Home / செய்திகள் / இந்திய செய்திகள் / ரூ. 91,000 கோடி கடனில் ஐ.எல்.& எப்.எஸ் : நிறுவனத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது மத்திய அரசு!!

ரூ. 91,000 கோடி கடனில் ஐ.எல்.& எப்.எஸ் : நிறுவனத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது மத்திய அரசு!!

ரூ. 91,000 கோடி கடன் சுமையில் சிக்கிய ஐ.எல்.& எப்.எஸ் நிறுவனத்தை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. உள்கட்டமைப்புத் துறையில் முக்கிய நிறுவனமான ஐ.எல்.& எப்.எஸ் கடனை திருப்பி அளிப்பதில் பல்வேறு முறைகேட்டுகளில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்தது.

இந்த நிறுவனம் குறுகிய கால கடனில் ரூ.1000 கோடி மோசடி செய்த விவகாரம் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதோடு மேலும் ரூ. 500 கோடி கடனை திரும்ப அளிப்பதிலும் மோசடி செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிறுவனம் தற்போது ரூ. 91,000 கோடி கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது.

சத்தியம் நிறுவனம் மோசடி வெளியானபிறகு அதை குழு அமைத்து அரசு கட்டுப்படுத்தியது போல ஐ.எல்.& எப்.எஸ் நிறுவனத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ஐ.எல்.& எப்.எஸ் நிறுவனத்தின் நிலை மேலும் மோசமாகாமல் தடுக்கவும், நிதி சந்தை நம்பிக்கையை மக்களிடையில் ஏற்படுத்தவும் உடனடி நடவடிக்கையாக மத்திய அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: