (17) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரையும் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 28 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: