Home / இன்றைய செய்திகள் / “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

“புங்குடுதீவு சங்கிலிக் கிணறு”..

புங்குடுதீவு இறுப்பிட்டி வீதியில் புங்குடுதீவு நான்காம், ஐந்தாம் வட்டார மக்கள் பாவனைக்கு உகந்த “சங்கிலிக் கிணறு” எனும் இக்கிணறானது, இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்களான புங்குடுதீவு 10 ம் & 12 ம், வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி மாணிக்கவாசகர் பூலோகநாயகி அவர்கள், “பொதுமக்களின் தேவை கருதி, எல்லை விட்டு தரப்பட்டு உள்ளதாகவும், ஆகவே இதனை மீள்புனரமைத்து, புதிதாகக் கட்டிப் பொதுமக்களுக்கு உதவுமாறு” கோரி இருந்தனர். இவர்களின் சுவிஸில் உள்ள உறவுகளும் இந்த உறுதிமொழியை தந்து இருந்தனர்.

இதேபோல் இக்கிணறை “சுவிஸ் ஒன்றியம்” மீள புதிதாக கட்டி தரும்படியும், அதனை செய்தால் இக்கிணற்றை அண்டி உள்ள குடும்பங்கள் பிரயோசனப்படும் எனவும் பிரதேசசபை உறுப்பினர் திரு.க.வசந்தகுமார் ஊடாக, அப்பிரதேச மக்கள் கேட்டு இருந்தனர். அதேபோல் உலக மைய தலைவரான அண்ணாதம்பி எனும் திரு.பிள்ளைநாயகம் சதீஷ் அவர்களும் அப்பிரதேச மக்களின் “பொதுநன்மை” கருதி இக்கோரிக்கையை வைத்ததுடன், காணிக்கு சொந்தமானவர்களுடன் கதைத்து, “பொதுக்கிணறாக” பொதுமக்கள் பாவித்து வந்த அக்கிணறை, தொடர்ந்தும் “பொதுமக்களின் பாவனைக்காக” பாவிப்பதுக்கான உத்தரவாதத்தையும் பெற்றுத் தந்து இருந்தார்.

மேற்படிக் கிணற்று வேலைகள் குறித்து, ஒருமாதத்துக்கு முன்னர் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” நிர்வாக சபையானது, தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில் ஒன்றுகூடி, “மழை காலத்துக்கு முன்பாக, முடிந்தவரை கிணறுகளை புனரமைத்து புதிதாகக் கட்டி கொடுப்பதென” எடுத்த தீர்மானத்துக்கு அமைய இவ்வேலைகள் மூன்று வாரத்துக்கு முன்னர் ஆரம்பமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று வாரமாக நடைபெற்ற, “சங்கிலி பொதுக்கிணறு” புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் வேலைகள் நேற்றையதினம் (30.09.2018) நிறைவு பெற்று பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புங்குடுதீவு இறுப்பிட்டி பெரியபுலம் பிள்ளையார் கோவில் மற்றும் இறுப்பிட்டி பிட்டியம்பதி காளி கோவில் ஆகியவற்றின் மதகுருவான திரு.கருணாகர சர்மா அவர்களின் இறையாசியுடன், நேற்றையதினம் “பொதுமக்களிடம் கையளிக்கும் வைபவம்” சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், சமாதான நீதிவானும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவில் இப்பிரதேசத்து மக்களினால் வேலணை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட, பிரதேச சபை உறுப்பினரான திரு.வசந்தகுமார், இக்காணி&, கிணற்றை பொதுமக்களின் பாவனைக்கு தந்துதவிய திருமதி.மாணிக்கவாசகர் பூலோகநாயகி ஆகியோருடன் “கட்டிடக் கலைஞர்” திரு.வனோஜன் தலைமையிலான, அவர்களின் கட்டிட தொழிலாளர்கள், மற்றும் அப்பிரதேச பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இதேவேளை பொதுமக்களின் பாவனைக்காக, தமது காணியை விட்டுத் தந்த திரு.திருமதி மாணிக்கவாசகர் பூலோகநாயகி குடும்பத்துக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் ..

அத்துடன் எமது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய” நிர்வாகசபையின் வேண்டுகோளை ஏற்று, புங்குடுதீவு “சங்கிலி பொதுக்கிணறு” மீள்புனரமைத்து புதிதாக கிணற்றைக் கட்டிக் கொடுக்கும் வேலைத்திட்டம் முடிவுறும் வரை, மேற்படி கிணற்றுவேலை ஆரம்பமாகிய நாள்முதல் தினமும் பலதடவைகள் அங்குள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, மேற்படி வேலைகள் துரிதகதியில் முடிவுற, அயராது செயல்பட்ட “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும், ஒன்றிய உறுப்பினர்களான “சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களுக்கும்”, சுவிஸ் ஒன்றியத்தின் “நிர்வாக சபை” சார்பில் நன்றிகள் .

** ஒன்றியத்தின் நிதி நிலைமை..

புங்குடுதீவு பகுதிகளில் தொடர்ச்ச்சியாக “பொதுக் கிணறுகளை” புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் நடவடிக்கை “சுவிஸ் ஒன்றியத்தால்” மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஒன்றியத்தில் நிதி இல்லாத சூழ்நிலை குறித்தும் அறிவித்து இருந்தோம். இதுக்கு உடனடியாக “ஒன்றிய உறுப்பினர்களை” இவ்வருட சந்தாவை கட்டுமாறு கேட்பதெனவும் தீர்மானிக்கப் பட்டது.
(ஆகவே அன்பான சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளே உங்களின் இவ்வருட சந்தாவை உடன் செலுத்தி எமது “ஊர் நோக்கிய” செயற்பாட்டுக்கு கை கொடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.)

(புங்குடுதீவில் உள்ள சங்கிலிக் கிணறின் தற்போதைய நிலை குறித்த படங்களும் வீடியோக்களும் கீழே இணைக்கப்பட்டு உள்ளது)

படங்கள் & வீடியோ.. திரு.ஐ.சிவசாந்தன் (யாழ்ப்பாணம்)

“மக்கள் சேவையே மகேசன் சேவை”

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
01.10.2018

புங்குடுதீவு “சங்கிலிக் கிணற்றின்” புனரமைப்பு -20.09.2018

புங்குடுதீவு சங்கிலிக் கிணறு புனரமைப்பு -25.09.2018

புங்குடுதீவு சங்கிலிக் கிணறு, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு -30.09.2018

புங்குடுதீவில் “ஊரதீவு கிணறு, பொன்னன் கிணறு, நுனுக்கல் கிணறு” சுவிஸ் ஒன்றியத்தால் புனரமைத்த பின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: